மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15
SUNDAY December 27, 2015

Print

 
விக்னேஸ்வரன் சம்பந்தன் கொழும்பில் திடீர் சந்திப்பு

விக்னேஸ்வரன் சம்பந்தன் கொழும்பில் திடீர் சந்திப்பு

பேசவேண்டியவை எல்லாம் சந்தித்துப் பேசிவிட்டோம்

 முதலமைச்சர் விக்னேஸ்வரனோடு பேச வேண்டிய சகல விடயங்கள் தொடர்பாகவும் தாம் பேசிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர  சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதுகுறித்தக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலதிக விபரங்களுக்கு பொறுத்திருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். 


பேசிய எல்லாவற்றையும் வெளியே கூற முடியாது

மக்களின் நன்மையே இருவருக்கும் முக்கியமானது. எனவே நாம் பல விடயங்களைப் பற்றிப் பேசியுள்ளோம். எதிர்காலத்திலும் எமது பேச்சுக்கள் தொடரும். விரைவில் மீண்டும் சந்தித்துப் பேசுவோம். நாம் சகல விடயங்களையும் வெளியே கூற முடியாது. ஆனால் மக்கள் நலன், விரைவான தீர்வுத் திட்டம் என்பவற்றில் எமது தரப்பு ஆர்வமாக உள்ளது.

அதற்காகவே நாம் பாடுபட்டு வருகிறோம். தலைமையைக் கைப்பற்றுவதோ அல்லது கட்சியை உடைப்பதோ எம்மில் எவரதும் நோக்கமல்ல எனச் சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]