ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
வாடிக்கையாளர் நோக்கிய சந்தைப்படுத்தல் செயல்முறையின் முக்கியத்துவமும் அதனை அமுல்படுத்தலும் : முயற்சியாளர்களுக்கான ஒரு வழிகாட்டல்

வாடிக்கையாளர் நோக்கிய சந்தைப்படுத்தல் செயல்முறையின் முக்கியத்துவமும் அதனை அமுல்படுத்தலும் : முயற்சியாளர்களுக்கான ஒரு வழிகாட்டல்

(கடந்தவாரத் தொடர்)

மாறாக தடைகள் சிறப்பான முறை யில் பயன்படுத்தி எதிர்வு கொள்ளப் படுகின்ற போது சந்தைபடுத்தல் நோக்குநிலையினுடாக நிறுவனமானது அதிகரிக்கப்பட்ட சொத்துக்கள் மீதான திரும்பல்கள், விற்பனைகள், இலாபத் தன்மை, புதிய பொருளின் வெற்றி என்பனவெற்றை அடையமுடியும்.

சந்தைபடுத்தல் தந்திரோபாயம்

(Marketing Strategy)

சந்தைபடுத்தல் கலவை (Marketing Strategy) நிறுவனத்தின் சந்தைபடுத்தல் கருவிகளாகும். இவை ஒரு விற்ப னையாளர் பார்வையில் பொருள், விலை, மேம்படுத்தல் மற்றும் இடம் என்பவற்றை உள்ளடக்குகின்றது. நுகர்வோர் நோக்கில் இருந்து பார்ப்போமாயின் சந்தைபடுத்தல் கல வையில் உள்ள ஒவ்வொரு மூலமும் நுகர்வோர் நன்மையினை வழங்குவ தற்காக வடிவமைக்கப்பட்டு இருக் கின்றது. இதனை பின்வருமாறு கூறலாம்.

பிரதானமாக நிறுவனத்தின் செயற ;பாட்டுக்கு சந்தைபடுத்தல் கலவையின் பங்களிப்பு அவசியமாக காணப்படு கின்றது. மேலே துண்டமாக்கலில் கூறப்பட்டது போன்று சந்தைபடுத்தல் கலவையினை சந்தைபடுத்துனர்கள் தமது இலக்கு சந்தைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுதல் வேண்டும்.

நிறுவனம் தனது பொருட்களை சந்தைபடுத்துவதாயின் ஒரு சிறந்த தந்திரோபயத்தை உருவாக்குதல் வேண்டும். அவ்வாறு உருவாக்க வேண்டுமாயின் மேற்கூறப்பட்ட துண்ட மாக்கல், இலக்குப்படுத்தல், இடம் பதிதல்மற்றும் சந்தைபடுத்தல் கலவை ஆகியவற்றை ஒன்றிணைத்தல் அவசியமானதாக காணப்படுகின்றது. செயற்திறன் வாய்ந்த சந்தைபடுத்தல் தந்திரோபாயமானது ஒரு உண்மை யான வாய்ப்பினை பிரதிபலிக்கின்ற சந்தைபடுத்தல் கலவையினை இல க்கு சந்தைக்;கு ஏற்படுத்த வேண்டும்.

இந்த செயல்முறையில் சந்தைபடுத் துனர்கள் சந்தையினை முழுமையாக விளங்குதல் வேண்டும். வாடிக் கையாளர் தேவையினையும் தற் போதைய மற்றும் எதிர்கால போட்டி யாளர்ளையும் நிறுவனத்தின் வளங் களையும் நோக்கத்தினையும் கவன மாக ஆய்வு செய்வதனால் இச்செயல் முறை மேலும் மேம்படுத்தப்படும். அதேபோல் வெளியக சூழலில் காணப்படுகின்ற சாதகமான மற்றும் பாதகமான காரணிளும் போக்குகளும் வாய்ப்புக்களை கவர்சியுடையதாக அல்லது குறைவான கவாச்;சி உள்ள தாக மாற்றலாம். இலக்கு சந்தை யின் பொருத்தமான பரிபாலனங்கள் நிறுவனத்தின் சந்தைபடுத்தல் கல வையினை தீர்மானிக்கின்றன.

எனவே இலக்கு சந்தையின் தேவை களையும் மனப்பாங்கினையும் ஒரு நிறுவனம் முழுமையாக அறியு மேயானால்சந்தைபடுத்தல் கலவை களை ஒன்றிணைப்பது இலகுவானதாக அமையும். அதாவது சந்தைபடுத்து னர்கள் இலக்கு சந்தையினை முழு மையாக விளங்குகின்ற போது போட்டியாளர்களின் சந்தைபடு த்தல் கலவையிலும் பார்க்க மேன்மையாக தங்களது சந்தை படுத்தல் கலவையினை உரு வாக்கலாம். இது நிறுவனத் துக்கு ஒரு திருப்புமுனையான வாய்ப்பினை ஏற்படுத்தி நிறுவ னத்தின் விற்பனை அதிகரித்து இலாப மும் கணிசமான அளவு அதிகரிக்க வழிசமைக்கும்.

எனவே சந்தைபடுத்தல் கலவை தொடர்பான தந்திரோபாய தீர்மான பகுதிகளை மிகவும் கவனமாக சந்தை படுத்துனர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சந்தைபடுத்தனர்கள் சேவை அல் லது பொருளை சந்தைபடுத்துப வர்களாக இருக்கலாம். சிறு அல்லது பெரிய முயற்சியாளராக இருக்கலாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]