மன்மத வருடம் கார்த்திகை மாதம் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 23
SUNDAY December 13, 2015

Print

 
முஜிபுருக்கு மரண அச்சுறுத்தல் சபாநாயகர் கரு அதிரடி உத்தரவு

முஜிபுருக்கு மரண அச்சுறுத்தல் சபாநாயகர் கரு அதிரடி உத்தரவு

 இரு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமானுக்கு வெள்ளியன்று பாராளுமன்றத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் சிறப்புரிமை குழுவிற்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் பாராளுமன்றத்தில் நேற்றுச் சிறப்புரிமை தொடர்பான கேள்வியொன்றை எழுப்பினார்.

முஜிபுருக்கு...

இதையடுத்தே சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் வெள்ளியன்று பாராளுமன்றத்தில் வசிம் தாஜுடீன் கொலை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முயற்சித்த வேளையில் பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் இரு வேறு சந்தர்ப்பங்களில் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மரண அச்சுறுத்தல் எதிர் தரப்பிலிருந்தே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய, விசாரணைகளை நடாத்துவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்தே சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் வெள்ளியன்று பாராளுமன்றத்தில் வசிம் தாஜுடீன் கொலை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முயற்சித்த வேளையில் பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் இரு வேறு சந்தர்ப்பங்களில் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மரண அச்சுறுத்தல் எதிர் தரப்பிலிருந்தே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய, விசாரணைகளை நடாத்துவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]