மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவினால் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு பொருளாதார அபிவிருத்தி யோசனைகள் முன் வைக்கப்பட்டதோடு வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

காஸ், கடலை, பருப்பு, ரின் மீன், பால்மா, உருளைக்கிழங்கு, மண்ணெ ண்ணெய், கருவாடு அடங்கலான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது வாழ்க்கைச் செலவை கணிச மானளவு குறைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

அதேநேரம் வரி முறைகளில் இருந்துவந்த சிக்கல்களைத் தளர்த்தி ஏற்றுமதி, இறக்குமதி பொருளாதாரத்துக்கும் இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளதென பொருளாதார நிபுணர்கள் தெரி விக்கின்றனர்.

நிதிய மைச்சரினால் சமர்ப் பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட் டத்தின் சாராம்சங்கள்:

* கடவுச்சீட்டு ஒருநாள் சேவை 7 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு.

* மீன் வலைகளுக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு.

* தேயிலை, இறப்பர் துறைகளுக்கு சலுகைகளை வழங்குவதற்காக பெருந்தோட்ட கம்பனிகளுக்கு 02 வருட வரி விதிப்பு.

* 200 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் பொருளாதார வலயம்.

* இறக்குமதி செய்யப்படும் ஆபரணங்களுக்கு 10 வீத செஸ்வரி.

* அரச காணிகளில் முறையற்ற கொடுக்கல் வாங்கல்களை ஒழிக்கும் நோக்கில் காணி வங்கியொன்று உருவாக்கப்படும்.

* சேரிவாழ் மக்களுக்கு ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்.

* அரசாங்கத்தின் சிரேஷ்ட ஊழியர்களுக்காக 05 ஆயிரம் வீடுகள்.

* வீடுகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வரிச்சலுகை வழங்கப்படும்.

* புதிய நகர மண்டபத்திற்கு அருகில் 07 ஆயிரம் இருக்கை வசதிகளைக் கொண்ட கண்காட்சி கூடம் அமைக்கப்படும்.

* கொழும்பு டி.ஆர். விஜயவர்தன மாவத்தையை உள்ளடக்கியதாக 03 இலட்சம் சதுர அடிகளைக் கொண்ட சர்வதேச நிதி மையம் அமைக்கப்படும்.

r நகை அடவுபிடிக்கும் வியாபாரத்திற்கான பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

* சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலைக்கு அனுமதிக்கும் பிள்ளைகள் பெயரில் 250 ரூபாவை வைப்பிலிட்டு ஒரு வங்கி கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.

* அனைத்து ஆசிரியர்களும் தொழிலில் இணைந்து 05 வருடத்திற்குள் 02 வருட முழு நேர பயிற்சி நெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.

* 2016 இன் முடிவில் அனைத்து பாடசாலைகளுக்கும் குழாய் நீர், மலசலகூடம், மின்சார வசதிகள் வழங்கப்படும்.

* பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

* புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் நூல்களுக்கான இறக்குமதி தீர்வை நீக்கப்படும்.

* ‘மஹாபொல பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் புதிதாக பல்கலைக்கழகமொன்று தாபிக்கப்படும்.

* கிளிநொச்சியில் பொறியியல் பீடமும் வவுனியாவில் விவசாய பீடமும் அமைக்கப்படும்.

* பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிக்கப்படும்.

* கீரி சம்பா 41 ரூபா, நாட்டரிசி 38 ரூபாவுக்கு நெல் உத்தரவாத விலை.

* 44 ஆயிரம் மெற்றிக்தொன் மேலதிக அரிசி கையிருப்பு, சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்க முடிவு.

* பழம், காய்கறி, கைத்தொழில் கடன் வட்டிக்கு 50 வீத சலுகை.

* தகரத்தில் அடைக்கும் டின் மீன் 125 ரூபா சலுகை விலையில்.

* மீள்பயிர்ச் செய்கை செய்யும் பெருந்தோட்ட கம்பனிகளின் குத்தகை காலம் 50 வருடத்தினால் நீடிப்பு

* 2500 கொத்தணி கிராமங்களை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு கிராமத்திற்கும் 1.5 மில்லியன் ரூபா நிதி.

* ஒரு ஹெக்டயரில் பயிரிட 25 ஆயிரம் ரூபா பசளை நிவாரணம்.

* ஆழ்கடலில் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்க தனியார் துறைக்கு அழைப்பு.

* பல்கலைக்கழக மாணவர்களுக்கு 3 வருட வட்டியில்லா மடி கணனி கடன்: பல்கலைக்கழகங்களுக்கு வைபை வசதி.

* சிறுநீரக நோய் உள்ள பிரதேசங்களில் ஆயிரம் சிறு நீரக நிலையங்கள் அமைக்க 6500 மில்லியன் ஒதுக்கீடு.

* 75 வயது வரையான மூத்த பிரஜைகளுக்கு மருத்துவக் காப்புறுதி.

* 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து வசதி.

* திகன, பதுளை, புத்தளத்தில் உள்ளூர் விமான சேவைகள் ஆரம்பிப்பு.

* வர்த்தக விமானங்கள் மீது 20 வீத மேலதிக சேவை அறவீடு.

* மிகின்லங்கா குறைகட்டண விமான சேவையாக மாற்றல்.

* அரச துறை பதவிகள் 5 வருடத்துக்கொருமுறை மீளாய்வு.

* ஜுலை வேலை பகிஷ்கரிப்பாளர்களுக்கு 250,000 ரூபா கொடுப்பனவு

* மோட்டார் சைக்கிளுக்கு முற்பணம் வழங்கிய சகல அரச ஊழியர்களுக்கும் அவற்றை வழங்க நடவடிக்கை.

* அரச ஊழியர்களுக்கு வழங்கிய 10 ஆயிரம் ரூபா கொடுப் பனவை ஓய்வூதியத்தில் இணைப்பது குறித்து ஆராய்வு.

* 2016 ஜனவரி முதல் புதிதாக அரச துறைக்கு இணையும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.

* எரிபொருளில் இருந்து மின்சாரத்திற்கு மாற்றும் ஆட்டோக்களுக்காக 150,000 ரூபா சலுகை கடன்.

* இயற்கை அனர்த்தங்களுக்காக காப்புறுதித் திட்டம்.

* பெரிய வெங்காய விசேட வரி 25 ரூபாவினால் குறைப்பு.

* வெங்காயம் விலை 85 - 95 ரூபாவாக குறையும்.

* கட்டக்கருவாடு 1100 ரூபா, சாலக்கருவாடு 425 ரூபா சலுகை விலை.

* கடலை விலை 169 ரூபாவாக குறைப்பு.

* பங்கு கொடுக்கல், வாங்கல் அறவீடு நிர்மாண கைத்தொழில் உத்தரவாத நிதிய அறவீடு, சொகுசு மற்றும் அரைச்சொகுசு மோட்டார் வாகன வரி, சுற்றுலா அபிவிருத்தி அறவீடு வரிகள் நீக்கம்.

* முதியோரின் நிரந்தர வைப்பிற்கு ஜனவரி முதல் 2.5 வீத நிறுத்தி வைப்பு வரி நீக்கம்.

* வியாபார நோக்க மோட்டார் வாகனங்களுக்கு அனுமதிப்பத்திர கட்டணம் அறவீடு.

* சலுகை அடிப்படையிலான வாகன அனுமதிப்பத்திர திட்டம்.

* 2016 ஜனவரிக்கு பின் அரச சேவையில் இணைவோருக்கு ஏற்புடையதாகாது.

* கடனடிப்படைகளுக்கான 1.5 வீத முத்திரை தீர்வு நீக்கம்.

* மாளிகை வரி தொடர்ந்து அமுல்.

* வடிசாலைக்கான வருடாந்த தயாரிப்பு உரிம கட்டணம் 150 மில்லியனாக அதிகரிப்பு.

* வதிவிட விசாவுக்கு 250,000 டொலர் கட்டணம்.

* கம்பனி பதிவுக்கட்டணம் 7500 ரூபா.

* வீதி விபத்துக்களால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் இழப்புக்கான நஷ்ஈடு 10 ஆயிரமாக அதிகரிப்பு.

* அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்த 10,000 மில்லியன் ஒதுக்கீடு.

* சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி மானியம் வழங்க 1500 மில்லியன் ஒதுக்கீடு.

* பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க 3000 மில்லியன் ரூபா.

* வடக்கு, கிழக்கு நெடுஞ்சாலை அபிவிருத்திக்கு 14,000 மில்லியன் ரூபா.

* தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபா.

* இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரூபா.

* அடுத்த வருட ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் வருடாந்த இரத்தினக்கல் ஏலம்.

* அனைத்து விடுதிகளையும் அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டு வருவது கட்டாயம்.

* 10 வருடத்திற்கு மேல் அரச காணியில் வாழ்ந்தவர்களுக்கும் தோட்ட மக்களுக்கும் காணி உறுதி.

* தமிழ் நாடகங்களுக்கும், படங்களுக்கும் வழங்கு சலுகை ஆங்கில நாடகங்களுக்கும் வழங்க நடவடிக்கை.

* எதனோலுக்கான வரி அதிகரிப்பு.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]