புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
நல்லிணக்கத்தில் தங்களுக்கு அக்கறையில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் தமிழ் கூட்டமைப்பு

நல்லிணக்கத்தில் தங்களுக்கு அக்கறையில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் தமிழ் கூட்டமைப்பு

ஜீடந்த 20 ஆம் திகதி அரசாங் கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்திருந்ததை அறிவீர்கள். இது 94 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிக்கட்சிகள் இவ்வாறு பிரேர ணைகளை கொண்டு வருவதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. ஆட்சியை பிடிக்கும் நோக்கில் அவ்வப்போது இப்படியான முயற்சிகளை அவர்கள் செய்வார்கள்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பதை நோக் கமாகக் கொண்டே தாங்கள் செயற்பட்டு வருவதாக தெரிவித்துவரும் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு பிரேரணைக்கு ஆதரவு வழங்கியிருப்பதுதான் ஆச்சரியமானது. இதன் மூலம் கூட்டமைப்புக்கு உண்மையான நல்லிணக்கத்தில் அக்கறையில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தென்னாபிரிக்காவிற்கு சென்று திரும்பிய சம்பந்தன் குழுவினர், தென்னாபிரிக்காவின் உதவிகளை பெறவுள்ளதாக தெரிவித்தார்.

தென்னாபிரிக்கா செல்லும் போது, இதுவரை காலமும் நடைபெறாத ஒரு விடயமும் இடம்பெற்றிருந்தது. வழமையாக கூட்டமைப்பின் குழுவினர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தங்களது கட்சியின் அங்கத்தவர்களை மட்டும்தான் கூட்டிச் செல்வார்கள் ஆனால், இம்முறை கூட்ட மைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தனது உதவியாளர் ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்தார்.

இது பற்றி உடன் சென்றிருந்த கூட்ட மைப்பில் அங்கம் வகித்துவரும் ஏனைய கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரனோ அல்லது டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனோ அறிந்திருக்கவில்லையாம். விமான நிலைத் திலிருந்து வெளியில் வந்து வாகனமொன்றில் ஏறும் போதுதான் இவர்கள் இருவருக்கும் சுமந்திரனது உதவியாளரும் வந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதில் இன்னுமொரு வேடிக்கையும் நிகழ்ந்துள்ளது. வழமையாக சம்பந்தன் குழுவில் இடம்பெறும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், அரசியலில் சம்பந்தனுக்கு மூத்தவருமான மாவை சேனாதிராஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. நான்கு பேருக்குத்தான் டிக்கெட் கிடைத்திருக்கிறது.

எனவே, நாங்கள் மற்றைய இரு கட்சியின் தலைவர்களுக்கும் இடம்கொடுக்க வேண்டியிருப்பதால் இம்முறை நீங்கள் பங்குபெற முடியாதுள்ளது என்று மாவைக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் மாவையை வெட்டிவிடுவதற்கே சுமந்திரன் அவ்வாறு கூறியிருக்கின்றார். இவ்வளவுதான் கூட்டமைப்பின் ஜனநாயகம். இதனை உள்குத்துவெட்டு என்று விட்டுவிடுவோம். ஆனால், கூட்டமைப்பு நல்லிணக்க விட யத்தில் தென் ஆபிரிக்காவின் ஆதரவை பெற முயற்சிப்பது உண்மை போன்றே தெரிந் தது. ஆனால் அதவும் பொய்வேசம் என் பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. நல் லிணக்கத்தில் அக்கறை உள்ள சிலர், கூட்டமைப்புக்கு நல்லிணக்கத்தில் அக்க றையில்லை. அவர்கள் தங்களின் சுகபோகத் தில் மட்டுமே. அக்கறை கொண்டிருக்கின்றனர் என்றெல்லாம் விமர்சித்து வந்திருக்கின்றனர். இப்போது அதனை கூட்டமைப்பு உண்மையென்று நிரூபித்திருக்கிறது. தென்னாபிரிக்காவும் அரசாங்கத்தின் மீது அமெரிக் காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கான வாக்கெடுப்பின் போது நடுநிலைமை வகித்த நாடுகளில் ஒன்றாகும். இதற்கு கூட்டமைப்பு வேறொரு விளக்கம் சொன்னதாம். நடுநிலைமை வகித்தால்தான் அவர்களால் எமது தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க முடியும். எங்களுக்காகத்தான் தென் ஆபிரிக்கா நடுநிலைமை வகித்தது.

உண்மையில் தென்னாபிரிக்கா நடுநிலைமை வகித்ததற்கு வேறு அரசியல் காரணங்கள் உண்டு. ஆனால் எல்லோரும் தங்களின் வேலைகளை விட்டுவிட்டு இலங்கையில் இருக்கும் தமிழர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று கதை சொல்லுவதே. கூட்டமைப்புக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால், இப்படி விளக்கம் சொன்ன கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசியக் கட்சியால் தங்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களித்திருக்கிறது. இது எவ்வாறு நல்லிணக்கத்திற்கு உதவுமாம்? தென் ஆபிரிக்கா வந்தாலும் சரி அமெரிக்கா வந் தாலும் சரி இலங்கை தொடர்பான எந்தவொரு விடயத்தையும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களுடன்தானே பேசித் தீர்க்க முடியும். எனவே, அவ ருக்கு எதிரான நம் பிக்கையில்லாத் தீர்மா னத்திற்கு ஆதரவு வழங்கிவிட்டு எவ் வாறு கூட்டமைப்பு அவருடன் பேசப் போகிறதாம்?

கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் தலைமையாக உருவாகிய காலத் திலிருந்து, ஜனாதி பதிக்கு எதிராகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியை எதிர்த்து சரத் பொன்சேகா விற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கூட்டமைப்பு வலியுறுத்தியது. பின்னர் உலகெங்கும் சென்று புலம்பெயர் புலியாத ரவு அமைப்புக்களுடன் இணைந்து, ஜனா திபதிக்கும் அவர் தலைமையில் இருக்கும். அரசாங்கத்திற்கும் எதிராக பிரசாரங்களை செய்தது. இப்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருக்கிறது. இப்படியெல்லாம் செய்யும் கூட்டமைப்பு எவ்வாறு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். நல்லிணக்கத்தையும் இலங்கையின் அபிவிருத்தியையும் தடுத்து நிறுத்தும் நோக்கில்தான் கூட்டமைப்பு இவற்றை எல்லாம் செய்கிறது. தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் பிழை யான அரசியலை அம்பலப்படுத்தும் பிறிதொரு பலமான ஜனநாயக அரசியல் அமைப்பு இல்லாமையை தங்களுக்கு நல்ல வாய்ப்பாக கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்கிறது. தென் ஆபிரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ளப் போவதாக கூறிவரும் கூட்டமைப்புக்கு உண்மையிலேயே அப்படி எதனையும் கற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்திருந்தால், நிச்சயமாக இப்படியொரு பிரேரணைக்கு ஆதரவளித்திருக்காது.

யுத்தம் நிறைவுற்ற பின்னர் ஜனாதிபதியு டன் கைகோர்த்துக் கொள்வதற்கு கிடைத்த அனைத்து நல்ல வாய்ப்புக்களையும் பிரபாகரன் கடந்து முப்பது வருடங்களாக ஆயுதங்களை வைத்துக் கொண்டு எதனை செய்து வந்தாரோ அதனையே கூட்டமை ப்பு மக்களின் வாக்குகளை வைத்துக் கொண்டு செய்து வருகிறது. எப்போதும் அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டேயி ருப்பது என்பதுதான் பிரபாகரன் தமிழர் களுக்கு ஓதிய வேதம். இப்போது கூட்ட மைப்பும் அதனைத்தான் ஓதிக் கொண்டி ருக்கிறது. பலரது எதிர்ப்புக்கும் மத்தியில் ஜனாதிபதி வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தியிருந்தார். வடக்கின் மக்கள் கூட்டமைப்பிற்கு போதுமான ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால் இதன் மூலம் கிடைத்த அருமையான வாய்ப்பை புறக்கணித்துவிட்டு கூட்டமைப்பு வழமை யான அந்த எதிர்ப்பு கோசத்தை கையி லேடுத்தது.

மீண்டும் அரச எதிர்ப்பு புராணம் பாடத் தொடங்கியது. மக்களுக்கு செய்ய வேண்டிய எவ்வளவோ வேலைகள் இரு ந்த போதும் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வடக்கு ஆளுனரை எதிர்ப்பது, இராணுவத்திற்கு எதிராக பேசுவது என்று மாகாண சபைக்கு புறம்பான கோசங்களை முன்வைத்தனர். இப்போது அரசாங்கத்திற்கு எதிரான நம் பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டிருக்கின்றனர். உண்மை யிலேயே கூட்டமைப்பிற்கு நல்லிணக்கத்தில் அக்கறை இருந்திருப்பின், கூட்டமைப்பிற்கு உண்மையிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வில் புதுப்பொலிவை ஏற் படுத்த வேண்டுமென்று அக்கறை இருந் திருப்பின், இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார்கள். அதுவும் இப்படியொரு கால கட்டத்தில் பொறுப்பற்று நடந்திருப்பதன் ஊடாக கூட்டமைப்பினருக்கு நல்லிணக்கத்திலோ சக வாழ்விலோ எந்தவிதமான அக்கறையும் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. பிரச்சினையை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்து, அதில் குளிர்காய்வது மட்டும்தான் கூட்டமைப்பின் ஒரேயொரு நோக்கமாகும். ஆனால் வீர வசனங்கள் பேசும் கூட்டமைப்பின் தலைவர்களின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்கள் சிந்தித்தால் மட்டும்தான் உருப் பட முடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.