விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
பெருந்தோட்டங்களில் அடிப்படை ஆவணங்கள் இல்லாமல் மக்கள் படும் சிரமங்கள்

பெருந்தோட்டங்களில் அடிப்படை ஆவணங்கள் இல்லாமல் மக்கள் படும் சிரமங்கள்

விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் என்கிறார் மனித அபிவிருத்தி தாபன கள இணைப்பாளர் ஆர். நடராஜா

நமது நாட்டை பொறுத்தவரையில் அடிப் படை ஆவணங்கள் என்பது மிக முக்கிய மானதொன்றாகும். எந்தவொரு நிர்வாக ரீதியிலான விடயமா னாலும் அதற்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மிகவும் அவசியமாகும். ஆனாலும் இன்றைய நவீன காலத்திலும் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மலையக மக்களுக்கு அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லா மல் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இவ்வாறான பிரச்சினை களை தீர்ப்பதற்கு மனித அபிவிருத்தி தாபனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தாபனத்தின் கள இணைப்பாளர் ஆர். நடராஜா தெரிவித்தார்.

முன்னாள் நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சரும் ஜனாதிபதியின் இணைப்பாள ருமான வீ. புத்திரசிகாமணியின் ஏற்பாட்டில் மனித அபிவிருத்தி தாபனம் மற்றும் போர்வட் மன்றம் ஆகியன இணைந்து நடாத் திய நடமாடும் சேவை நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியின் செளமிய கலையரங்கத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, வரலாற்று ரீதி யாக ஏனைய நவகாலனித் துவ மூன்றாம் உலக நாடுகளில் இலட்சக் கணக்கான தொழி லாளர்களைப் போன்ற நிலை யிலேயே வாழ்ந்து வரும் இலங்கை பெருந்தோட்ட மக்கள் இன்றைய நவீன காலத்திலும் அடிப்படை ஆவணங்கள் இல் லாமல் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர்.

அடிப்படை ஆவணங்களில் பெயர் மற்றும் தகவல்கள் சரியாக எழுதப்படாமையால் பல இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியாமலும், முதியோர் மற்றும் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றோர் தங்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால பணம் போன்ற வைகளை பெற்று கொள்ள முடியாமலும், மாணவர்கள் பரீட்சை எழுதுவதிலும், பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதிலும் பல பாரிய பிரச்சினை களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அவர்களின் பிறப்பு சான்றிதழ் இல்லா மையே இதற்கு முக்கிய காரணமாகும். பிறப்பு சான்றிதழ்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படாமைக்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் மாவட்ட பதிவாளர் அலுவலக அதிகாரிகள், மற்றும் பெற்றோர்களுமேயாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பெருந்தோட்ட மக்கள் பிரஜா உரிமை மறுக்கப்பட்டிருந்தார்கள். இன்று வரை கூட அவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் வாக்குரிமையற்றவர்களாக இருக்கின்றார்கள். முறைசார், முறைசாரா தொழில் ஒப்பந் தங்கள் மூலம் வீடு, வேலைத்தளம் என்ற குறுகலான பெருந்தோட்ட முறைக்குள் இவர்களின் நடமாட்டமும் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு பெருந் தோட்ட மக்கள் அடிப்படை ஆவணங்கள் இல்லாமையே காரணங்களாக இருந்துள்ளது. எனவே இப்பிரச்சினைகளை கருத்திற் கொண்டு மனித அபிவிருத்தி தானம் பல விழிப்புணர்வு செயற்பாடுகளை செய்து வருகின்ற போதிலும் மக்களுக்கு நேரடியாக அடிப்படை ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் குறையாகவே காணப்படுகிறது. இதனை தீர்க்குமுகமாக முன்னாள் நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சரும் ஜனாதிபதியின் இணைப்பாள ருமான வீ. புத்திரசிகாமணி அவர்களின் ஏற்பாட்டில் மனித அபிவிருத்தி தாபனம் மற்றும் போர்வட் மன்றம் ஆகியன இணைந்து இந்நடமாடும் சேவையை நடாத்தியது.

இதில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் குழந்தைகள், இளைஞர், யுவதிகள், திருமணமானவர்கள், வயோதிபர்கள் என்றுபலர் தங்களின் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு சான்றிதழ்கள் என ஆவணங்களை பெற்றுக்கொள்ள சமூகமளித்திருந்தனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]