புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
குமரகுருபரன் தலைமையில் ஜனநாயக முன்னணி’

ஜ. ம. மு. அதிருப்தியாளர் ஒன்றுகூடி முடிவு;

குமரகுருபரன் தலைமையில் ஜனநாயக முன்னணி’

ஜனநாயக மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பலர் அதன் தலைமையில் அதிருப்தி கொண்டுள்ளமையினால் அவர்களை ஒன்று திரட்டி ‘ஜனநாயக முன்னணி’ எனும் அமைப்பை உருவாக்கி பின்னர் அதனைக் கட்சியாகப் பதிவு செய்யத் தான் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜ. ம. மு. வின் முன்னாள் பிரதித் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.

ஜ. ம. மு. கடந்த சில வாரங்களாக ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி. மற்றும் ஜனநாயகக் கட்சி தலைவர்களை சந்தித்துரையாடி வருகிறது. இதில் எவற்றிலுமே கட்சி யின் தேசிய அமைப் பாளரான தன்னை இணைத்துக் கொள் ளாமல் நேற்றுக் கட்சியில் இணைந்த வர்களை அழைத்துச் செல்வதாக திரு. இராஜேந்திரன் தன்னிடம்அதிருப்தி தெரிவித்துள்ளதாக குமரகுருபரன் தெரிவித்தார். அதேபோன்று ஜ. ம. மு. வின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான லோரன்ஸ் பெர்னாண்டோ. தலைவர் தனது தொழிலைத் தரக் குறைவாகப் பேசி தன்னையும் அவமதித்துவிட்டதாக தன்னிடம் முறையிட்டதாகவும் குமரகுருபரன் தெரிவித்தார்.

இதேவேளை பிரசார மற்றும் ஊடகச் செயலாளர் பதவி தனக்கு பெயரளவில் மட்டுமே தரப்பட்டுள்ளதாகவும், இப்போது கட்சி தொடர்பான செய்தி அறிக்கைகளை நிர்வாகச் செயலாளரே விட்டு வருவதாகவும் சி. பாஸ்கரா கவலை வெளியிட்டுள்ளதாக குமரகுருபரன் தெரிவித்தார்.

இவ்வாறு இன்னும் பலர் தம்மிடம் அதிருப்தி தெரிவித்து வருவதால் அவர்களை ஒன்று திரட்டி ஜனநாயக முன்னணி எனும் அமைப்பை உருவாக்கத் தான் திட்டமிட்டுள்ளதாக குமரகுருபரன் தெரிவித்தார். விரைவில் இது குறித்த பத்திரிகையாளர் மாநாட்டை தான், இராஜேந்திரன் மற்றும் லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோருடன் இணைந்து நடத்தவுள்ளதாகவும் குமரகுருபரன் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.