மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21
SUNDAY SEPTEMBER 06 2015

Print

 
பாராளுமன்றத்தில் புதிய அரசியல் கலாசாரம்

பாராளுமன்றத்தில் புதிய அரசியல் கலாசாரம்

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி

தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பதவியேற்பு 2001 திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

பிறப்பு : பெப்ரவரி 5 1933 (அகவை 82)

அரசியல் கட்சி : இலங்கைத் தமிழரசுக் கட்சி

பிற அரசியல் சார்புகள் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

வாழ்க்கை துணைவர் : லீலாதேவி

பிள்ளைகள் : சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி

இருப்பிடம் : கொழும்பு 5, இலங்கை.

படித்த கல்வி நிறுவனங்கள்: யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி, புனித செபஸ்தியான் கல்லூரி, இலங்கை சட்டக் கல்லூரி,

தொழில் : வழக்கறிஞர்

சமயம் : சைவ சமயம்

இனம் : இலங்கைத்தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம்

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அரசியலில்

சம்பந்தன் 1977ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.

இலங்கை அரசியலமை ப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜுலை நிகழ்வுகளில் மூவா யிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் காடையர்களினால் படுகொலை செய் யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.

2001ஆம் ஆண்டில் த.வி.கூ அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட் சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்) டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர் தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டு தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு த.வி.கூ தலைவர் வி. ஆனந்த சங்கரி எதிர்ப்புத் தெரி வித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்துடன் 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்த சங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

2004, 2010, 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

8 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அறிவிக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தமது கட்சியின் சார்பில் ஒருவரை பெயரிடாததானல் சம்பந்தன் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.

1977 ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதலாவது தமிழர் அமிர்தலிங்கம் ஆவார். அதன் பின்னர் புதிய பாராளுமன்றில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப்பட்டுள்ளார்.


 

புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய

சபாநாயகராக பதவியேற்பு: 1 செப்டம்பர் 2015

புத்தசாசன, பொது நிருவாக அமைச்சர்

(12 ஜனவரி 2015 - சபாநாயகர் பதவி பெறும் வரை)

பொது நிருவாக, உள்ளூராட்சி அமைச்சர் (2007-2008),

மின்வலு, ஆற்றல் அமைச்சர்

(12 டிசம்பர் 2001-06 ஏப்ரல் 2004)

ஜெர்மனிக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர்,

கொழும்பு மாநகர முதல்வர்,

மேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர்

பிறப்பு: 29செப்டம்பர் 1940 (அகவை 74)

அரசியல் கட்சி: ஐக்கிய தேசியக் கட்சி

படித்த கல்வி நிறுவனங்கள்: ஆனந்தா கல்லூரி, கொழும்பு.

பணி: அரசியல்வாதி

தொழில்: தொழிலதிபர்

சமயம்: தேரவாத பெளத்தம்

எட்டாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜெயசூரிய ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபாலவும் குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதனும் வாக்கெடுப்பு நடத்தப்படாது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

8வது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு கடந்த முதலாம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது சபாநாயகர் பதவிக்காக ஐ.தே.க தேசியப்பட்டியல் எம்.பி கரு ஜெயசூரியவின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்ததோடு, இதனை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி. சில்வா வழிமொழிந்தார்.

வேறு எவரின் பெயரும் சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்கப்படாத நிலையில் 8ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

புதிய சபாநாயகருக்கு எம்.பிக்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி தமது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தனர். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி. சில்வாவும் புதிய சபாநாயகரை அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தார்கள்.

புதிய சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் முன்னிலையில் பதவி ஏற்கும் நிகழ்வு அடுத்து இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

எம்பிக்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட கரு ஜெயசூரிய கொழும்பு மாநகர சபை முதல்வராகவும், மேல் மாகணசபை எதிர்க்கட்சி தலைவராகவும், வெளிநாட்டுத் தூதுவராகவும், அமைச்சராகவும், ஐ.தே.க தலைமைத்துவ சபைத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். நீண்ட அரசியல் அனுபவமுள்ள அவர் இம்முறை ஐ.தே.கவின் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.

கரு ஜயசூரிய, கம்பஹா மாவட்டத்தின் ஹாப்பிட்டிகம கோரளையில் மீரிகம பிரதேசத்தில் புகழ்பெற்ற வர்த்தக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயசூரிய குடும்பத்தின் மூத்த புதல்வராக பிறந்தார்.

தாய் வழியானது அத்தனகல்லை பண்டாரநாயக்கர்களுடன் போட்டியிட்ட செனவிரத்ன குடும்பத்தை சேர்ந்த பலமான அரசியல் உரிமையும் கரு ஜயசூரியவுக்கு கிடைத்தது.

ஆரம்ப கல்வியை மீரிகம கந்தன்கமுவ மகாவித்தியாலயத்தில் கற்ற ஜயசூரிய, கொழும்பு ஆனந்த கல்லூரியில் உயர்கல்வியை பூர்த்தி செய்தார்.

பிரித்தானியாவின் பட்டய கணக்காளர் நிறுவனத்தில் மேலதிக கல்வியை பெற்ற அவர், அதன் பின்னர், லண்டன் போல்டிக் எக்ஸசேஞ்ச் நிறுவனத்தில் வர்த்தகப் பொருள் விற்பனை தொடர்பான மேலதிக கல்வியை கற்றார்.

பிரான்சில் உள்ள ஐரோப்பிய வணிக கல்லூரி மற்றும் இன்சியட் நிறுவனத்திலும் உயர் நிர்வாக கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கருஜயசூரிய, பொருட்களை எடுத்துச் செல்லுதல், போக்குவரத்து தொடர்பான பட்டய நிறுவனத்தில் விருது பெற்ற உறுப்புரிமையும் பட்டய தொழில் முகாமைத்துவ நிறுவனத்தில் விருது பெற்ற உறுப்புரிமையும் கிடைத்தது.

அதேவேளை அதிகாரியாக 1965ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட ஜயசூரிய 1972ஆம் ஆண்டு வரை இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 1972ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மருத்துவரான வசந்தா குணசேகர ஓவிட்டிகல என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் வர்த்தக துறையில் ஈடுபட்டு அதி திறமையான முகாமையாளராக பரிணமித்த கருஜயசூரிய, குறுகிய காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழை பெற்றார்.

நாளுக்கு நாள் முகாமைத்துவ துறையில் நிபுணத்துவம் பெற்று புகழ்பெற்ற கருஜயசூரிய 52 முன்னணி நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் தலைவராகவும் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளராக தேசமான்ய என்.பி.பி. பண்டித்தரத்ன அணியின் பின் வரிசை உறுப்பினராக இருந்த கரு ஜயசூரிய, இளம் வயதிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடான அரசியலில் கால்பதித்தார்.

1977 புரட்சியின் பின்னர், வேகமாக உயிரூட்டப்பட்டு எழுந்து வந்த பாரிய பொருளாதார முகாமைத்துவப்படுத்தலில் முக்கிய நிறுவனமாக இருந்த, தனியார் மயப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக கருஜயசூரிய, ஜே. ஆர். ஜயவர்த்தன அரசினால் நியமிக்கப்பட்டார்.

1977ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு பதிலாக அரச மற்றும் தனியார் துறையை இணைந்த பொருளாதாரத்திற்கான பகிரங்க வழியை சர்வதேசத்திற்கு திறந்து விடுவதே ஜயவர்த்தனவின் நோக்காக இருந்தது.

இந்த கொள்கையை செயற்படுத்தும் கேந்திர நிறுவனமாக இருந்த பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு, தனது பரீட்சாத்த நடவடிக்கை ஆரம்பித்ததுடன் இரண்டு கொரிய நிறுவனங்களுடன் இணைந்து கொரியா சிலோன் புட்வெயார் நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனம் இரண்டு வருடங்களில் தோல்வியடைந்த நிலையில், இரண்டு நாடுகளின் இணக்கத்துடன் அந்த நிறுவனத்தின் புதிய தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டார். அப்போது 2.50 ரூபாவாக இருந்த நிறுவனத்தின் பங்குகளை 280 ரூபா வரை உயர்த்த குறுகிய காலத்தில் கருஜயசூரிய நடவடிக்கை எடுத்தார்.

 ஒரு காலத்தில் உலக காலணி உற்பத்தி நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக இந்த நிறுவனம் காணப்பட்டது.

 


குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

தலைவர், தமிழர் விடுதலை இயக்கம்

பதவி யேற்பு: 1986 முன்னைய தலைவர் சிa சபாரத்தினம்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் உள்ளார்

பதவி யேற்பு : 2000

பிறப்பு: அமிர்தநாதன் அடைக்கலநாதன்

ஜூன் 10 1962 (அகவை 53)

விடத்தல் தீவு

அரசியல் கட்சி: தமிழர் விடுதலை இயக்கம்

பிற அரசியல் சார்புகள்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சமயம்: கத்தோலிக்கம்

இனம்: இலங்கைத் தமிழர்

அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பி னரும் ஆவார். இவர் தமிழ் விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலை வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலநாதன், தனது 15 வது வயதில் டெலோ இயக்கப் போராளியாக இணைந்தார். டெலோ இயக்கத் தலைவர் சிa சபாரத்தினம் 1986மே 5 இல் கொல்லப்பட்டதை அடுத்து செல்வம் அடைக்கலநாதன் அவ்வியக்கத்தின் தலைவரானார்.

அரசியலில்

அடைக்கலநாதன் வன்னி மாவட்டத்தில் டெலோ கட்சியின் சார்பில் 2000ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

2001ம் ஆண்டில் டெலோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) என்ற அரசியல் கூட்டணியை ஆரம்பித்தன. அடைக்கலநாதன் 2001 தேர்தலில் வன்னி மாவட்டத்தில் த.தே.கூ சார்பில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்¦டுக்கப்பட்டார். பின்னர் 2004, 2010, தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

இம்முறை பொதுத்தேர்தலில் (2015)வன்னி மாவட்டத்தில் 26,397 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்த அவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் குழுக்களின் பிரதித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்வு இலங்கையின் தேசிய அரசியலில் தமிழர் அரசியலில் மற்றுமொரு திருப்பு முனையாகக் கருதப்படுகின்றது.

தமிழ் விடுதலை இயக்கம் டெலோ வின் 8 ஆவது தேசிய மகாநாடு 2013இல் நடைபெற்போது. செல்வம் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழர் அரசியல் தொடர்பில் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்ததாவது,

கட்சி பேதங்களையும் நடைமுறைக் கொள்கை வேறுபாடுகளையும் துறந்து, அர்த்தமற்ற முரண்பாகளுக்குள் சிக்குண்டு நிற்காமல், நாம் ஒன்றுப்பட்டுச் செயற்பட வேண்டும்.

அத்தகைய ஓர் ஒற்றுமையின் அவசியம் கருதியே 12 ஆண்டுகளுக்கு முன்னர் எமது கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துமே மக்களுக்காக உருவானவை.

அவற்றில் பெரும்பான்மையானவை எமது மக்களுக்காக ஆயுதப் போராட்ட இயக்கங்களாக உருவெடுத்தவை. ஆனாலும், காலத்தின் தேவை கருதி தத்தமது தனித்துவங்களில் விட்டுக்கொ டுப்புகளைச் செய்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரே அணியாக நாம் இணைந்தோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரே அணியாக நாம் இணைந்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை இன்னும் இறுக்கமானதாக ஆக்கி வைத் திருக்க வேண்டியதே எம் அனைவருக்கும் இன்று அவசியமானதாக உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, அதற்குப் புதிய ஒரு காத்திரமான வடிவத்தை நாம் கொடுக்க வேண்டும்.

வெறும் தேர்தல் கூட்டு என்ற நிலையில் இருந்து, தமது மக்களை உண்மையா கவே பிரதிநிதித்துவம் செய்யும் பதிவு செய்யப்ப ட்ட ஓர் அதிகாரபூர்வமான அரசி யற் கட்சி என்ற புதிய வளர்ச்சியை உருவா க்க வேண்டும். அதனை அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாம் எல்லோ ருமாகச் சேர்ந்தே தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும்.

அத்தகைய ஒரு வளர்ச்சியை நோக்கிய நகர்வில், எமது இனத்தின் ஒற்றுமைக்காக, நாம் மேலும் விட்டுக்கொடுப்புக ளைச் செய்ய வேண்டிய ஏற் படலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக, தன்னால் முடிந்த எந்தகைய விட்டுக்கொடுப்பைச் செய்வதற்கும் தமிழ் விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது.

அதே சமயத்தில், அதே ஒற் றுமை மனப் பாங்குடன் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் செயற்பட வேண்டும் என எமது கட்சி எதிர்பார்க்கின்றது.

அத்துடன் எனக்கு கிடைத்தி ருக்கும் இந்தப் பதவி தமிழ்ச் சமூகத்துக்கு கிடைத்த கெளரவமாகவே நான் கருதுகின்றேன் அத்துடன் எனக்கு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களுக்கும் எனது இதயயூர்வமான நன் றிகளைத் தெரிவிக்கின்றேன்.

 

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]