மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
எந்த எண்காரர்கள் அதிகமாக விவாகரத்து பெறுகிறார்கள்

எந்த எண்காரர்கள் அதிகமாக விவாகரத்து பெறுகிறார்கள்

இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து வரும் வாசகர்களுக்கு இப்போதெல்லாம் நிறையவே சந்தேகங்கள் வர ஆரம்பித்திருக்கிறது. தினமும் இரண்டு மூன்று பேராவது தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுகிறார்கள்.

ஒருவர் இப்படியும் ஒரு கேள்வி கேட்டார். “சேர் ஜாதகத்திற்கும் எண் சோதிடத்திற்கும் என்ன வித்தியாசம்?”

இப்படிக் கேட்டவருக்கு நான் சில விளக்கங்களைக் கொடுத்தேன். அந்த விளக்கங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஜாதகம் என்பது கணிப்பு, எண்சோதிடம் என்பது கணக்கு, கணிப்புகள் சிலவேளை தவறலாம் ஆனால் கணக்கு என்பது எப்போதும் தவறுவதில்லை.

ஆனாலும் இதில் ஓர் ஆபத்து இருக்கிறது. அது என்ன தெரியுமா? கணக்குத் தெரியாதவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டும் இந்தத் துறைக்கு வந்த இதுவும் பொய்யாகிவிடும். ஒருசிலர் இன்று இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் எண்சோதிடம் என்ற கணக்கையே சிலர் இன்று நம்ப மறுக்கிறார்கள். என்னுடன் தொடர்பு கொண்டு கதைத்தபோது பலரும் இதைத் தெரிவித்தார்கள்.

இதேபோல் தான் ஜாதகம் பார்ப்பதிலும் நடக்கிறது. இதற்கு நல்ல எடுத்தக்காட்டொன்றை சொல்லுகிறேன் பாருங்கள்.

பொதுவாகவே இந்த ராசிபலன்களை எல்லாம் நான் பார்ப்பதில்லை கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை வந்த மூன்று தேசிப் பத்திரிகைகளையும் எடுத்து எனது ராசிப்பலனைப் பார்த்தேன்.

வியப்பு விழிகளை விழுங்கியது. பணவரவு, உடல் நலக்குறைவு நண்பர்களால் பிரச்சினை, திருமணம் நடக்கும் என்று ஒரு பத்திரிகையில் இருந்தது. செலவு, உடல் நலம் சீராக இருக்கும் நண்பர்களால் நன்மை, திருமணம் தடைப்படும் என்று இன்னொரு பத்திரிகையிலும், வரவிற்கேற்ற செலவிருக்கும், அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படும். திருமணப் பேச்சுவார்த்தை நடக்கும், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என்று ஒரு பத்திரிகையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த பத்திரிகையில் வந்த ராசி பலனை நம்புவதென்று தெரியாமல் நான் தடுமாறிப் போனது தான்.

“ஏன் இப்படி எழுதுகிறார்கள். ராசிபலன் என்றால் ஒரே பலன்களாகத்தானே இருக்க வேண்டும். பத்திரிகைக்கு பத்திரிகை இது எப்படி வித்தியாசப்படுகிறது” என்று எனக்குத் தெரிந்த ஜோசியர் ஒருவரிடம் கேட்டேன்.

“இல்லை.... அதுவந்து... பொதுவான ஒரு பலனைத் தான் அவர்கள் கணித்து எழுதுகிறார்கள். அதில் சரியானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று அவர் சொன்னார். இதற்குமே அவருடன் இது பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.

எண் சோதிடத்தை முறையாகக் கற்றவர்களிடம் இப்படியான தவறு ஏற்படுவதில்லை என்பதுதான் என் முடிவாக இருக்கிறது. எந்த எண்காரர்கள் அதிகமான விவாகரத்தைப் பெறுகிறார்கள். என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.

இது தொடர்பாக சிறிய ஆய்வொன்றை நான் செய்து பார்த்தேன். அதில் 7ஆம் எண்காரர்கள் தான் அதிகமாக விவாகத்தைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அடுத்தபடியாக 6ஆம் எண்காரர்களைச் சொல்லலாம்.

இவர்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட உறவுகள் கண்டிப்பாக ஏற்படும். இதில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக இருப்பார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா?

இவர்கள் ஆண்களை அடக்கி ஆள விரும்புவார்கள். இதனால் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை போய் விடுகிறது. 7ஆம், 6ஆம் எண்காரர்களின் தாம்பத்திய வாழ்வில் அடிக்கடி பிரச்சினை ஏற்படும் என்று பொதுவான ஓர் அபிப்பிராயமும் இருக்கிறது.

இந்த விஷயத்தில் நீங்கள் இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். அதாவது,

7ஆம் எண் பிறந்த திகதியில் இருந்தால் மட்டும்தான் இந்தப் பிரச்சினை என்று எண்ணி விடாதீர்கள். பிறந்த திகதியில் எந்த இடத்தில் அதாவது மாத, வருடம், விதி எண் போன்ற இடத்தில் இருந்தாலும் இந்திய பிரச்சினை ஏற்படும்.

இவர்கள் தங்கள் பெயரை அதிர்ஷ்ட எண்ணுக்கு மாற்றிக் கொண்டால் பிரச்சினைகள் பின்னோக்கிச் செல்லும்.

அடுத்த வாரமும் பயனுள்ள ஆக்கமொன்றுடன் சந்திக்கும் வரை ஐயங்களைப் போக்கிக் கொள்ள அழுத்த வேண்டிய எண்கள் 0777686741


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]