மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
கடவுளும் மழை வெள்ளமும்

கடவுளும் மழை வெள்ளமும்

அந்த ஊர் மழை வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது. அவர் ஒரு தீவிர பக்திமான். இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டில் தனியே வசித்தார். தெருவில் வழிந்த வெள்ளம் வீடுகளில் புக ஆரம்பித்ததும் மக்கள் வீடுகளைக் காலி செய்யலாயினர். இவரையும் வரும்படி அழைக்க இவர் மறுத்துவிட்டார். நான் கடவுளை நம்புகிறேன் அவர் என்னைக் காப்பார் என்று பதில் தந்தார்.

கீழ் மாடி தண்ணீரில் மூழ்கவே முதல் மாடிக்கு சென்றார். மழை விட்டபாடில்லை. வெள்ளம் பெருகிக் கொண்டே இருந்தது. படகில் ஒரு மனிதர் வந்து இவரைத் தன்னோடு வரும்படி அழைத்தார். மறுத்த இவர் நான் கடவுளை நம்புகிறேன் அவர் என்னைக் கட்டாயம் காப்பார் என்றே பதில் சொன்னார்.

வெள்ளம் இப்போது முதல் மாடிக்கு வந்து விட்டது. ஆகவே இவர் இரண்டாம் மாடிக்கு சென்ற விட்டார். மழை பெய்து கொண்டே இருந்தது ஹெலிகொப்டெரில் ஒரு மனிதன் வந்து இவரைத் தன்னோடு வரும்படி அழைத்தான். அவனுக்கும் முன்பு சொன்ன அதே பதிலையே சொன்னார். கடவுள் எப்படியும் தன்னைக் காப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஆனால் இரண்டாம் மாடிக்கும் வெள்ளம் வரவே வேறு வழியில்லாது நீரில் மூழ்கி அவர் இறந்து போனார்.

இறந்தவர் நேரே சொர்க்கம் போனார். அங்கு கடவுளைக் கண்டார். கடவுளே நீ எப்படியும் என்னைக் காப்பாய் என்று நம்பி இருந்தேனே, இப்படி கைவிட்டு விட்டாயே என்று குறைபட்டார். அதற்கு கடவுள், அப்படியா சொல்கிறாய்? படகில் ஒருவன் வந்து உன்னை அழைத்தானா? ஆமாம். நீ மறுத்தாயா? ஆமாம். ஹெலிகொப்டெரில் ஒருவன் வந்து உன்னை அழைத்தானா? ஆமாம். நீ மறுத்தாயா? ஆமாம். அதெல்லாம் யார் என்று நீ நினைத்தாய்? எல்லாவற்றிற்கும் நீ மறுத்தால் நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டார் கடவுள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]