மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்?

என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்?

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார். தலைப்பு ‘கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிaர்கள்” என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர், ‘என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

‘என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள்’ என்று கொடுத்தார். அதில், “கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும். அதைப் போல வாழ வேண்டும். எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர். நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும். அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு, கவனத்தை போல் நானும் பெற வேண்டும்.

அப்பா வேலை முடிந்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும். அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்ப வேண்டும். என்னை விலக்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிட வேண்டும். என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிட வேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும் என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை. நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்.

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

“அந்த குழந்தை பாவம்? இந்தக் குழந்தையை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?”

ஆசிரியை தன் கணவரிடன் கூறினார்,

“இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்”

எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]