புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
பிரசாந்தி நிலையம் பக்தர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் பணிமனை

பிரசாந்தி நிலையம் பக்தர்களுக்கு புத்துணர்ச்சியட்டும் பணிமனை

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் ஜனனதினம் நாளை

நீங்கள் பிரசாந்தி நிலையத்திற்கு வரும்போது கார்கள் பணிமனைக்கு சீர்செய்யப்பட வருவது போன்றதே. பழுதடைந்த பாகங்கள் யாவும் சீர் செய்யப்பட்டு சரியாக இயங்காத போல்ட்டு நட்டுக்கள் யாவும் மாற்றப்பட்டு, எஞ்சின் சுத்தப் படுத்தப்பட்டு ஒவ்வொரு உறுப்பும் புதுப் பிக்கப்பட்டு புதிய வர்ணம் தீட்டப்பட்டு தொந்தரவின்றி நீண்ட பயணங்களை தொடருவதற்குத் தயாரான நிலையில் கார்கள் வெளியே அனுப்பப்படுவது போல் நீங்களும் இங்கிருந்து திரும்பும் போது புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்து டனும் தெம்புடனும் உங்கள் வாழ்க் கைப் பயணத்தை தொடர திடசித்தத்து டனே திரும்ப வேண்டும். உதாரணமாக நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்து மக் கள் பிரசாந்தி நிலையத்திங்கு வருகை தருகிறார்கள்.

மனிதனின் வாழ்வும், உலகமும் நிலையற்றவை. இளமையும் செல்வமும் நிலையற்றவை. அவனது குடும்பமும் நண்பர்களின் உதவியும் குறுகிய காலத் தவை. சத்தியமும் புகழுமே நிலையா னவை. ஒருவன் நல்ல மனைவியைப் பெற்றிருக்கலாம். கீழ்ப்படியும் வேலைக்கா ரர்கள் இருக்கலாம். நல்ல நண்பர்களின் கூட்டுறவு இருக்கலாம். உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கலாம். புகழ்பெற்ற உயர்ந்த கவிஞனாக இருக்கலாம். பேரரசனாகவே கூட இருக்கலாம். இவையெல்லாம் இருந் தும் கடவுளிடம் அன்பில்லாதவனுடைய வாழ்க்கை வீணானதாகும்.

உன்னுடைய கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் என்ன என்று தீர ஆலோசிக்க வேண்டும். போனது போனதுதான் திரும்ப வராது. கடந்து போன காலமும் ஓடிப்போன நதியின் வெள்ளமும் திரும்பக் கிடைக்குமா இல்லை. எப்போது என்ன நடக்குமோ தெரியாது. நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது இப்போதையதைப் பற்றித்தான். இதை விட்டு விட்டு நடந் தவையையும் நடக்கப் போவதையும் பற்றிக் கவலைப்படுவதும் தான் துன் பங்களுக்குக் காரணம். பெற்ற உதவி யையெல்லாம் மறந்து சில மனிதர்கள் வாழ்கிறார்கள். அதனால் செய்நன்றியை எந்நாளும் மறக்கக் கூடாது.

நம்மால் முடியவில்லையே என்று நாம் கவலைப்பட வேண்டாம். ஏமாற்றம டைய வேண்டாம். முதலில் உன்னிடம் உள்ள திறமையில் நம்பிக்கையை வளர்த் துக்கொள் சந்தேக மனம் கொண்டவர்கள் எந்தச் சிறு முயற்சியிலும் முன்னேற முடியாது.

மனதிலுள்ள அழுக்கை நீக்க தூய்மையான புனிதமான எண்ணங்களை மனதில் கொள்ள வேண்டும். பணக்காரன் என்று கூறுகின்றோமே, யார் மிகுந்த செல்வந்தன்? யார் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறானோ அவனே செல்வந்தன். ஆசைகள் மிகுதியாக உள்ளவனே மிகுந்த ஏழை. ஆகவே, மனிதர்கள் ஆசைக்கு ஒரு வரம்பு வைத்துக்கொள்ள வேண்டும். நித்தியமான செல்வம் எது? அன்பு என்ற செல்வம். ஆனந்தம் என்ற செல்வம், அன்பில்லாது நீங்கள் எது செய்தாலும் அது வீண். இத்தகைய அருமையானவற்றை பகவான் சத்ய சாயிபாபா மக்களுக்கு அருளியிருக் கிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.