புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
அரிதான சந்திர கிரகணம் இன்று

அரிதான சந்திர கிரகணம் இன்று

மிகவும் அரிதான சந்திர கிரகணம் ஒன்று இன்று ஏற்படவுள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

30 வருடங்களுக்குப் பின்னர் இப்படியான சந்திர கிரகணம் ஒன்று ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணம் இலங்கையர்களும் காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிரகாஷமான மற்றும் மிகப் பெரிதாக சந்திரன் தென்பட்ட பின்னரே இந்த சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

ஏனைய நாட்களில் தென்படும் சந்திரனை விட இன்று தென்படும் சந்திரன் 17 வீதம் பெரிதாக தென்படும் என்பதுடன் 100 வீதம் பிரகாஷமாக இருப்பதை காணமுடியும் எனவும் நாஸா நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில் நாளை கடல் அலையின் மட்டம் சற்று உயரக்கூடும் எனவும் அது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.