மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
நிதியியல் மற்றும் கணக்கியல் துறையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்: everjobs.lk அறிக்கை

நிதியியல் மற்றும் கணக்கியல் துறையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்: everjobs.lk அறிக்கை

நிதியியல் மற்றும் கணக்கியல் துறையானது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நிதிக்கட்டுப்பாடு, நிர் வாக மற்றும் பணியமர்த்தல் மாற்றங்களை சந்தித் துவரும் நிலையில், அத்துறையிலான வேலை வாய்ப்புகள் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

எனினும், அண்மைய everjobs  தொழில் அறிக் கையிலிருந்தான தரவுகளின் படி நிதியியல் மற்றும் கணக்கியல் துறையில் அதிகரித்த விகிதத்தில் வேலை வாய்ப்புகள் காணப்படுவது புலனாவதுடன், நிதியியல் மற்றும் கணக்கியல் துறைக்கு அடுத்த படியாக வாடிக்கையாளர் சேவை, தகவல் தொழில் நுட்பம், முகாமைத்துவம் மற்றும் விற்பனை மேம் படுத்தல் துறைகளில் அதிகமான வேலை வாய்ப் புகள் காணப் படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நுஎநசதழடிள.டம இணைய தளத்தி னூடாக கடந்த 06 மாத காலப்பகுதியில் பட்டியலிடப்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்க ளின் தரவுவிபரங் களை தொழில்வாய்ப்பு கணிப்புக ளுடன் ஒப்பிடும் கவனக் குழுக்க ளின் சிபாரிசு களுக்கு அமைவாகவே இந்த தொழில் அறிக்கை யானது தயாரிக்கப்பட்டுள்ளது.

"நிதியியல் மற்றும் கணக்கியல் துறையிலான வேலை வாய்ப்புகள் ஏனைய துறைகளைக் காட்டி லும் மென்மேலும் அதிகரிப் பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது." என everjobs  இலங்கை முகா மைத்துவ பணிப்பாளர் நீல்ஸ் வண் குளுஸ்டர் தெரிவித்தார் ~~உலகளாவிய ரீதியில் வணிகத் துறையானது பாரிய அளவில் அயலாக்கத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலை யில் தொழில் தேடுநர்கள் குறிப்பிட்ட துறைகளிலான தகை மைகளுக்கு மேலதிகமாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் மனிதவள மேலாண்மை தகைமைகளை கொண்டிருக்க வேண் டியது அவசியம்." என நீல்ஸ் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற EDEX அரையாண்டு தொழில் கண்காட்சியில் தொழில் பயிற்றுனர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் முறையான கல்விப் பின்புலம் என்பது அனைத்துக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

பெருமளவான ஆரம்ப நிலை நிறுவனங்கள், ஆளுமை கொண்ட ஊழியர்களையே தொழிலுக்க மர்த்த எதிர்பார்க்கின்றன.

எனது பார்வையில், தொழில் தேடுநர்கள், தொழில் நுட்ப ஆளுமைகளுக்கு அப்பால் சென்ற வர்களாக இருத்தல் வேண்டும். தொழிலை முறையாக முன்னெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பெருமளவு அறிந்திருக்க வேண்டிய தில்லை, அதற்காக தொழில் பயிற் சிகள் வழங்கப்படும். மாறாக, பயில்வதற் கான ஆர்வம் மற்றும் சிறந்த தனிநபர் தகைமைகள், மற்றும் பழக்கவழக் கங்கள் ஆகியவற்றை அவர்கள் கொண்டிருத்தல் போது மானதாகும்."

everjobs இலங்கை, பங்களா தேஷ், மியன்மார், கம்போடியா, கமரூன, செனகல், எத்தியோப்பியா, தன்சானியா, ஐவரிகோஸ்ட் மற்றும் உகண்டா போன்ற நாடுகளில் இயங்கும் ஒன்லைன் தொழில் தளமாகும். 2015 மார்ச் மாதம் ஆரம் பிக்கப்பட்ட இந்த தளமானது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முன்னணி தொழில் தளமாக திகழ எதிர்பார்த் துள்ளது. தொழில் வழங்குநர்கள் மற்றும் விண்ணப் பதாரிகளுக்கு சிறந்த பொருத்தமான தெரிவாக அமைந்துள்ள இந்த தொழில் தளமானது ஆசிய பசுபிக் இன்டர்நெட் குழுமத்தின் பின்புலத்தை கொண்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]