மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
ளுடுஊPஐ நாட்டின் சுகாதார முக்கிய பங்காளியாக உருவாவதை தேசிய  மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்

SLCPI நாட்டின் சுகாதார முக்கிய பங்காளியாக உருவாவதை தேசிய  மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்

இலங்கை மருந்துப்பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்தின் SLCPI 54ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகவும், தேசிய மருந் துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் லால் ஜயகொடி கௌரவ அதிதி யாகவும் கலந்து கொண்டார்.

அகால மரணங்களை தடுக்கும் சிறந்த மருந்துகள்;' என்ற தொனிப் பொருளில் விருந்தின ராகக் கலந்து கொண்ட பேராசிரியர் அசித்த டி சில்வா உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜpத சேனாரத்ன, தான் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றது முதல் இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்துடன் சுமுகமாகவும் பரஸ்பர மரியா தையுடனும் உறவுகளைப் பேணி வருவதாக தெரி வித்தார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு SLCPI ஒத்துழைப்புக்களை வழங் குவதாகவும் அதனை எதிர்காலத்திலும் தொடரந்து வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத் தினார்.

இதன்போது மற்றுமொரு விடயத்தைப் பற்றி உரையாற்றிய அமைச்சர், யடடழியவாiஉ நடைமுறை யை எமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்துடன் இணைத்துக் கொள்வதன் ஊடாக பல நன் மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இது எமது சமூகத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகவும் உள்ளது.

மனிதவர்க்கத்திற்கு ஆயுர்வேத மருத்துவத்தினால் அற்புதகரமான சுகமளிப்பு வழங்கப்படுவதனால் இதனை நடைமுறைப்படுத்துவதை எளிதாக்க ஆணைக்குழுவொன்றை அமைக்கவுள்ளதாக அவர் கூறினார், மேலும் ஆயுர்வேத மற்றும் ஆங்கில மருத்துவமுறைகளை இணைத்து வேகமாக நோயளர்களை சுகப்படுத்த முடியும் எனவும் தெரி வித்தார்.

விருந்தினர் பேச்சாளர் பேராசிரியர் அசித்த டி சில்வா கருத்து தெரிவிக்கiயில், உயிர் காக்கும் மருந்துகள் ஊடாக மக்கள் பெரும் நன்மைகளை பெற்றுள்ளதாக தெரிவித்தார். "உதாரணமாக உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ளுவயவiளெ போன்ற மருந்துகளினால் கடந்த தசாப்த காலத்தில் மனித இறப்புக்கள் தீவிரமாக குறைவடைந்துள்ளது.

மருந்து வகைகள் மனித வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்துள்ளது என்பதை நிச்சயமாகக் கூறமுடியும். இதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான மருத்துவ ஆராய்ச்சிகளையும் குறிப்பிடலாம்." எந்த நாடு என்ற முக்கியம் இல்லை ஆராய்ச்சி முன்னேற்றம் அவ்வப்போது வெளிப்படும்போது அந்த மருத்துவ கண்டுபிடிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு எவருக்கும் உரிமையுண்டு. புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சியானது உலகம் முழுவதிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு பயன ளித்துள்ளமை இந்த சாதனைக்கு ஒரு எடுத் துக்காட்டாகும்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் லால் ஜயகொடி கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை காலமும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மிகுந்த ஒத்துழைப்புக்களை வழங்கிய இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்திற்கு எனது நன்றிகள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]