மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் 22 ஆம் திகதி இலங்கை விஜயம்

ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் 22 ஆம் திகதி இலங்கை விஜயம்

ஜெர்மனிய வெளி விவகார அமைச்சர் டொக்டர் பிரான்க் வோல்டர் ஸ்டின்மியர் இலங் கைக்கு விஜ யம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் இலங் கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜெர்மனிய தூதரகம் அறிவித் துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் 2016ம் ஆண்டு மே மாதம் ஜெர்மன் இலங்கை பயிற்சி நிறுவகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ள நிலையில், நிறுவகத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட உள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]