புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
தமிழக கட்சிகள் மீது மோடி அதிருப்தி டுவிட்டரில் வெளிப்படுத்தினார்

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு;

தமிழக கட்சிகள் மீது மோடி அதிருப்தி டுவிட்டரில் வெளிப்படுத்தினார்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பா. ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. நாளை 26 ஆம் திகதி நரேந்திரமோடி, பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது.

இதன்படி இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அவர் மோடி பிரதமராக பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி. மு. க. தலைவர் கருணாநிதி, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, பா. ம. க. நிறுவனர் ச. ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழ் கட்சி. தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இந்நிலையில். ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி, மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நிர்வகிப்பது. தாங்கள் அல்ல... மத்திய அரசுதான் என்பது தெரியாமல் இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டின் கட்சிகள் உள்ளன. ஷிiசீilarly all ஹினி party who r oposing srilankan prலீsiனீலீnt’s invitation னீnt knw, itz ணீலீntral govt whiணீh சீanagலீs rலீlலீasலீ oஜீ ur ஜீishலீrசீலீn not u.) என்று தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.