மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
மனைவியைச் சந்தேகித்ததால் விளைந்த கொலை

மனைவியைச் சந்தேகித்ததால் விளைந்த கொலை

புத்தலை கோனகங்ஹாரா ஆலய வீதிப் பகுதி தென்னந்தோட்டத்தில் ஒரு சடலம் காணப்பட்டது. இச்சடலத்துக்குரியவர் ஆர்.டி. பியதாச என அடையாளம் காணப்பட்டார். பியதாசவின் கழுத்து பகுதி உடலிலிருந்து வேறாகுமளவுக்கு வெட்டு காயம் காணப்பட்டது.

துவிச்சக்கரவண்டியில் மீன் வியாபாரம் இதை யடுத்து பழைய போத்தல், பத்திரிகை விற்கும் தொழிலும் வழமையாக செய்து வந்த பியதாச அனைவருடனும் அன்பாக பழகி உதவும் மனப்பான்மையுடனும் விளங்கினார். இவருக்கு ஏன் இந்நிலையேற்பட்டதென்பது கேள்விக் குறியாயிருந்தது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி “நந்தன சமன்சிறி சோகேரி அதிகாரிகளுடன் ஸ்தலத்திற்கு வந்து அயல் பகுதிகளை சோதனையிட்டார். சடலம் காணப்பட்ட இடத்தில் முத்து மாலை, நூலில் கட்டப்பட்டிருந்த பித்தளையிலான பென்ட னொன்றையும் பொலிஸார் கண்டெடுத்தனர்.

கோனகங்ஹாரா ரஜமாவத்தையில் வசித்த இவருக்கு விரோதிகளிலிருக்கவில்லையென விசாரணைகளில் தெரியவந்தது. ஏன் இவர் கொலை செய்யப்பட்டாரென்பது புதிராயிருந்தது. மொனராகலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எம். திலகரத்னவும் விசாரணைகளிலீடுபட்டார்.

இன்னுமொரு பகுதியை சோதனையிட்டபோது காலியான மது போத்தல், இரத்தக்கறை படிந்த சாரம், துவிச்சக்கரவண்டி ஆகியவற்றை பொலிஸார் கைபற்றினார். இவைகள் தன் கணவருடையவை யென பியதாசவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் பொலிஸாரிடம் தெரிவித்தனர். ஸ்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட முத்துமாலையை பொலிஸார் காண்பித்தபோது அவை தன் கண வருக்குரியதல்ல என மனைவி கூறியதும், முத்து மாலை சந்தேக நபருடையதாயிருக்கலாமென பொறுப்பதிகாரி அனுமானம் செய்தார்.

இத்தகவல்களை பொறுப்பதிகாரி பிரதிபொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாந்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியலால் தசநாயக்க ஆகியோரிடம் தெரிவித்து ஆலோசனைகளை பெற்றுக்கொண்டார். சந்தேக நபரை கைது செய்ய பொலிஸ் நாய் “மேஜர்” பயன்படுத்தப்பட் டது. ஸ்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட முத்து மாலையை மோப்பமிட்ட நாய் “மேஜர்” சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஐம்பது மீற்றர் வரை சென்று ஒரு வீட்டின்முன் நின்றது. இவ்வீட்டில் தங்கியிருந்தவர் பொதுசன பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவராவார். இவர் கதிர்காமம் அலு வலக பிரிவில் கடமையாற்றினார். இவர் தங்கி யிருந்த வீட்டின் உள்ளே சென்றது பொலிஸ் நாய்.

வீட்டில் சந்தேக நபர் காணப்படவில்லை இதனால் வீட்டிலுள்ள பெண்ணிடம் பொலிஸார் விசாரணை செய்தனர். இவருடன் பதின் மூன்று வயதுடைய மகளும் காணப்பட்டார். இவரது கணவரை பற்றி விசாரணை செய்ததில் “இரவு முழுவதும் வயிற்றுவலியால் அவதியுற்ற கணவர் காலையில் புத்தலை ஆஸ்பத்திரிக்கு சென்றதாக மனைவி பகன்றார். முத்து மாலை சந்தேக நபரின் மனைவியிடம் காண்பிக்கப்பட்ட போது அம்மாலை தன் கணவருக்குரியது கழுத்தில் அவர் அணிந்திருந்ததாகவும் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்தார். பித்தளையி லான பென்டனும் தம் கணவருக்குரிய தென்றும் அவர் தெரிவித்தார். பியதாசவின் கொலையில் இச்சந்தேக நபர் சம்பந்தப் பட்டிருக்கலாமென பொலிஸார் அனுமானித்தனர்.

பொலிஸார் புத்தலை ஆஸ்பத்திரிக்கு சென்ற போது சந்தேச நபர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப் பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித் ததையடுத்து பொலிஸ் குழு மொனராகலை ஆஸ்பத்திரிக்கு சென்ற போது அங்கிருந்து சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது.

சந்தேக நபரான பாதுகாப்பு வீரரின் வீட்டிலிருந்த பெண்ணிடம் விசாணை மேற்கொள்ளப்பட்டது. இப் பெண்ணுடைய வயது முப்பது. தன் சட்ட பூர்வமான கணவர் இங்கிரியவை சேர்ந்தவ ரென்றும் அவரிடம் விவாகரத்து பெற்று தன் மகளுடன் இங்கு வசித்துவருவதுமாகவும் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் வீட்டில் தன்னு டன் வசித்தததாகவும் காலப்போக்கில் இவர் தன்னை சந்தேகித்ததாகவும் அதிலிருந்து சண்டை சச்சரவுகள் ஆரம்பித்ததாகவும் தன்னை அடிக்கடி நையப்புடைத்ததாகவும் இதனால் அடிக்கடி முறைபாடுகளைத் தீர்க்க பொலிஸ் நிலையம் செல்ல வேண்டியிருந்ததாகவும் இப்பெண், பொலிஸாரிடம் தெரிவித்தார். பொலிஸில் சமாதானமடைந்து வீடு திரும்பியதும் மீண்டும் தன்னை தாக்குவதாகவும் அப்பெண் தெரிவித்தார்.

“எந்த ஆடவருடனும் பேச முடியாது” அமர்ந் திருக்கமுடியாது அவ்வாறு நடந்தால் தன்னை தாக்குவதாகவும் காலையில் இவர் வெளியே செல்லும்போது வீட்டை சுத்தப்படுத்தி செல்வார், வீடு திரும்பும் போது வீட்டில் கால் அடையா ளங்கள், அல்லது அசுத்தமிருப்பினும் அப்போதும் தன்னை தாக்குவதாகவும் கொலை செய்யப்பட் டுள்ள பியதாச தன் மைத்துனரென்றும் அவருடன் கதைத்ததற்கு பல முறை தான் தாக்கப்பட்டுள்ள தாகவும் தனக்கும் மைத்துனருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் அடிக்கடி கூறி தன்னை தாக்குவதாகவும் ஆனால் இது பற்றி ஒரு நாளும் மைத்துனருடன் கோபித்ததில்லையென வெளியே காண்பித்தாலும் மைத்துனருடன் கடும் கோபமாக இருந்ததாகவும் தனக்கும் மைத்துனருக்கும் எவ்வித தொடர்புமிருக்க வில்லை யெனவும் இப்பெண், பொலிஸாரிடம் தெரிவித்தார்.

சந்தேக நபரை பல நாட்களின் பின் அப் பெண் ணின் வீட்டுக்கு செல்கையில் பொலிஸார் கைது செய்தனர். இவருக்கு வயது நாற்பத்து மூன்று தடகல்லை, ருவல்வலையை சேர்ந்தவராவார். இவரது மனைவி பத்து வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். மூன்று பிள்ளை களின் தந்தையான இவர் மகனை பெளத்த ஆலயத்துக்கு ஒப்படைத்துவிட்டு, பெண்பிள்ளைகள் இருவரை மொனராகலை பிரதேச சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளார். சந்தேக நபர் ஆறுவருடங்களாக இப்பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

சந்தேக நபரான பாதுகாப்பு வீரரை பொலிஸார் விசாரணைசெய்தனர். “என் மனைவியுடன் பிய தாச தொடர்பு வைத்துள்ளாறென பல நாட்களாக நான் சந்தேகம் கொண்டிருந்தேன். என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. பியதாசவை கொன்று விடுவதென முடிவு செய்து தொழிற் சாலையொன்றில் பதினொரு அங்குல கத்தி யொன்றை தயாரித்து கொண்டேன் இதற்கு இருநூறு ரூபா செலவானது என்னுடன் மது அருந்த வருமாறு பியதாசவை அழைத்தேன். என் மனைவியும், மகளும் தொலைகாட்சி பார்க்க அவரது தாய் வீட்டுக்கு சென்றனர். நான் சிறிதளவு குடித்து, பியதாசவை கூடுதலாக மது அருந்தச் செய்தேன். அவன் வெளியே சென்றபோது பின்னால் சென்று அவனை கொன்றேன்” என சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்தார்.

பிரதிபொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர் னாந்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிய லால் தசநாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி. எம். திலகரத்ன, ஆகியோரின் ஆலோசனை, மேற்பார்வையில் பொறுப்பதிகாரி நந்தன சமன்சிறி சார்ஜன்ட்களான அஜந்த, கருணாதாச, கான்ஸ்டபிள்களான அஜித் ராஜபக்ஷ, ஹேவகெ உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளுக்குதவினர்.

சந்தேகத்தின் பலன் கொலையில் முடித்து. சந் தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]