மன்மத வருடம் கார்த்திகை மாதம் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 23
SUNDAY December 13, 2015

Print

 
மக்களின் கருத்தறிந்தே எல்லைகள் நிர்ணயம்

மக்களின் கருத்தறிந்தே எல்லைகள் நிர்ணயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தேர்தல் தொகுதி எல்லைகளை அரசியல் கட்சிகளின் வெற்றியை எதிர்பார்த்து நிர்ணயம் செய்யாது பொதுமக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்படல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். எல்லை நிர்ணயக் குழுவானது தனது பொறுப்புக்களைப் பக்கச்  சார்பின்றியும் நியாயமாகவும் நிறைவேற்ற வேண்டும். முன்பிருந்த குழுமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், புதிய குழுவின்மீது சுமத்தப்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்;.

குறுகிய கால எல்லையினுள் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எதிர்பார்க்கப்படும் பணியினை உரியவாறு மேற்கொள்ள முடியாதபோது அது பயனளிக்காது. போதியளவு காலம் ஒதுக்கப்பட்டு இந்நடவடிக்கைகள் சரியான முறையில் உரியவாறு மேற்கொள்ளப்படவேண்டும்.

நீண்டகாலமாக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டாகவும் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும் காணப்படுகின்ற வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்போது பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும்.

பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிக் கலந்துரையாடி, தேவையான சட்ட விதிகளைத் தயாரிக்கும் நடவடிக்கையினையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]