புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
பலதும் பத்தும்

பெற்ற குழந்தையை மைக்ரோவனில் வைத்து சமைத்த கொடூர தாய்

அமெரிக்காவில் 2 மாத குழந்தையை மைக்ரோவேவனில் வைத்து கொலை செய்த தாய்க்கு 26 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்தவர் காயங் இரண்டு மாதமேயான அவரது குழந்தை மிராபெல்லி தா லூவை மைக்ரோவேவனில் வைத்து சமைத்து கொலை செய்ததாக காயங் மீது 2011 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எனினும் இந்த குற்றச்சாட்டை காயங் மறுத்து வந்தார். தனது குழந்தையை கையில் வைத்திருந்த போது திடீரென மயக்கம் அடைந்து விட்டதாகவும் பின்னர் கண்விழித்து பார்த்த போது குழந்தை அருகில் காயங்களுடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் இதனை பொய் என்று ஒப்புக் கொண்ட அவர், குழந்தையை மைக்ரோவேவனில் வைத்து கொலை செய்யவில்லை என்றும் அந்த சமயத்தில் தான் வலிப்பு நோயால் பாதிக் கப்பட்டிருந்ததாகவும் கூறினார். மேலும் தனக்கு Split personality நோய் உள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் இதனை நீதிபதிகள் நம்ம மறுத்து விட்டனர். மேலும் அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


இதய நோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் பலம் கடல் கடந்தும் உள்ளது. இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் கபாலி திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ரஜினிகாந்த் தன் மலேசியா ரசிகர்களைச் சந்திப்பது அவர்களுடன் உரையாடுவது என தனக்கே உரிய ஸ்டைலில் அந்த நாட்டையே அதகளம் செய்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும் ஓய்வு நேரங்களில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதில் இதய நோயால் பாதிக்கப்பட்டு மலேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் ஆக்னஸ். ரஜினியின் தீவிர ரசிகையான இவருடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டதற்கு, எப்படியாவது நான் தலைவரை நேரில பார்த்துடனும் என்றிருக்கிறார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ரஜினிகாந்த் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடன் எல்லா வேலைகளுக்கும் மத்தியில் ஆக்னஸை சந்திக்க அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவமனைகக்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டாராம். இந்த நெகிழ்வான தருணத்தில் ஆக்னஸ¤டன் புகைப்படம் எடுத்து ஆறுதல் வார்த்தைகள் கூறி நலம் பெற வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.


செக்ஸ் தொல்லையிலிருந்து தப்பிக்க சிறுவன் உடையில் சிறுமி

இந்தியா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோவா பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் பாயல்பிரியா. 14 வயது சிறுமி. 3 வயதாக இருந்த போது அவளது தந்தை மனோஜ் வலிப்பு நோயால் இறந்து விட்டார்.
இவளுடன் மேலும் 4 பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. மூத்த அண்ணன் சுனில் (30), ஒரு தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார். அவர் மாதம் 8 ஆயிரம் சம்பாதிக்கிறார். ஆனால் அவர் தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை தவித்து விட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டார். எனவே, சிறுமி பாயல் தனது 4 வயது முதல் ஷ¤ பாலிஷ் போடும் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற தொடங்கினாள். காமுகர்களின் செக்ஸ் தொல்லையிலிருந்து அவளை காப்பாற்ற தாயார் அனிதா ஒரு வழி கண்டு பிடித்தார்.
அவளது தலைமுடியை வெட்டி விட்டார். அதனால் பார்க்க அவள் சிறுவன் போன்று காட்சி அளித்தாள். ஷ¤வுக்கு பாலிஷ் போட வருபவர்கள் பாயல் சிறுவன் என்றுதான் நினைப்பார்கள். அவளிடம் பேச்சு கொடுத்தால் மட்டுமே சிறுமி என தெரியும்.
சிறுமி பாயல் பிறந்ததில் இருந்து பாடசாலை பக்கமே சென்றதில்லை. தனது தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக ஷ¤ பாலிஷ் போட்டு சம்பாதிக்கிறாள்.

 


2700 அடி உயரக் கயிற்றில் ஹீல்ஸ் காலுடன் நடந்து அசத்திய பெண்

ஹைஹீல்ஸ் போடும் பெண்களால் சரியாக நடக்க முடியாது என்பது போலவே அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா காட்சிகளும் கேலி கிண்டல் ஜோக்குகளும்பெயித்திடம் எடுபடாது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த திகில் சாகச விரும்பிதான் ஃபெயித் டிக்கி (26). நிறைய சாகசங்களை செய்து போராடித்ததால் அண்மையில் Highgirls Brazil Festival இல் கலந்து கொண்டார். 2755 அடி உயரத்தில் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் உள்ள ஹைலைனில் (கயிற்றால் இணைக்கப்பட்டிருக்கும் வழி) ஹைஹீல்ஸ் காலுடன் கடப்பதென்றால் சும்மாவா...

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.