புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
எதற்காக மஹிந்த இன்னமும் அரசியலில் இருக்கிறார்?

எதற்காக மஹிந்த இன்னமும் அரசியலில் இருக்கிறார்?

க்கிய தேசியக் கட்சி தலை மையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு பிரதமராகப் பதவி வகிக்கலாம் என மஹிந்த விரும்பினால் அவருக்கு மைத்திரியின் ஆதரவும் தேவைப்படும். ஆனால் மைத்திரி ஒருபோதும் மகிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்க முன்வரமாட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசம் மற்றும் அவரது எதிர்கால அரசியற் திட்டங்கள் போன் றன தற்போது இராஜதந்திர வட்டாரங்க ளில் அதிகம் பேசப்படுகின்றது. மஹி ந்தவின் அரசியல் மீள்பிரவேசத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியன சந்தேகக் கண்ணுடன் நோக்குகின்றன. இதேவேளையில், மஹிந்த மீது சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர், இவர் மக்களின் ஆணையை ஏற்று மைத்திரிபால சிறிசேனவிடம் தனது கட்சியின் தலைமைப் பொறுப்பைக் கையளிப்பதாக அறிவித்தார். எனினும் மஹிந்த தோல்வியடைந்து சில நாட்களுக்குள் மீண்டும் தனது வாக்கிற்கு மாறாகச் செயற்பட்டார்.

அதாவது தனது தேர்தல் தோல்வி யானது திட்டமிடப்பட்ட ஒரு சதி என அறிவித்திருந்தார். இதனால் தனது கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரியிடம் ஒருபோதும் வழங்க வில்லை எனவும் இதனை மைத்திரி பலவந்தமாகப் பறித்துள்ளார் எனவும் மஹிந்த தெரிவித்தார். தனது கட்சிக்குத் துரோகமிழைத்த ஒருவரிடம் கட்சியின் தலைமைப் பொறுப்பை எவ்வாறு கையளிக்க முடியும் எனவும் மஹிந்த வினவினார்.

இவர் தொடர்ந்தும் இவ்வாறான பரப்புரைகளை மேற்கொண்டார். இதுவே மஹிந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தியது. தான் நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்க வேண்டும் என்பதே மஹிந்தவின் நோக்கமாக இருந்தது. இதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முடியும் எனவும் மஹிந்த தீர்மானித்தார்.

இவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, 117 ஆசனங் களைத் தன்னால் வெற்றிகொள்ள முடியும் என அறிவித்தார். தனக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் களை ஒன்றிணைத்து அதிகாரத்தைப் பறித்துக் கொள்வதற்கான புதிய கட்சி ஒன்றை உருவாக்க முடியும் என மஹிந்த கனவு கண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனங்களை வழங்க மைத்திரி, தீர்மானித்த போது, தனக்கான நல்வாய்ப்பு மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளதாக மகிந்த கருதினார். இறுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்தலில் மஹிந்தவால் 95 ஆசனங்களை மட் டுமே தனதாக்க முடிந்தது. இந்த சத வீதமானது 42.38 ஆகக் காணப்பட்டது.

மஹிந்த ஒரு போர்க் கதாநாயகனாக அறியப்பட்டார். இவரது ஆதரவாளர் கள் இவரை அரசனாகக் கருதினர்.

முன்னாள் அதிபர் பிரேமதாசா படுகொலை செய்யப்பட்ட பின்னர். அவரைத் தொடர்ந்து டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியானார். இதன் பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தன்னால் தென் மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்க முடியும் என விஜேயதுங்க கனவு கண்டார்.

ஆனால் இத்தேர்தலில் விஜேதுங்கவின் ஐ.தே.க 95 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. ஆனாலும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியைச் சேர்ந்த சந்திரிகா குமாரதுங்க 105 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டார். 17 ஆண்டுகளின் பின்னர் ஐ.தே.க வசம் இருந்த ஆட்சி சுதந்திரக் கட்சியிடம் கைமாறியது.

இத்தேர்தலில் ஐ.தே.க பெற்ற வாக்கு வீதம் 44.09 ஆகவும் சந்திரிகாவின் ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியானது 48.94 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டது. ஆகவே இத்தருணத்தில் விஜேதுங்கவின் தேர்தல் தோல்வியை மஹிந்தவின் தேர்தல் தோல்வியுடன் ஒப்பீடு செய்து கொள்ள முடியும்.

தேர்தலில் 94 ஆசனங்களை மட் டுமே பெற்றுக்கொள்ள முடிந்த ஜனா திபதி விஜேதுங்க கட்சியின் தலைமையில் தொடர்ந்தும் இருப்பதை கட்சி உறுப்பி னர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் கட்சியின் ஊடாக தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் நியமிக்கப்படவில்லை. இதனால் இவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டிய நிலையேற்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது கட்சி தோல்வியுறுவதற்குக் காரணமாக இருக்கவில்லை. இதனால் இவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும், இவரைத் தேசியப் பட்டியலின் ஊடாக மூத்த அமைச்சராகத் தன்னை நியமிக் குமாறு ஜனாதிபதி பிரேமதாசவிடம் கோரிக்கை முன்வைப்பதற்கான தகுதி யைப் பெற்றிருந்த போதிலும், ஜே.ஆர். தனது அரசியல் வாழ்விலிருந்து விரு ப்புடன் தானாகவே விலகிக் கொண்டார்.

ஜே.ஆர். கட்சியின் தலைமைப் பொறுப்பையும் பிரேமதாசவிடம் ஒப்படைத்திருந்தார். அதாவது ஜே.ஆர். ஜெயவர்த்தன மிகவும் உன்னதமான முன்னாள் ஜனாதிபதி மற்றும் கட்சியின் சிறந்த தலைவர் என்ற நற்பெயருடன் அரசியலிலிருந்து விலகிக் கொண்டார்.

இதுபோன்றே சந்திரிகா அரசியலி லிருந்து ஓய்வுபெற்ற வேளையில் இவர் தன்னிடமிருந்த கட்சியின் தலை மைப் பொறுப்பை மஹிந்தவிடம் ஒப்படைத்தார்.

வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட பின்னர் எஞ்சியிருந்த தேசியப் பட்டி யல் வெற்றிடத்தை ஈடு செய்வதற்கு சந்திரிகா, மஹிந்தவிடம் ஓர் உடன்பாட்டை எட்டியிருந்திருக்கலாம். ஆனால் சந் திரிகா வெற்றியுடன் நாட்டை ஆண்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் கட்சியின் தலைவர் என்ற புகழுடன் அரசியலி லிருந்து ஒய்வுபெற்றார்.

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹிந்த இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் மீண்டும் பிரதமர் பதவிக்காகப் போட்டியிட்டார். அதாவது தோல்வியுற்ற ஜனாதிபதி ஒருவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பது இதுவே முதற் தடவையாகும். ஏன்? மஹிந்த ஆட்சியிலிருந்து ஒதுங்கி ஓய்வுபெற விரும்பாததே இதற்குக் காரணமாகும்.

ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியுற்றதை ஒப்புக்கொள்வதாக மஹிந்த அறிவித்திருந்தார். இதனையே மீண்டும் ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் மஹிந்த தெரிவித்தார். எனினும், தான் தொடர்ந்தும் செயற்படு அரசியலில் பங்கெடுப்பேன் எனவும் மஹிந்த அறிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்க ளாகிய 95 உறுப்பினர்களைக் கொண்டு அரசாங்கத்தை அமைக்க முடியும் என மஹிந்த கனவு கண்டிருக்கலாம். மைத்திரி மற்றும் ரணில் ஆகியோருக்கு இடையிலான முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும் எனவும் மகிந்த கருதியிருக்கலாம்.

ஆனாலும் தற்போது இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங் கத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணியின் பெரும்பாலான உறுப்பினர் கள் தமது ஆதரவை வழங்கியதுடன் மஹிந்தவின் கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கலாம். பொதுத் தேர்தலில் மஹிந்தவுடன் இணையுங் கள் என அறைகூவிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பி னர்கள், மஹிந்தவை மீண்டும் வெற்றி பெறச் செய்ய முடியும் எனக் கருதினர்.

இவர்கள் மஹிந்தவை வெற்றி கொள்ள வைத்து அமைச்சுப் பதவி களை தமதாக்க முடியும் எனக் கனவு கண்டனர். ஆனாலும் இவர்கள் இரு பது ஆண்டுகளாக அமைச்சர்களாகப் பதவி வகித்து விட்டு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவிரும்பவில்லை. இதனாலேயே மஹிந்தவுக்கு ஆதர வளித்த கட்சி உறுப்பினர்கள் தற்போது தேசிய அரசாங்கத்தில் இணைந்துள் ளனர்.

1994ல் ஐ.தே.க தோல்வியைச் சந்தித்த போது, முன்னாள் ஐ.தே.க அமைச்சர்கள் கூட அமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டனர். அந்த வேளையில் 94 ஆசனங்களைப் பெற்ற ஐ.தே.க தனக்குச் சார்பாக மேலும் உறுப்பினர்களை இணைத்து சந்திரிகாவின் அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டமிட்டனர்.

ரணில் உட்பட ஐ.தே.க தலைவர்கள் ஆறு மாதங்களில் தாங்கள் சந்திரிகா அரசாங்கத்தைக் கவிழ்த்து விடுவோம் என கங்கணங் கட்டினர். இந்த வாய்ப்பை சந்திரிகா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார். இவர் ஐ.தே.க உறுப்பினர்கள் சிலரிடம் அமைச்சுப் பதவிகளை வழங்குவதாக ஆசை காட்டித் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். இது நிலைமையைத் தலைகீழாக மாற்றியது.

ரணில் எறிந்த பந்து மீண்டும் அவரையே பதம் பார்த்தது. பத்து ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகாவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக கடந்த ஓகஸ்ட் தேர்தலில் வெற்றி பெற்ற 95 உறுப்பினர்களும் மஹிந்தவிற்கு ஆதரவளிப்பார்கள் என எவராலும் உறுதிப்படுத்த முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு பிரதமராகப் பதவி வகிக்கலாம் என மஹிந்த விரும்பினால் அவருக்கு மைத்திரியின் ஆதரவும் தேவைப்படும். ஆனால் மைத்திரி ஒரு போதும் மஹிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்க முன்வரமாட்டார்.

அரசியல் யாப்பின் பிகாரம், மஹிந்த அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த உண்மைகள் எல்லாம் தெரியாத ஒரு குழந்தை போல் மஹிந்த நடிக்க முடியாது. இவற்றை ஆராயாத சிலர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் பணியில் மஹிந்த ஈடுபடுவதாக கூற முடியும். இதன் மூலம் மஹிந்த ஆட்சிக்குத் திரும்ப முடியாது என்பதை தற்போதைய அரசாங்கம் நன்கறியும்.

மஹிந்த தனது மகனின் எதிர்கால அரசியலைக் கருத்திற் கொண்டும் தனது குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்களை மறுதலிப்பதற்கும் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.

தான் தேசிய அரசாங்கத்திற்கு எதிரானவன் இல்லை என மஹிந்த தற்போது கூறுகின்ற போதிலும், தனது குடும்ப உறுப்பினர்களை இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து மீட்டெடுப்பதற்கான பணிகளை மஹிந்த மேற்கொள்கிறார் என்பதே உண்மையாகும். இதனை மஹிந்தவிற்கு எதிரான தரப்பினர் எதிர்வுகூறுகின்றனர்.

எவ்வாறெனினும், மகிந்த தொடர்ந்தும் ஸ்ரீலங்காவின் செயற்படு அரசியலில் ஏடுபடுவதானது சீனாவிற்கு நம்பிக்கையை வழங்கியுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.