ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
பெண்கள் இடது பக்கம் தான் மூக்குத்தி அணிய வேண்டுமா?

பெண்கள் இடது பக்கம் தான் மூக்குத்தி அணிய வேண்டுமா?

இடப்பக்கம்தான் வலப்புறமும் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும். மூககு குத்துவது காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியெற்றுவதற்கு ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயற்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.

இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல்படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய மூக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல்படவைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும் போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.

இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும் ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு தூவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அது மட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு தூவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவப் பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சில விதமான வாயுக்கள் இருக்கும்.

இந்த வாயுக்களை வெளிக்கொண்டு வருவதற்கு ஏற்படுத்தப்பட்டது தான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன.

இடப்பக்கம் தான் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனை சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிரார்த்தனையில் ஈடுபட உதவுகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]