மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21
SUNDAY SEPTEMBER 06 2015

Print

 
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கி சம்பந்தன் வாயை அடைக்க முடியாது

பதவி, அந்தஸ்து, சலுகை, வசதி வாய்ப்புகளுக்கு சோரம் போகிறவர்கள் அல்லர் நாம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கி சம்பந்தன் வாயை அடைக்க முடியாது

தமிழர் தீர்வு வேறு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேறு: இரண்டிற்கும் முடிச்சு போட வேண்டாம்

எனக்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எனும் உயர்ந்த பதவிக்கு உரிய கெளரவ மளித்து இன, மத, மொழி, கட்சி வேறு பாடுகள் எதுவுமின்றி நாட்டு மக்களது நலன் களுக்கு அதி முக்கியத்துவம் அளித்துச் செயற் படுவேன் என்பதை நான் பாராளுமன்றத்தில் வைத்துத் தெளிவாகத் தெரிவித்துள்ளேன்.

அதேவேளை தமிழ் மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எனும் வகையில் கடந்த 30 வருடங்க ளுக்கும், மேலாக இன்னலுற்று இன்றுவரை தம க்கான தீர்வு எதனையும் பெறாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடுவதிலிருந்தும் இம்மியளவும் பின்வாங்க மாட்டேன்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒருபுறம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மறு புறம். இரண்டும் ஒரே இலக்கைக் கொண்டது. எனினும் எவரும் இவை இரண்டையும் வைத்து எனது பணிகளுக்கு தமது இஸ்டப்படி முடிச்சு போடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருப்பதனாலேயே எனக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவி இல் லாமற் போய்விடவில்லை. இதனை இன்னமும் பலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டு சம்பந்தனின் வாய் அடைக்கப்பட் டுள்ளது எனக் கூறுவோ ரும் இருக்கவே செய்கின் றனர். எனக்கு வழங் கப்பட்டது அமைச்சர் பதவி அல்ல. சிலர் கூறலாம் அமைச்சரு க்குரிய அந்தஸ்து, சலுகைகள் எல்லாம் உள்ளது என்று, அவற்றைத் துக்கிக் குப்பையில் போடுங்கள்.

அவற்றை எடுப்பதாக இருந்தால் முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே இருந்து இன்றுவரை பெற்றிருக்கலாம். பதவிகளுக்கும், சலுகைகளுக்கும், வசதி வாய்ப்புக் களிற்கும் பின்னால் செல்பவர்கள் அல்ல நாம். எமக்கு எமது மக்கள் அம்மக்களது உரிமைகள், எமது கொள்கைகள் என்பனவே முக்கியம்.

உண்மையில் இப்போது எனக்கு அதிகளவான அதா வது மேலதிகமான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள் ளதாகவே நான் கருதுகின்றேன். அதாவது இதுவரை காலமும் தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் தொடர்பாகவே நான் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்துள்ளேன்.

இப்போது அக்குரல் முழுநாட்டு மக்களுக்கும் இன, மத, மொழி, கட்சி பேதமில்லாது ஒலிக்க வேண்டியுள்ளது. அதனை நான் சரியாகச் செய்வேன். பாராளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன். எதிர்க்கட்சித் தலைவரான தங்களது முதற் கடமையாக எதனைக் குறிப்பிடுவீர்கள்?

நிச்சயமாக தமிழர்களின் பிரச்சினைக்கு ஏற்கத் தக்க தீர்வு காண்பதே எனது மட்டுமல்ல நம் அனைவரின் முதன்மையான கடமை என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.

தேசியநலனை முன்வைத்துத் தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் பல இருக்கின்றன. ஆனாலும் என் னைப் பொறுத்தவரை தமிழருக்கான தீர்வே எனது முதற் கடமை. அதற்காகவே நாம் இதுவரை காலமும் போராடி வந்துள்ளோம்.

நாட்டில் அமைந்துள்ள தேசிய அரசாங்கம் பற்றி என்ன நினைக்கிaர்கள்?

இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அர சாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம். தேவை யானதொன்றாக நான் பார்க்கின்றேன். இது நாட்டிற்கு நன்மை பயக்கும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசிய அரசாங்கம் மூலமாகத் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். அதுவே உண்மையும்கூட. அதனால் தேவையான விடயங்களுக்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம்.

தங்களது செயற்பாடுகள் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலை வரைப் போலவே அமையும் என பதவியேற்பிற்கு பிறகு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன?

அதில் ஒரு அர்த்தமும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக தம ழராகிய நான் நியமிக்கப்பட்டுள்ளதால் சில இனவாதப் போக்கு டைய சிங்களத் தலைமைகள் ஒரு சந்தேகக் கண் கொண்டு பார்த்தன. அவர்கள் சிங்களவர் ஒருவர்தான் எதிர்க்கட்சித் தலை வராக இருக்க வேண்டும் எனும் குறுகிய மனப்போக்குக் கொண்ட நிலைப்பாட்டில் இருப்பவர்கள். அவர்களுக்கு விளங் கும் வகையிலேயே அப்படிக் கூறினேன்.

எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு எதிராகவே தங்களது முதலாவது குரல் பாராளுமன்றத்தில் ஒலித்தது. அது பற்றி...

ஆம், தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு என்ற திட்டம் சிறந்த உதாரணம் அல்ல. கடந்த காலங்களைப் போன்று அமைச்சரவை கணக்கின்றி அதிகரித்துச் சென்றது போன்ற அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்க கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் குறிப்பிட்டேன். இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில் அமைச்சரவை 30ற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மொத்தம் 70 பேர் மட்டுமே உள்ளனர். இலங்கை தமது அயல்நாடான இந்தியாவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினேன்.

ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் அரசாங்கத்துக்கு ஆதரிப்போம் என்பதன் கருத்து என்ன?

ஆம், எதிர்க்கட்சி என்பதற்காக அரசாங்கம் செய்யும் அனைத்து விடயங்களையும் எதிர்ப்பதாகவே கடந்த கால எதிர்க்கட்சிகளின் வரலாறாக இருந்து வந்துள்ளது. அதனாலேயே பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் காண முடியாதிருந்தது.

 இனி நாம் அரசாங்கம் செயற்படுத்தும் மக்கள் நலன்சார் நல்ல விடயங்களுக்கு எமது ஆதரவை வழங்குவோம். எதிர்க்கட்சிகளுடன் நெருக்கமாக ஒன்றிணைந்து இயங்கி செயல் திறன்மிக்க எதிர்க்கட்சியாக இருக்கப்போவதாக நான் கூறியுள்ளேன். அதேவேளை தேவையேற்படும் போதெல்லாம் அரசுக்கு எதிராக நாங்கள் திறமையானதொரு எதிர்க்கட்சியாக செயற்படுவோம்.

(எஸ். சுரேஸ்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]