மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
புலம்பெயர் நாடுகளின் ஒற்றுமை 'செவிடன் காதில் ஊதிய சங்காகியது'

புலம்பெயர் நாடுகளின் ஒற்றுமை 'செவிடன் காதில் ஊதிய சங்காகியது'

உலகில் ஒவ்வொரு இனமக்களிடையே ஒற்றுமையின்மை உள்ளது என்பது பொதுவான உண்மை. ஆனால், இலங்கைத் தீவில் விசேடமாக முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை பலிகொடுத்தும் ஈழத் தமிழர்கள் கைது.

தடுப்புக் காவல், சித்திரவதை, பாலியல் வன் முறை, காணாமல் போதல் போன்று மிகவும் மோசமான வன்முறைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் புலம்பெயர் வாழ் தமிழர்களிடையே ஒற்றுமையின்மை என்பது வியப்பிற்குரியது.

ஆகையால், புலம்பெயர் வாழ் தமிழர் எதற்காக பிரிந்து சின்னா பின்னமாக சிறுசிறு குழுக்களாக செயல்படுகிறார்கள் என்பதை ஆராய்வது எமது தலையாய கடமையாகும்.

ஈழத்தமிழர்களை வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கி அழிக்கும் செயல் திட்டத்திற்கு காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சியை அமைக்க சிங்கள கட்சிகளும் சிங்களத் தலைவர்களும் வேற்றுமையில் ஒற்றுமையை காணுவதை நாம் தெளிவாக அவதானிக்க கூடியதாகவுள்ளது.

பிரித்தானிய ஆட்சியிடமிருந்து 1948 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு சுதந்திர பெற்றதிலிருந்து இன்று வரை ஈழத்தமிழர்களது அரசியல், சமூக பொருளாதார, கலாசார அந்தஸ்துக்களை ஆராய வேண்டுமானால், எமக்கு கிடைக்கும் பதில் “பூச்சியமே” என்பதை ஆழ்ந்த கவலையுடன் கூறிக் கொள்கிறேன்.

ஆரம்பத்தில், அதாவது தெற்கில் கதிர்காமம், மாத்தறை, காலி போன்ற இடங்களிலிருந்து சிங்களவர்களினால் விரட்டி கலைக்கப்பட்ட தமிழர்கள், இன்று தமது தாயக பூமியான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அநாதைகளாகவும், அகதிகளாகவும் இடம்பெயர்ந்தோராகவும் உடமைகள் உடன்பிறப்புக்களை இழந்து தமது எதிர்காலம் என்னவென தெரியாது காணப்படுகின்றனர்.

ஈழத்தமிழர்களின் இவ் அவல நிலையை சமூக நோக்கு இனப்பற்று, பொதுநலம் கொண்ட ஒவ்வொரு தமிழனும் சிந்திப்பதுடன் நிற்காது, நிச்சயம் உணர்வுடன் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். ஆனால், சுயநலம் கொண்டவர்கள், ஒற்றுமைக்கு அப்பால் சென்று, ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளிலேயே முன்னிற்கிறார் கள் என்பதே உண்மை.

இவ்வேளையில், தமிbழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல் தலைவி, தமிழினி (திருமதி சிவகாமி ஜெயகுமார்) நீண்ட சுகயீனம் காரணமாக காலமானார்.

இதனை தொடர்ந்து உலகின் பல பாகங்களிலும் நாம் வாழும் பிரான்ஸ் நாட்டிலும், தமிழினியின் ஞாபகார்த்தக் கூட்டங்கள் நடைபெற்றன.

தமிழினியை நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுக ளிலும் நன்றாக தெரிந்த காரணத்தினால் தமிழினி யின் நினைவு கூட்டங்களில் பங்கு கொண்டேன்.

இவ் நினைவு கூட்டங்களில் பங்கு கொண்டதன் மூலம் ஒற்றுமைக்கு யார் யார் குந்தகமாக உள் ளார்கள் என்பதை என்னால் நன்றாக அவதானிக்க முடிந்தது.

ஓர் இடத்தில் ஒற்றுமை பற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கப்பட்ட பொழுது, ஒற்றுமையின்மை யில் மிக நீண்ட காலமாக குளிர்காயும் சில சுய நலவாதிகள் பெருமூச்சுடன் சகித்துக் கொண்டார்கள்.

அங்கு உரையாற்றிய ஒருவர், தனது மனப்பூர்வ மான பொது வேண்டுகோளை வெளிப்படையாக ‘விடுதலைக்கு அயராது உழைத்த போராளிகளை தயவுசெய்து கொச்சைப்படுத்தாதீர்களென முன்வைத்தார்.

அது மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான போரா ளிகளை மட்டுமல்லாது, பொதுமக்களையும் படு கொலை செய்து அவர்களது சொத்துக்களை நாசம் செய்த அரசுடன் பிரபாகரன், உடன்படிக்கைகள் செய்து பேச்சுவார்த்தைகளும் நடத்தினார் என்பது சரித்திரம். ஆனால், இன்று புலம்பெயர் வாழ்வில் நடப்பவையோ மிகவும் வேடிக்கையான விடயங்கள்.

நாம் எவ்வளவு தூரம் ஒற்றுமையின்றி பயணிக் கின்றோமோ, அவ்வளவு தூரம் எமது பிரதேசம், எமது மொழி, கலை கலாசாரம் போன்றவற்றை தொடர்ந்து இழப்போம். இறுதியில் எமது அடையாளங்கள் யாவும் இலங்கை தீவில் நிர்மூலமாக்கப்பட்டு, தேசம் என்ற அந்தஸ்தை இழந்து, சிறுபான்மை நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் சிறுபான்மை என்ற அந்தஸ்தையும் இழப்போம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]