புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

தமிழ் அரசியல் கைதிகள், காணாமற்போனோர், காணிகள் விடுவிப்பு:

தீர்விற்குத் தடையாக 3 பிரதான காரணிகள்

l சமஷ்டியா, ஒற்றையாட்சியா அல்லது சுயாட்சியா என்பது கட்சிகளின் பிரச்சினையே
l அரசும், தமிழ்க் கட்சிகளும் இணையாவிடில் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும்

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்ட நிலையிலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதிருப்பதற்கு தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமற்போனோரது பிரச்சினை, மக்களது காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாமை ஆகிய மூன்று விடயங்களுமே பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. இதுவரை இவற்றுக்கு உரிய தீர்வினைக் காண முடியாதிருப்பதே இனப்பிரச்சினைத் தீர்வு காணல் விடயத்திற்குத் தடையாக அமைந்திருப்பதாக புத்திஜீவிகளும், மதத் தலைவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த மூன்று விடயங்களுக்கும் தீர்க்கமான முடிவினை அரசாங்கம் காணாதவிடத்து இனப்பிரச்சினைத் தீர்வு என்பது தள்ளிச் செல்லும் ஒரு விடயமாகவே இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முப்பது வருட கால யுத்தத்தின் பிடியிலிருந்து மீண்டுள்ள தமிழ் மக்களது உடனடித் தேவையாகவுள்ள இந்த மூன்று விடயங்களுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது...

விவரம்»


இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். (படம்-: சுதத் சில்வா)

 

கோவளம் வெளிச்ச வீட்டிற்கு

100 வயது! இற்றைவரை கண்டுகொள்ளப்படாத அவலம்!

கோவளம் வெளிச்ச வீடானது காரைநகரின் அளவிட முடியாத சொத்து. எந்தத் தீவுகளிலும் இல்லாத இந்தப் பழமையான வெளிச்சவீடு, நமது வெளிச்சவீட்டிற்குத் தனி அழகும் கம்பீரமும் உள்ளது எனலாம்.
அந்த வகையில் கோவளம் வெளிச்ச வீடானது 1916ஆம் ஆண்டு கட்டப்பெற்றது. இந்த ஆண்டு அதாவது 2016ம் ஆண்டு நூறு வயதாகின்றது. 

விவரம்»

Other links_________________________

விபுலமுனியின் விழி திறப்பது எப்போது ?

அகிலம் போற்றும் முத்தமிழ்வித்தகர் சுவாமிவிபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் நிருமாணிக்கப்பட்டுள்ள அடிகளாரின் திருவுருவச்சிலை கடந்த ஒருவருட காலமாக பூரணப்படுத்தப்படாமல் மூடியபடி உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்...

விவரம்»

இந்தியா நினைத்தால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு

சுஷ்மா கூறியதாக சம்பந்தன் தெரிவிப்பு

இலங்கையில் நிலவும் சகல பிரச்சினைகளுக்கும் இந்திய நினைத்தால் தீர்வு காண முடியுமென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சிவராஜ் தெரிவித்துள்ளார். நேற்றுத் தம்மைச் சந்தித்தபோது திருமதி சுஷ்மா இவ்வாறு கூறியதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கிடையிலான...

விவரம்»


அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்யிட் ராட் அல் - ஹுசைனை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்கிறார். (படம்: விமல் கருணாதிலக) 

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.