மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
ஏ.எம்.ஏ.அஸீஸின் அறிவார்ந்த முதுசம் அவரது உயர் மாண்புகளைப் பறைசாற்றும்

ஏ.எம்.ஏ.அஸீஸின் அறிவார்ந்த முதுசம் அவரது உயர் மாண்புகளைப் பறைசாற்றும்

அன்னாரது 42ஆவது நினைவுதின நிகழ்வு எதிர்வரும் 26/11/2015 கொழும்பில் நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி யின் புகழ்பூத்த முதல்வரான டாக்டர் ஏ.எம்.ஏ.அkஸ், அவரது தலைமுறையின் பிரபல புத்திஜீவிகளுள் ஒருவராகளங்கினார். அவர் பிரதான முஸ்லிம் கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவராக அதனை கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் உச்ச நிலைக்கு இட்டுச் சென்றது மட்டுமன்றி 1950 மற்றும் 1960களில் ஒரு செனட்டராகவும் பொது சேவை ஆணைக்குழு (ஜிஷிவி) உறுப்பினராகவும் பணியாற்றினார்.

பின்னர் “சிலோன் ஒப்சேவர்” பத்திரிகையின் இளம் நிருபராக நான் 1960களின் பிற்பகுதியில் கொழும்பில் ஒர் இராஜதந்திர உபசரிப்பு நிகழ்வொன்றில் ஒரு தீவிர பத்திரிகை ஆசிரியருடனான ஒரு துடிப்பான சொற்போரில் அவரைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த ஆசிரியர் பொது சேவை ஆணைக்குழு “அதன் இலட்சியங்களுடன் செயல்பட வில்லை” என விமர்சிக்க, அkஸ் அதற்குப் பதிலடியாக உங்கள் “பத்திரி கையைப் போல” (அந்த நேரத்தில் அந்தப் பத்திரிகை ஆளும் கட்சியின் ஊது குழலாக இருந்தது) என்றதும் அவர் வாயடைத்துப் போனார்.

1911 அக்டோபர் 4ம் திகதி பிறந்த அkஸ் 1973 நவம்பர் 24ம் திகதி ஏறத்தாழ இளம் வயதில் அதாவது, தனது 62வது வயதில் காலமானார். ஆனால் அவர் ஒரு வாழ்நாள் நினைவுகளையும் அவரது உயர் மாண்புகளைப் பறைசாற்றும் அறிவார்ந்த முதுசத்தையும் விட்டுச் சென்றார்.

அkஸின் நெடுந்தூரப் பயணத்தின் பல நிகழ்வுகள் ஸாஹிராவின் வரலாற்றில் மைல்கற்களாகும். ஆனால் அவரது முழுமையான சாதனை பட்டியலையும் நோக்கும்போது அது ஒரு எதிர்கால முனைவர் ஆய்வுக் கட்டுரைக்குக் கருவாக அமையக்கூடியதாக உள்ளதைக் காணலாம். எனவே, ஒரு கட்டுரையில் அவரது சாதனைகளுக்கு ஒரு காணிக்கை செலுத்துவது என்பது அவரது நிலையான முதுசங்களுக்கு அநீதி இழைத்தாகவே அமையும். ஆனால் அது ஒரே அடியில் தொடங்கும் ஓராயிரம் மைல் பயணமாக உள்ளது.

1952இல் அkஸ் தனது அமெரிக்கா வுக்கான மூன்று மாதகாலக் கல்விச் சுற்றுலாவின்போது போது அவர் ஹார்வர்ட், கொலம்பியா மற்றும் ஸ்டான்போர்ட் உட்பட அமெரிக்காவின் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டார்

20 ஆண்டுகள் கழித்து நான் ஊடகத்துறையில் என் முதுமாணி பட்டப்படிப்புக்காக நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டதாரி மாணவனாக - அkஸ் கால மற்றும் அkஸ¤க்கு பிந்திய கால ஸாஹிராவின் ஒரே பழைய மாணவனாக என்னைக் கற்பனை செய்து பார்க்கும் போது ஒரு கனவாகவே தோன்றுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நான் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறேன் என அவரிடம் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

நான் பேராதனையில் பட்டதாரி மாணவனாக இருந்த நாட்களில், விடுமுறையில் கொழும்பு வந்த போதெல்லாம், நான் அவரது பார்ன்ஸ் பிளேஸ் இல்லத்தில் அவரைச் சென்று காணத் தவறுவதில்லை. அப்போது நாம் அரசியல், பொருளாதாரம், தத்துவம், மதம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய முடிவற்ற கலந்துரையாடல்களில் ஈடுபடுவோம்.

சுவர்களையொட்டி உட்கூரைவரை வரிசையாக அடுக்கப்பட்ட ஏராளமான புத்தகங்களைக் கொண்ட அவரது வீடும் மற்றும் - ஒர் அறிவுக் களஞ்சியமாக வாசிப்பில் பெரும் வேட்கை கொண்டவர் என்பதை நிரூபிக்கும் வகையிலான அவரது ஆணித்தரமான வாதங்களில் பொதிந்திருக்கும் அறிவுசார் ஆழம் என்பவற்றைக் காணும்போதெல்லாம் நான் வியப்புக்குள்ளாகி இருக்கிறேன்.

நான் ஸாஹிரா மாணவனாக இருந்த போதே, அவர் அமெரிக்க பாடசாலை முறைமை மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பற்றிய முதன்மைத் தகவல்களுடன் அமெரிக்காவில் இருந்து திரும்பினார்.

அவரது பயணம், பல அமெரிக்க பொது, திருச்சபை மற்றும் தனியார் பாடசாலைகள் மற்றும் பிரத்தியேகமாக இந்திய இட ஒதுக்கீடுகளில் அமெரிக்க குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பாடசாலைகளுக்கான விஜயமும் உள்ளடங்கியிருந்தது. அவர் அகில இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்திலேயே நடைபெற்றது.

அமெரிக்க விஜயத்தின் ஒரு நேரடி விளைவாக கல்லூரியில் 1950களின் பிற்பகுதியில், அவர் ஸாஹிராவில் முதலாவது மாணவர் மன்றத்தை அமைத்தார். இதன் மூலம் கல்லூரியின் நன்மைக்காக மாணவர்கள், அதிபருடன் சமமாக நின்று கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எடுத்துரைக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒருவேளை, அன்றைய காலத்தில் இந்த வகையான மன்றம், முதல் தடவையாகவும் இருக்கலாம். இரு வாரங்களுக்கு ஒரு முறை அதிபர், துணை அதிபர் மற்றும் உதவி அதிபர் என்போருடனான சந்திப்பு இடம்பெற்றது. அவரது மாணவர்களில் நம்பிக்கை வைத்திருந்த அkஸ் மாணவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மட்டுமன்றி புகார் களையும் ஏற்றுக்கொண்டார்.

அன்றைய காலகட்டத்தில் அது ஒரு தெளிவான முன்னெடுப்பாகவே இருந்தது. ஒருவேளை கல்லூரிகள் சிலவற்றில் ஒன்றாக அல்லது ஒரே கல்லூரியாக இந்த அதிபர் மற்றும் மாணவர்கள் இடையே வலுவான உறவு இருந்திருக்கலாம். குறைந்தது மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை, அவரது அலுவலகத்தில் நாம் சந்தித்துக் கொண்டோம். பாடசாலையின் பாடத்திட்ட மதிப்பீட்டிலிருந்து ஸாஹிரா விளையாட்டு அணிகளின் செயல்திறன் வரையான கலந்துரையாடலாக அது இருந்தது. நாம் ஸாஹிராவின் முன்னேற் றத்தை முன்னெடுக்க உதவும் ஒர் அணியின் ஒரு பகுதியாக அங்கீகாரம் பெற்ற ஒரு வசதியான இடத்திலிருப்பதை நாம் உணர்ந்தோம்.

அவர் அஸ்ஸாஹிரா என்ற ஒரு மாதாந்த கல்லூரி செய்திமடல் வெளி யீட்டை ஊக்குவித்தார் - மாணவரிடையே மறைந்திருக்கும் எழுதும் திறனை வெளிக்கொணரும் ஒரு கெஸ்ட்டனர் ரோனியோ இயந் திரத்திலிருந்து வெளி யாகிய செய்திமடல் இரண்டு ஆசிரியர் களைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது, நானும் ஏ.ஆர்.எம். ஸ¤ஹைரும் அந்தப் பணியினை மேற் கொண்டிருந்தோம். பின்னர் நாமிருவரும் பேராதனையில் இலங்கை பல்கலைக் கழகத்தில் சமகாலத்தவர்களாக இருக்கும் வாய்ப்பினையும் பெற்றோம்.

பேராதனை பற்றி பேசுகையில், அkஸ் சகாப்தத்தின் கல்வியில் கண்கவர் சாதனைகளுள் ஒன்றாக பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் 1958 குழு இருந்தது.

அன்றைய நேரத்தில் பெரும் எண்ணிக் கையிலான ஒரே குழுவாக ஒன்பது ஸாஹிரா மாணவர்களுள் ஒன்பது பேரும் நாட்டின் முன்னணி பொது பாடசாலைகளைப் பின்தள்ளி இலங்கை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகினர்.

1950களின் பிற்பகுதியிலும் 1960களின் ஆரம்பத்திலும் பல்கலைக்கழகம் நுழைந்த ஸாஹிரா மாணவர்கள் ஆய்வறிவு நாட்டத்துடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை.

1958 ஸாஹிராக் குழுவினர் மத்தியில் எம்.எஸ்.எம்.நாளிம் குத்துச்சண்டை காப்டனாகவும் ஹில்மி மன்ஸில் உடல் கட்டமைப்பு போட்டியில் இருமுறை பல்கலைக்கழக கட்டழ கனாகவும் ஹம்ஸா ஹனிபா மல்யுத்த காப்டனாகவும் பாரூக் சலீம் தடகள காப்டனாகவும் உருவானார்கள். அத்துடன் ரிஸ்வி அப்துர் ரஹ்மான் தடகள மற்றும் றகர் பந்தயத்திலும் பிரகாசித்தார்.

நாளிம், வளாகத்திலுள்ள மிகவும் திறமையான குத்துச்சண்டை வீரர்களுள் ஒருவராக தனது அபார குத்துகளால் பல எதிரிகளை வீழ்த்தியுள்ளார். இதன் விளைவாக, அவர் யாராலும் சவால் விட முடியாத குத்துச்சண்டை வெற்றி வீரராக ஆதிக்கம் செலுத்தினார். அன்றைய பல்கலைக்கழக குத்துச் சண்டை பயிற்சியாளர் டெரெக் ரேமண்ட், கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் குத்துச்சண்டை அணி பயிற்சியாளராக குத்துச்சண்டை விளையாட்டுக் களின் பேரரசராக விளங்கினார்.

நாளிமுக்கு சவாலாக யாரு மில்லாத நிலையில், டெரெக் நாளிம் மற்றும் புனித சில்வெஸ் டெரின் புகழ்பெற்ற ஸ்டப்ஸ் கேடய குத்துச்சண்டை வீரர்கள் சிலரிடையே கண்காட்சி போட்டிகளை நடத்த வேண்டி ஏற்பட்டது. கோட்டே, கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து ஒரு பல்துறை குத்துச்சண்டை வீரர் வருகையை அடுத்து, அவர் நாளிமுடன் மோத தீர்மானித்தார். என்ன அதிசயம் அவர் நாளிமுடன் இரண்டு சுற்று வரை மட்டுமே செல்ல முடிந்தது. மூன்றாம் சுற்றில் நாளிம் அவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.

வளாகமே அதிர்ந்தது. கடந்த கால ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரான உடற் கல்விப் பணிப்பாளர் லெஸ்லி ஹந்துன்கே வியப்புக்குள்ளானார். ஆனால் இந்த பந்தயத்தில் ஸாஹிரா மாணவரின் அபாரமான குத்து ஒரு வரலாறானது.

ஏனெனில், விரைவில், அந்தப் பந்தயத்தின் பின்னர், பல்கலைக்கழகம் அதன் விளையாட்டு பாடத்திட்டங் களிலிருந்து குத்துச் சண்டையை நீக்க முடிவு செய்தது.

அது பேராதனையில் விளையாட்டு வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருந்தது.

அkஸ் ஸாஹிரா வந்த போது, முஸ்லிம்கள் உயர் கல்வியில் குறிப்பாக, கலை, மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் மிகவும் பின்தங்கிய வர்களாகவே இருந்தனர். பிரிட்டன் ஒரு காலத்தில் “கடைக்காரர்களின் நாடு” என ஒதுக்கப்பட்டது போல், முஸ்லிம் சமூகம் ஒரு வர்த்தகர்களின் சமூகம் என ஏளனமாக நோக்கப்பட்டது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]