விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09
SUNDAY JUNE 08 2014

Print

 
கண்கவர் ‘கவிதா ஆற்றல்’

கண்கவர் ‘கவிதா ஆற்றல்’

மாபெரும் இறுதிப்போட்டி

இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாம் இ;ன்று அனேகரின் வீடுகளை ஆக்கிரமித் திருக்கின்றன. அனேக வீடுகளில் தென்னிந்திய தொலைக்காட்சி நாடகங்களின் ஆதிக்கத்துக்கு மத்தியில் உள்ளுர் தொலைக்காட்சிகளை பார்ப்பது குறைந்து வருகின்றதென்பது பொதுவான குற்றச்சாட்டு,

கடந்த மே மாதம் 24 ஆம் திகதியென்று நினைக்கின்றேன் மாலை சுமார் 7.30 அளவில் என் வீட்டிலிருந்த சின்ன வாண்டுப் பயலின் கையிலிருந்த ரிமோட் தவறுதலாக அழுத்தப்படவே, நேத்ரா அலைவரிசைக்கு மாறியது. அதில் நேரடி ஒளிபரப்பொன்று நிகழ்ந்து கொண்டிருந்து. கார்ட்^ன் அலைவரிசைகள், நாடக அலைவரிசைகளுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட முயற்சிகளை எல்லாம் முறியடித்து எடுத்த எடுப்பிலேயே பார்க்கத்தூண்டியது அந்த நேரடி ஒளிபரப்பு. சில கணங்களிலேயே அது கவிதா ஆற்றல் நிகழ்வின் மாபெரும் இறுதிப் போட்டியென்பது விளங்கியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' அவர்களும் அமைச்சர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் தமிழ்; சம்பிரதாயதாய முறைப்படி ஆரத்தி எடுக்கப்பட்டு, நாதஸ்வரம் மேளதாளம் முழங்க அழைத்துவரப்பட்டுக் கொண்டிருந்தனர். வரவேற்புநடனம், வரவேற்புரை என்பனவற்றைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. அரையிறுதிப்போட்டிவரை திறமைகள் காண்பித்த மாணவ மாணவிகளே வரவேற்பு நடனத்தில் பங்கேற்றிருந்தனர்.

கவிதா ஆற்றல் நிகழ்சியின் பல ஒளிபரப்புகளை நான் ஏற்கனவே பார்த்திருக்கின்றேன். அதனால் திரையில் தோன்றிய முகங்களில் அனேகமானவை ஏற்கனவே பரீட்சயமாயிருந்தன.

அன்றைய தினம் வரவேற்பு நிகழ்வுகள் எல்லாம் முடிவடைந்த பின்னர். இறுதிப் போட்டிகள் ஆரம்பமாயின. வாத்தியக் கலைஞர்களுக்கான இறுதிப்போட்டிகள் இடம்பெற்றன. /பியு'ன் இசை, மெலடி இசை …என்று அக்கலைஞர்கள் தொலைக்காட்சி ரசிகர்களையும், பார்வையாளர்களையும் இசை வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது. பொதுவாகவே போட்டி நிகழ்ச்சிகளெல்லாம்; இடம்பெற்ற பின்னரே பரிசளிப்பு இடம்பெறும். அப்போது வெற்றிபெற்றவர்களும் அவர்களது உறவினர்களையும் தவிர ஏனையவர்கள் மண்டபத்தை விட்டு எழுந்து சென்று விடுவர் ஆனால் இந்நிகழ்வில் ஒவ்வொரு போட்டியின் நிறைவிலும் பரிசு வழங்கியமை நிகழ்ச்சியை சலிப்பின்றி பார்க்கத்தூண்டியது.

அடுத்து இடம்பெற்ற வாய்ப்பாட்டுப் போட்டியிலும் பேட்டியாளர்கள் தனியாகவும் குழுவாகவும் பாடல்கள் பாடினார்கள். கிராமியப் பாடல்கள் பழைய, புதிய பாடல்கள் என்று அரங்கமே அவர்களது இசையால் களைகட்டியிருந்தது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இசைப்போட்டியில் இசைத்துறையுடன் தொடர்பில்லாத துறைகளில் பயின்றவர்கள்கூட மிகச் சிறப்பாகப் பாடி வெற்றிபெற்றதுதான்.

அன்றைய தினம் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று சோடைபோனவையல்ல.

நடனப் போட்டிகளிலும்; சாஸ்திரீய நடனம், கிராமிய நடனம் என்று பல்வேறுபட்ட நடன உறுப்படிகளை கண் முன்நிறுத்தினர் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

கவிதா ஆற்றலின் இந்த மாபெரும் போட்டி நேரலையாக நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. விளம்பர இடைவேளைகளின் போதும் அடுத்த நிகழ்ச்க்கான மேடைத் தயார்ப்படுத்தல்களின் போதும் எந்தவித தொய்வும் இன்றி தொலைக்காட்சி ரசிகர்களையும் அரங்கப் பார்வையாளர்களையும் எந்த நேரமும் நிகழ்ச்சியோடு ஒன்றித்து வைத்திருந்த பெருமை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் விஜpதாவையே சாரும். மிகப்பிரம்மாண்டமான அரங்க அமைப்பும் இந்நிகழ்வுக்கு கூடுதல் வலுச்சேர்த்திருந்தது.

உயர்கல்வி அமைச்சினால் இரண்டாவது வருடமாக உயர் கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் சகல அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சியே கவிதா ஆற்றல் நிகழ்ச்சியாகும்.

இசை , நடனம், ஊடகம், நகைச்சுவை. புகைப்படப்பிடிப்பு, ஓவியம், இலக்கியம் என்ற ஏழு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. வந்தாருமூலை, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களது பல்கலைக்கழகத்திலும் ஏனைய மாணவர்களுக்கு கொழும்பிலும் முதல்கட்டத் தேர்வுகள் இடம்பெற்றன. இரண்டாம் மூன்றாம் கட்டத் தேர்வுகள் பத்தரமுல்லயிலுள்ள அபே கமவில் இடம்பெற்றன.

ஊடகத்துறை யினருக்கான இறுதிப்போட்டிகள் ஏலவே நடாத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்ட்டனர்.

சகல போட்டிகளுக்குமான முதலாமிடத்திற்காக ஒரு இலட்சம் ரூபா பணமும் சான்றிதழுடன் விருதும் வழங்கப்படுகின்றது. சகல போட்டிகளுக்குமான இரண்டாமிடத்திற்காக எழுபத்தையாயிரம் ரூபா பணமும் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. சகல போட்டிகளுக்குமான மூன்றாமிடத்திற்காக ஐம்பதாயிரம் ரூபாவும் சான்றிதழும் வழங்கப்படுகின்றது.

கூடுதலான வெற்றிகளை பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகம் / உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டு விருது மற்றும் பரிசு வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களை தொழில்வாய்ப்பு பெறக்கூடிய பட்டதாரிகளாக மாற்றும் வகையில் பல்வேறுநாடுகள் பல்வேறு ஆற்றல் மேம்பாட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்தவகையிலேயே இலங்கையும் தலைமைத்துவப்பயிற்சியை பல்கலைக்கழ மாணவரிடையே அறிமுகப்படுத்தியது.

இந்த கவிதா ஆற்றல் நிகழ்வும் அவ்வாறானதொரு நோக்கிலேயே உயர்கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அன்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்குச்சென்று இந்நிகழ்சியை பார்த்தவர்களும் சரி தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தவர்களும் சரி ஒரு விடயத்தினை அவதானித்திருக்கக்கூடும் அதுதான் கடந்த வருடம் அதாவது 2012 -2013 ஆம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட கவிதா ஆற்றல் நிகழ்ச்சியில் ஊடகத்துறையில் முதலிரண்டு இடங்களையும் தட்டிச்சென்ற கிN'hபா மற்றும் சோபி'ன் ஆகியோர் அறிவிப்பு செய்ததுதான் அது. அவர்கள் நிகழ்ச்சின் ஆரம்பத்தில செய்த அறிவிப்பு பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. கிN'hபாவுக்கு நேத்ரா அலைவரிசையில் செய்தி வாசிப்பாளராகும்; வாய்ப்பினையும் பெற்றுத்தந்திருக்கிறது கவிதா ஆற்றல் நிகழ்வு. அதனைப்போலவே இம்முறை ஊடகத்துறையில் வெற்றிபெற்ற கோ'pகாவும் மாதினியும் நேத்ரா அலைவரிசையின் செய்தி வாசிப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ரூபவாஹினி தமிழ்;ச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் விஸ்வநாதன், நடப்புவிவகாரப் பிரிவுத்தலைவர் எம் என் ராஜh, மூத்த அறிவிப்பாளர் எழில்வேந்தன், கலாசூரி வாசுகி nஜகதீஸ்வரன், ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்'ன் உள்ளிட்ட கலைத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பலரே இப்போட்டிகளுக்கு நடுவர்களாயிருந்து சிறப்புச் செய்திருக்கிறார்கள்.

மாணவர்களுக்கான போட்டிகளைத் தீர்மானிப்பது, நடுவர்களை தேர்ந்தெடுப்பது என. இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவிருந்து பல்வேறுவழிகளிலும் அதனை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர் கலாநிதி ஸ்ரீபிரசாந்தன். அனைவரினது பங்களிப்பும் இதனை ஒரு முழுமையான ஆற்றல்களுக்கான தேடல் நிகழ்ச்சியாக மாற்றியிருக்கிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]