மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
அது இரகசிய சித்திரவதை முகாமல்ல சரணடைந்த புலிகள் தங்கியிருந்த இடம்

அது இரகசிய சித்திரவதை முகாமல்ல சரணடைந்த புலிகள் தங்கியிருந்த இடம்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த விளக்கம்

இரகசிய சித்திரவதை முகாம் எதுவும் இருக்கவில்லை என முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாக ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் இரகசிய சித்திரவதை முகாம் எதுவும் இருக்கலில்லை என முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் திருகோணமலையிலோ அல்லது வேறு இடங்களிலோ சித்திரவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை. சித்திரவதைக் கூடங்களை நடாத்த வேண்டிய அவசியம் எதுவும் இருக்க வில்லை.

தமிbழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த தரப்பினர் படையினருடன் இணைந்து கொண்டனர். அவ்வாறா னவர்களே திருகோணமலை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அரச படையினரிடம் சரணடைந்த புலிப் போராளிகளை பயன்படுத்தப்படாத கட்டடங்களில் தங்க வைத்திருந்தோம். படையினர் சித்திரவதை கூடங்களை அமைத்து எவரையும் சித்திரவதை செய்யவில்லை எனவும் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]