விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
வங்கதேச அணியின் புதிய பயிற்சியாளரான ஹதுருசிங்க

வங்கதேச அணியின் புதிய பயிற்சியாளரான ஹதுருசிங்க

வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் ஹதுருசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் வங்கதேச அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த N'ன் ஜ_ர்nஜன்சென் கடந்த மாதம் தனது பதவியை விட்டு விலகினார்.

இந்நிலையில் வங்கதேச அணியின் புதிய பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் சன்டிகா ஹதுருசிங்க நியமிக் கப்பட்டுள்ளார். இவர் 1990ம் ஆண்டுகளில் 26 டெஸ்ட் மற்றும் 35 ஒருநாள் போட்டிகளில் விளை யாடி இருக்கிறார். தற்போது நியு+ சவுத் வேல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்து வருகிறார். புதிய பயிற்சியாளராக களமிறங்க உள்ள ஹதுருசிங்கா, அடுத்த மாதம் பயிற்சியாளர் பணியை ஏற்க இருக்கிறார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]