மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
பாழடைந்து கிடக்கும் பருத்தித்துறை ரேவு ஆஸ்பத்திரி

பாழடைந்து கிடக்கும் பருத்தித்துறை ரேவு ஆஸ்பத்திரி

இன்றைய இளைய தலைமுறை யினருக்கு இந்த ஆஸ்பத்திரி பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த ரேவு ஆஸ்பத்திரி ரெம்பவும் பிரசித்தமானது.

சரியாக சொல்லப் போனால் இது ஒரு னீispலீnsary. வெளி வாரி சிகிச்சை நிலையம் எனலாம். இலவச சேவை அளிக்கும் அரச மருத்துவ நிலையம். பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில், கொட்டடி பிள்ளையார் முன்றலில் உள்ளது.

எமது அழகிய கிரா மம் வியாபாரி மூலை யைச் சார்ந்த டாக்டர் இராச மாணிக்கம் இங்கு ஆற்றிய அரும் பணியை மறக்க முடி யாது. போர் தொடங்கி பருத்தித்துறை துறைமுக பிரதேசம் இராணுவ கட்டுப் பாட்டில் வந்ததும், அங்கிருந்த மக்களைப் போலவே ரேவு ஆஸ் பத்திரியும் இடம் பெயர்ந்தது.

நீண்ட காலமாக ஆத்தியடி பிள்ளையார் கோவிலடியில் இயங் கியது. பின் மீண்டும் இடம்பெயர்ந்து தும்பளை வீதிக்கு சென்றது. பல உதவி மருத்துவ அதிகாரிகள் ரேவு ஆஸ்பத்திரியில் தன்னலமற்ற சேவை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். ஒரு காலத்தில் மக்களுக்கு அரும் சேவை ஆற்றிய இடம் இடிந்து பாழடைந்து கிடப்பது மன வேதனை அளிக்கிறது. நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டிய இடம். பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் ஆவன செய் வார்களா? ரேவு என்பது போர்த்துக்கீச அல்லது ஒல்லாந்தர் கால சொல் வழக்கா?


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]