ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
நாட்டின் நகரமயமாக்கல் தொடர்பாக ஆராயும் முன்னணி ஆதன சந்தைப்படுத்தல் தளம் Lamudi.lk

நாட்டின் நகரமயமாக்கல் தொடர்பாக ஆராயும் முன்னணி ஆதன சந்தைப்படுத்தல் தளம் Lamudi.lk

ஆசியாவில் துரித வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்பதன் அடிப்படையில் ஏனைய வளர்ச் சியடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மந்த நிலையிலான் நகரமயமாக்கலை கொண்டி ருக்கின்ற அதேவேளை பிரம்மிக்கத்தக்க மனிதவள வளர்ச்சியினைக் காட்டி நிற்கின்றது.

குறித்த விடயம் தொடர்பில் கரிசனையும் ஆர்வமும் கொண்ட Lamudi லங்கா நிறுவன மானது, ஆதன தேடுகை ஆர்வலர்களின் நலன் கருதி இது தொடர்பான ஆய்வு முடிவுகளை புள்ளிவிபரங்களுடன் மேற்கொண்டுள்ளது. குறித்த ஆய்வானது புதிய ஆண்டிற்கான முத லீட்டு திட்டங்களுக்கு பெரிதும் துணையாக விருக்கும் என நம்பப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் 2014 ம் ஆண்டிற்கான நகரமயமாக்கல் அறிக்கையின் அடிப்படையில், நாட்டின் நகர்புற சனத்தொகையானது 18மூ இனை தொடுகின்றது. இது பிராந்திய வளர்முக நாடுகளிடையே வேறுபட்ட விகிதத்தினை காட்டி நிற்கின்றது. இது தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் நகர மயமாக்கமானது 1970 ல் (19.51மூ) அதி உச்ச வீதத்தினை தொட்டிருந்தது, மேலும் ஒருபோதும் இல்லாதவாறு 2010 ல் மிகக்குறைந்த 15.04மூ இனை காட்டுகின்றது. இதுவே உலகின் மிக குறைந்த நகரமயமாக்கல் வளர்ச்சியினைக் காட்டுகின்ற நாடாக திகழ்ந்தது. ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் உலகலாவிய நகரமயமாக்கல் வீதமானது கடந்த தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைக் காட்டுகின்றது. 2014 ம் ஆண்ட ளவில் அண்ணளவாக 54மூ அல்லது அதற்கு மேற்பட்ட சனத்தொகை யானது நகர்புறங்களில் வாழ்கின்றன. இதேவேளை இலங்கையில் 80மூ இற்கும் மேற்பட்ட சனத்தொகை நகர்புறமற்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற அதேசமயம் மனிதவள வளர்ச்சியில் அதிஉச்ச சுட்டி யினை 2014 ல் காட்டுகின்றது.

மேற்குறிப்பிட்ட நிலமைக்கான காரணி களை விளக்குகின்றது நாட்டின் பிரதான ஆலோசனை மற்றும் முகாமைத்துவ நிறுவனமான ஜ{பிடர் கெபிடல் பங்கா ளர்கள். பிரதான காரணிகள் ஒன்றாக சமூக உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் கைத்தொழிலாக்கத்தின் பின்தங்கிய நிலையும் காணப்படுகின்றது. மேலும் பெரும் பாலான வீடுகள் காணப்படுகின்றன நவீனகால தேவைகளான மருத்துவம், கல்வி, மின்சாரம் (96மூ) போன்றவற்றின் பரம்பல் நகர்புறங்கள் நோக்கிய நகர்வினை கணிசமான அளவு குறை க்கின்றது. இதனை விடவும் இலங்கையின் நகர்புற ஆதனங்களின் உச்ச விலை வீதமும் பிரதான காரணிகளில் ஒன்றாக அமைகின்றது. நிர்மான பொருட்கள் மற்றும் காணி போன்றவற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக சராசரி வீடொ ன்றின் பெறுமதி 50,000 டொலர்கள் (6 மில்லி யன் இலங்கை ரூபாய்) இனைத் தொடுகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]