புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
பேரம் பேசும் சக்தியை உயிர்ப்பித்தவர் அஷ்ரப்

பேரம் பேசும் சக்தியை உயிர்ப்பித்தவர் அஷ்ரப்

அமைச்சர் றிஷாத்

முஸ்லிம்களின் அரசியலில் முகவரியையும் அவர்களின் கல்வியில் விழிப்புணர்வையும் பெற்றுத்தந்த மர்ஹும் அஷ்ரப் இன நல்லுறவுக்காக பெரிதும் உழைத்தவரென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மர்ஹும் அஷ்ரப்பின் 15வது வருட ஞாபகார்த்தத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அவர் உரையாற்றினார். முஸ்லிம்கள் என்றுமே ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் விரும்புபவர்கள் கடந்த காலங்களில் நாட்டுக்காக அவர்கள் பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற் கொண்டவர்கள் எனினும் முஸ்லிம்களை குறிவைத்து சில தீய சக்திகள் இயங்கி இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. இது வேதனையானது.

மர்ஹும் அஷ்ரப் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்கும் வகையில்பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். அவரின் அகால மரணம் எமது சமுதாயத்துக்கு கிடைத்த பேரிடி. தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்திக்கு உயிரூட்டிய தலைவர் எம். எச் எம். அஷ்ரப் அவரது சாணக்கியம், காய் நகர்த்தல்கள் கடந்த காலங்களில் மூன்று ஜனாதிபதிகளைப் பதவியில் அமர்த்த அடித்தளமிட்டது.

முஸ்லிம்களின் கல்வித் தேவையைக் கருத்திற்கொண்டு அவர் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். அதன் மூலம் இந்தப் பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியில் புகழ் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் கல்வியில் மேம்பாடடைய தனவந்தர்கள் உதவ வேண்டும். நZம் ஹாஜியார் போன்ற கொடை வள்ளல்கள் நமது சமூகத்தில் இன்னுமின்னும் உருவாக வேண்டும் என அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.