மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
மறைந்த மா மேதை டாக்டர் அப்துல
மறைந்த மா மேதை டாக்டர் அப்துல் கலாம் அவர்களை நினைவுகூர்ந்து இலங்கையில் முதல் ஆரம்ப நிகழ்வாக சிரேஷ்ட எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஸ்குமார் தலைமையில் கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது வாசிக்கப்பட்ட கவிதை

ஓர் ஒப்பாரி பாட

வரவில்லை

உங்களை

ஒப்பிட்டுப் பார்க்க

வந்தேன்

அப்துல் கலாம்

அவர்களே

இந்தியாவுக்கே

உப்பிட்ட உங்களை

ஒப்பிட்டுப் பார்க்க

வந்தேன்

அவன் அள்ளி வழங்கிய

பாரி

நீங்களோ மக்களுக்காய்

எல்லாவற்றையும் வைத்துவிட்டு

கொஞ்சமாய்

கிள்ளி எடுத்த

பாரி

அவர்கள்

அணு அணுவாய்

அனுபவித்தார்கள்

நீங்கள்

ஜனாதிபதியாய் வாழ்ந்திருக்கிaர்கள்

பலர்

செத்துப் போயிருக்கிறார்கள்

இந்தியாவுக்கே

குடை பிடித்த நீங்கள்

கிழிந்த குடை தைக்கும்

சகோதரருக்காய்

ஒரு

கடை கூட திறக்காமல்

ஆபிரகாம் லிங்கன்

ஜனநாயகத்துக்கு

வரைவிலக்கணம்

சொல்லப்போய்

வார்த்தைகளை

வீணாக்கியுள்ளார்

மக்களின்

மக்களால்

மக்களுக்காக என்று

உங்களைக் கண்டிருந்தால்

அது

அப்துல் கலாம் என்றிருப்பார்

அப்துல் கலாமே

உங்களோடு ஒப்பிடுவதற்கு

உங்கள் அருகில் கூட

ஒருவருமில்லையே

அதனால் நான்

ஒப்பிட்டுப் பார்க்க வரவில்லை

உங்களுக்கில்லா

ஒப்பாரி யாருக்கென்று

ஓர்

ஒப்பாரிப் பாடத்தான்

வந்தேன்

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]