மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கே வெற்றி

ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கே வெற்றி

சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் - பிரதமர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளியி டப்பட்ட அறிக்கையானது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக விசாரணைப் பொறிமுறைமை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித் துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கையின் ஊடாக இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கையில் ஹைபிரைட் நீதிமன்றம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஹைபிரைட் நீதிமன்றம் என்பது என்ன என்பது இன்னமும் சரியாக வரைவிலக்கணப்படுத் தப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை இலங்கைக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித் துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த னவின் 109ம் ஆண்டு சிறார்த்த தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைப் பிரச்சினை மிகுந்த நிதானத்துடன் கையாளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

படைவீரர்களை பாதுகாக்கும் நோக்கில் தனிநபர் சட்டப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]