மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21
SUNDAY SEPTEMBER 06 2015

Print

 
2ஆம் உலகப்போரில் மாயமான ரயில் கண்டுபிடிப்பு

2ஆம் உலகப்போரில் மாயமான ரயில் கண்டுபிடிப்பு

ரஷ்யா உரிமை கோரியது

2ஆம் உலகப் போரின் போது 1945ம் ஆண்டு போலந்து நாட்டில் ஜேர்மனியின் ஹிட்லர் படைக்கு சொந்தமான ரயில் ஒன்று கசியாஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் சுரங்க பாதைக்குள் சென்ற போது மாயமானது. அதன் பிறகு அந்த சுரங்க பாதையும் இடிந்து நாசமானது.

அந்த ரயிலில் 300 தொன் தங்கம் மற்றும் ஏராளமான வைரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ரயிலை கண்டுபிடிக்க ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் நடந்தன. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அந்த ரயில் புதைந்து கிடக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஜேர்மனி மற்றும் போலந்தை சேர்ந்த இருவர் இதை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனாலும் ரயிலை முழுமையாக தோண்டி எடுக்கவில்லை. அந்த ரயிலில் உண்மையிலேயே தங்கம் இருக்கிறதா என்பதும் இதுவரை உறுதி செய்யப் படவில்லை.

இதற்கிடையே ரஷ்யா இந்த ரயில் எங்கள் நாட்டில் இருந்து பொருட்களை ஏற்றி சென்றது. எனவே, அதில் இருக்கும் பொருட்கள் எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி உள்ளது.


இறந்ததாக எண்ணி உயிருடன் புதைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்:

மீட்கப்பட்டும் பயனில்லாமல் போன பரிதாபம்

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்ததாக எண்ணி உயிருடன் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

கர்ப்பிணியான இவர் சம்பவத்தன்று வீட்டின் வெளியில் உள்ள கழிவறைக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் அவர் மயக்கமடைந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நெய்சி இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர். இதனையடுத்து திருமண ஆடையுடுத்தி அவரை அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் அடுத்த நாள் சமாதியில் நெய்சியின் குரல் கேட்டதையடுத்து தனது மனைவி இறக்கவில்லை என்றும் சமாதியை திறக்க வேண்டும் என்றும் அவரது கணவர் கூறினார்.

இதையடுத்து சமாதியை உடைத்து பார்த்தபோது நெய்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடல் முதலில் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.


குள்ளமாக இருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் நன்றாக சண்டைபோடுவீர்கள்

ஆண்களில் குள்ளமாக இருப்ப வர்கள் சண்டைகளில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜpயா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு ஆணையம் மூலம் சுமார் 600 ஆண்களிடம் நடத் தப்பட்ட கணக்கெடுப்பில் பொதுவாக இருக்கும் ஆண்களை விட உயரம் குறைவான, கட்டுடல் இல்லாதவர்கள் வெறும் கைகளால் அடித்தோ, ஆயுதங்களால் தாக்கியோ சண்டைபோடும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஷார்ட் மேன் சிண்ட்ரோம்" என்று அழைக்கப்படும் இந்த மன பாதிப்பால், அவர்கள் மிகவும் கொடுமையான மனது கொண்ட வர்களாக மாறிவிடுகின்றார்கள். புறக்கணிப்பும், தவறான வார்த் தைகளுமே அவர்களை இப்படி மாற்றிவிடுவதாக ஆய்வு தெரிவி த்துள்ளது.


தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளை கண்டுபிடிப்பு

செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்தும் ஆய்வின், அடுத்த கட்ட பாய்ச்சலாக தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கி ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

கிழக்கு சைபீரியாவில் உள்ள டோம்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள், ஜெர்மனி, பல்கேரியா, உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து செய்த ஆய்வை நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினர். அதன்படி, இவர்கள் புதிதாக ஒரு மின்னணு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த சாதனம் தனக்குத்தானே கற்பித்துக் கொள்வதுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி எதிர்வினை செய்யும் திறன் கொண்டது.

இதில் என்ன சாதனை இருக்கிறது என்கிaர்களா? இப்படி ஒரு சாதனத்தை வடிவமைக்க வேண்டுமானால் அது மூளையில் உள்ள கோடானுகோடி நுண்ணிய நரம்புகளோடு இணைந்து செயல்புரிய வேண்டும்.

பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த பிரச்சினையில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளனர். இவர்கள் செய்ததில் முக்கியமான சாதனை மூளை நரம்பு அமைப்பு தொடர்பாக இதுவரை அறியப்படாமல் இருந்த மர்மத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடலில் உள்ள இயற்கையான மூளையானது வெளிச்சம், நகரும் பொருட்கள் என்று வெளிப்புறம் சார்ந்த வாழ்வனுபவங்களை கவனித்துக் கொள்ளும். விஞ்ஞானிகள் செயற்கையாக உருவாக்கியுள்ள இந்த மின்னணு சாதனம் நினைவுகளை பதிந்து வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் நினைவூட்டும்.

இதன் மூலமாக டிமென்சியா (கடுமையான ஞாபக மறதி) அல்சைமர் நோய், பார்கின்சன் போன்ற நோய் பாதித்தவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் வாழ முடியும். மேலும் இது எதிர்காலத்தில் செயற்கை அறிவு கொண்ட ரோபோவை உருவாக்குவதிலும் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.


 

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]