ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
அநீதியான முறையில் பணம் வசூலிப்பா?

தரம் 1இல் பிள்ளைகளைச் சேர்க்கும் போது

அநீதியான முறையில் பணம் வசூலிப்பா?

அழையுங்கள் 1988 என்ற இலக்கத்திற்கு

பெற்றார்களிடம் அநீதியான முறையில் பணம் வசூலிக்கும் அதிபர்கள் குறித்து மாகாண சபைகளிடமோ அல்லது கல்வி அமைச்சின் 1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது பல்வேறு காரணங்களைக் கூறிப் பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கும் அதிபர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.கட்டட நிர்மாணம், நிறப்பூச்சு பூசவென்று பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கு எதிராக தண்டனை விதிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் போது பணம் வசூலிக்க வேண்டாம் என அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நேற்று அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் கட்டடங்களை நிர்மாணிக்கவும், நிறப்பூச்சுக்களை பூசுவதற்காகவும் என தெரிவித்து பணம் வசூலிக்கும் நடவடிக்கையை முற்றாக நிறுத்துமாறு கல்வி அமைச்சர், அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர்களுக்கான வசதிக் கட்டணங்களை அறிவிடுவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]