மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
சர்வதேச விசாரணை தொடர்பில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு

சர்வதேச விசாரணை தொடர்பில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள சர்வதேச மத்தியஸ்தத் துடனான விசாரணை குறித்து பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்த வேண்டும் என்று ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரஜை ஒருவர் குறித்து வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றின் ஊடாக வழக்குகளை விசாரிக்கவோ, தண்டனை வழங்கவோ செய்வதாயின் அது குறித்து பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்த வேண்டும். இலங்கையிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் மட்டும் இருந்தால் போதாது. அவ்வாறு பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டாலும் பொதுமக்கள் கருத்துக் கணிப்பின் பின்னரே அதனைச் செயற்படுத்த முடியும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]