விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09
SUNDAY JUNE 08 2014

Print

 
காலத்தை கடத்தும் நாடகம்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை இனித்தான் அறியப்போகிறதாம் தமிழ் கூட்டமைப்பு

காலத்தை கடத்தும் நாடகம்

இதுவரைகாலமும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என புத்திஜPவிகள் கேள்வி

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தாம் ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் அதற்காகத் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது எதிர்பார்ப்புகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்ளவுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுவொரு காலத்தைக் கடத்தும் அடுத்த கட்ட நாடகம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள புத்திஜீவிகள் இதுவரை காலமும் தமிழ்க் கூட்டமைப்பின் தலை வர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த பல வருடங்களாகத் தீர்வு தொடர்பாக அரசாங்கத் தரப்பினருடன் பேசிவரும் தமிழ்க் கூட்டமைப்பு இனித்தான் தீர்வு தொடர்பாக நமது மக்களின் கருத்துக்களை அறிய முனைந்திருப்பதானது தீர்வு காணும் விடயம் இன்னமும் வெகு தொலைவில் உள்ளதை அல்லது தீர்வு ஒன்று காணப்படு வதே சந்தேகம் அல்லது சாத்தியப் படாத விடயம் என்பதையே உணர்த்தியி ருக்கின்றது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் பல தடவைகள் அழைப்பு விடுத் துள்ளதையும், அதற்கு முன்னேற்பாடாக நேரடியாக அரசு தரப்பினருடன் பேச்சுக்கு அழைப்பதையும் தொடர்ச்சியாக உதாசீனம் செய்து வரும் தமிழ்க்கூட்டமைப்பு இப் போதுதான் தனது பக்கத்தில் முதலாவது படியை எடுக்கவே முனைந்துள்ளது.

தம்மிடம் தயாரிக்கப்பட்ட ஒரு தீர்வுப் பொதி உள்ளது எனத் தமிழ்க் கூட்டமை ப்பு இதுவரை காலமும் உலகிற்குப் பொய் கூறி வந்துள்ளமை இதிலிருந்து நன்கு புலனாகியுள்ளது. தீர்வு ஒன்றி னைக் காண அரசாங்கம் முயற்சி எடுத்தாலும் அதற்கு இடையூறு களை ஏற்படுத்திவரும் கூட்ட மைப்பு தானும் எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள் ளாது காலத்தையே கடத்தி வரு கிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி கூறுவது போன்று இந்த இனப் பிரச்சினை தொடர்வதையே தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் விரும்புகின் றனர். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டால் இவர்களது அரசியலுக்கு முற் றுப்புள்ளி வந்துவிடும் எனும் மனப்பயம் இவர்கள் மனங்களில் உள்ளதைத் தெளி வாக உணர முடிகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]