ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
முத்தரப்பு ஒருதின கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது

முத்தரப்பு ஒருதின கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது

ஹோபார்ட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் இயான் பெல் அபாரமாக விளையாடி 125 பந்துகளில் ஒரு சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்து வென்றது.

அணியின் இளம் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 95 பந்துகளில் ஆட்டமிழக்காமல் ஒரு சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா முன்னேறியது.

ஒரு கட்டத்தில் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியால் கடைசி கட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரன் குவிக்க முடியவி ல்லை. சுருக்கமான ஸ்கோர்: இங்கிலாந்து: 50 ஓவர்களில் 303-8 (மோயீன் அலி 46, இயான் பெல் 141, ஜோ ரூட் 69, குர்விந்தர் சாந்து 2-49).


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]