மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
மில்லியன் கணக்கில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு

மில்லியன் கணக்கில் கோடீஸ்வரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு

ஒரு சிலரை இலக்கு வைத்து நாம் செயற்படவில்லை: நிதியமைச்சர் பட்ஜட் உரை

இந்த வரவு செலவுத் திட்டம் ஒருசில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனை நோக்கமாகக் கொள்ளவில்லை. மாறாக, மில்லியன் கோடீஸ்வரர்களை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறிய தாவது, வானவில் போன்று பிரகாசிக்கக் கூடிய பொருளாதாரச் சேமிப்புள்ள அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக எமது நாட்டை மாற்றியமைப்பதே எமது கனவாகும்.

எமது தேசம் நற்குணத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் செழிப்பான ஒரு நாடாக மிளர வேண்டும். எமது எதிர்காலச் சந்ததியினர் அர்ப்பணிப்புக்களின் விளைவுகளை அனுபவிக்கக் கூடிய வகையில் நாம் பொருளாதாரச் சுதந்திரமொன்றினை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப் பாகும். மேலும் நடுத்தர வருமானப் பொருளா தாரமொன்றினை நோக்கி மாற்றமடைவதற்கான குறிக்கோள்களுடன் குறுகிய, நடுத்தர,

மற்றும் நீண்ட கால உபாயங்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அபிவிருத்திச் சவால் களை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட இலக்குகளையும். குறிக்கோள்களையும் அடைவதே எமது எதிர்பார்ப்பாகும். நாம் ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதனை நோக்கமாகக் கொள்ளவில்லை. மில்லியன் கோடீஸ்வரர் களை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்துவதே எமது நோக்க மாகும்.

பொருளாதார முகாமைத்துவத்தில் எதிர்வு கூற முடியாத ஒழுங்கற்ற பொருளாதாரக் கொள்கைகளும், ஒழுங்கற்ற நடை முறைகளும் முன்னைய ராஜபக்ஷ ஆட்சிக் காலப் பகுதியில் காணக்கூடியதாக இருந்ததோடு முன்மொழியப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களும், ஒழுங்கான பொருளாதாரக் கொள்கைகளும் எமது அரசாங்கத்தினை அவ்வா றான எதிர்மறையான செயல்முறை களிலிருந்து நகர்வதற்கு உதவின.

தற்போது பதவியிலுள்ள பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கக் காலப் பகுதியில் இவ்வெதிர் மறையான போக்கினை மாற்றியமைத்து மீண்டும் ஒரு முறை சாதகமான வளர்ச்சியொன்றிற்கு வித்திட்டது. இவ்வரசாங்கத்தின் தொலைநோக்கு பல்வேறு தொழில்முயற்சி யாளர்களுக்கு விசேட வாய்ப்புக்களை வழங்கியதோடு புதிய முதலீடுகள் பலவற்றை பொருளாதாரத்திற்கு நல்லாட்சியுடனும். வெளிப்படைத் தன்மையுடன் ஏற்படுத்திக் கொடுத்தது. ஏற்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் பல்வேறு உயர் நன்மைகளை மக்களுக்கு வழங்கியதோடு மீண்டும் ஒரு முறை இலங்கையின் பொருளா தாரத்தை சாதகமான வளர்ச்சிப் போக்கிற்கு எடுத்துச் சென்றது.

இவ்வாறான தைரியமான அணுகு முறைக ளின் ஊடாக பின்தங்கிய பொருளாதா ரத்திற்கு புதிய உத்வேக மென்றினை வழங்கியதோடு கடந்த ஆட்சிக் காலத்தின் போதான மந்தப் போக்குடைய பொருளாதார நடவடிக் கைகளை சிறந்த நிலைமைக்கு துரிதமாக மாற்றுவதற்கு ஒரு புதிய அணுகுமுறை ஈடுபடுத்தப்பட்டது.

2005 இலிருந்து 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியானது வரலாற்றில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டாலும் அவைகளின் அடைதலானது சாதாரண மட்டத்தையும் அடையவில்லை.

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுடன் மூன்று தசாப்தங்களாக நாட்டில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையுடன் கூடிய அனைத்துத் தரப்பினராலும் கண்டிக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக் கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கை மக்கள் அனைவரும் செழிப்பான மற்றும் சந்தோஷமானதொரு எதிர்காலத்தை எதிர்பார்த்தனர்.

யுத்தத்தின் உச்ச கட்டத்தில் நாட்டு மக்களுக்கு தமது வயிற்றைக் கட்டிக்கொள்ளும்படி வேண்டிக் கொண்ட ஆட்சியாளர்கள் கட்டை அவிழ்ப்பதற்கு எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை யென்பது தெளிவு. அதிகரித்து வந்த கடன் சுமையின் காரணமாக நாட்டின் பொருளாதாரமானது நாளுக்கு நாள் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆட்சியாளர்களின் கையாட்களினால் விளம்பரப்படுத்தப்பட்ட கோயபல்ஸ் நியாயத்தினூடாக பொருளா தாரச் சொல்லாட்சிகள் முன்னிலைப்ப டுத்தப்பட்டதுமல்லாமல், ஆட்சியாளர்களின் புகழ்பாடுபவர்களின் மூலம் இலங்கை எனும் நாடு முன்நோக்கிச் செல்ல முடியாது படு பாதாளத்துக்கே சென்றது. எவ்வாறாயினும். ஜனவரி 8 ஆம் திகதி இக்குமிழி வெடித்து மாற்றத்தை ஏற்படுத்தியது.

2009 ஆம் ஆண்டிற்குப் பிந்திய காலப் பகுதியானது நாட்டில் அனைத்து மக்களிடத்திலும் இன, மத, மற்றும் சாதி வேறுபாடுகள் அகன்று மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அந்நியோன்ய நம்பிக்கை மற்றும் நட்புடன் கூடிய ஒரு காலப் பகுதியாக எழுச்சி பெறும் என எதிர்பார்க் கப்பட்டது. அத்துடன் பொருளாதார மீட்சியும் எதிர்வு கூறப்பட்டது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]