ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09
SUNDAY OCTOBER 05 2014

Print

 
கிணற்றைத்தானே விற்றேன்

கிணற்றைத்தானே விற்றேன்

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். அதனை வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் வந்தான். அப்போது கிணற்றை விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான். விவசாயிக்கு கோபம் வந்தது. “எனக்கு கிணற்றை விற்றுவிட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?” என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் “ஐயா! உமக்கு நான் கிணற்றைத்தானே விற்றேன். அதிலிருந்து தண்ணீரை அல்லவே!!” என்று தர்க்கம் செய்தான். விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான். நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ” கிணற்றை விற்று விட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில் தான் தண்ணீரை சேமீத்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடன் வெளியேறு, என தீர்ப்பு கூறினார். விற்றவன் தலைகுனிந்து தனது தவறுக்கு வருந்தியதுடன் விவசாயின் கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்க சொல்லி விட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]