மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
கண்ணை கவனியுங்கள்

கண்ணை கவனியுங்கள்

நாம் உண்ணும் உணவில் இருந்து கண் பாதுகாக்கப்படுகின்றது. ஒமேகா3, லூயூடின், ஸிங்க், விற்றமின் ஏ, சி நிறைந்த உணவுகள் கண்பார்வைத் திறன் குறைப்பாட்டினை நீக்கும்.

கீரை வகைகள், பச்சை காய்கறிகள், மீன், முட்டை, விதை வகைகள் மற்றும் சைவ புரத வகைகள், ஆரஞ்சு மற்றும் விற்றமின் சி நிறைந்த பழங்கள் போன்ற உணவுகளை உண்ணுவதன் மூலம் கண்ணுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.

வெய்யிலில் செல்லும் போது, கண்களை பாதுகாக்க தரமான கறுப்பு கண்ணாடிகளை பயன்படுத்துங்கள். தொழிற்சாலைகளில் நெருப்பு, மின்சாரம் அருகில் வேலை செய்யும் போது அதற்கேற்ற கண்ணாடிகளை அணியுங்கள்.

கணனி முன் வைத்த கண் எடுக்காது பல மணி நேரம் அமர்ந்திருப்பதை தவிர்த்து 20 நிமிடங்களுக்கொரு ஒரு முறை ஒரு நிமிடம் சுமார் 20 அடி தள்ளி இருக்கும் எதனை யாவது சாதாரணமாகப் பாருங்கள்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடம் கண்களை கைகளால் பொத்தி ஓய்வு கொடுங்கள்.

கண்களை 2 வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து, கண்ணாடியை 5 வருடத்திற்கு ஒரு முறைசெக் செய்து கொள்ளுங்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]