விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* வடக்கில் ஓடி ஒளித்த கூட்டமைப்புத் தலைவர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என வீர அறிக்கை விட்டு பல்கலைக்கழக மாணவர்களையும், அப்பாவிப் பொது மக்களையும் தூண்டிவிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் எவரையும் கடந்த வாரம் வடக்கிலேயே காணவில்லையாம். ஆமியுடனும், பொலிஸாருடனும் தேவையில்லாமல் முரண்பட்டது அப்பாவி மாணவரும் பொதுமக்களும் தானாம். தலைவர் இந்தியாவில் ஓய்வு, முதல்வருக்கு கொழும்பில் விருந்து, எம்.பி.மார் குடும்பங்களுடன் சுற்றுலா. இப்படித்தானே முன்னரும் இளைஞரை உசுப்பிவிட்டு முள்ளிவாய்க்காலில் முனக விட்டவர்கள். நம்ம சனம் எப்பதான் திருந்தப் போகுதோ தெரியவில்லை.

* வெளிநாட்டு டொலர் ருசியால் பிரசார நாடகமாடும் பெண்

மாகாணப் பெண் அரசியல்வாதி ஒருவர் வடக்கில் நடத்தும் பிரசார நாடகத்திற்கு அளவே இல்லை. கமராக்காரரைக் கூடவே வைத்துக் கொண்டு அங்கும், இங்கும் அலைந்து ஆமிக்காரர் நிற்கும் இடமாகத் தேடிச் சென்று அவர்களை வம்பிற்கு இழுத்து வருகிறாராம். சர்ச்சையை தானே ஏற்படுத்திவிட்டு அடுத்த நிமிடமே அதனை இணையங்க ளில் படத்துடன் செய்தியாகப் பதிவேற்றியும் விடுகிறாராம். அதுவும் புலம்பெயர் அமைப்புத் தமிழர் பார்க்கும் இணை யங்களிலேயே அதிக அக்கறையாம். இரண்டு தடவை வெளிநாடு சென்று வந்த டொலர் ருசி விட்டபாடில்லை என்று அவரது செயலாளரே வருத்தத்துடன் கூறினாராம்.

* பொதுத் தேர்தலின் பின்னர்

அறிக்கைகள் நின்றுவிடுமாம்

மோடி அலைபோல இங்கும் ஒரு அலைவீசி அரசு கவி ழும் காலம் தொலைவில் இல்லையாம். இதனைச் சொல்ப வர் மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே அரசில் சகல தையும் அனுபவித்துவிட்டு இப்போது எதிர் அறிக்கை மட் டுமே விட்டுக்கொண்டிருக்கும் கட்சியின் மேல் மாகாண உறு ப்பினர். அமைச்சர் சந்திரசேகரன் உயிருடன் இருந்திருந் தால் இவரது அக்கால லீலைகள் பலவற்றை எடுத்துரைத்தி ருப்பார். அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இவர் இது போன்ற அறிக்கைகளை நிச்சயமாக விடமாட்டார். ஏனெ னில் அவர் அப்போது இதே அரசாங்கத்தின் பக்கத்திற்கு வந்துவிடுவார்.

* கட்சிக்குள் நடப்பவைகளையும்

கொஞ்சம் கவனித்தால் நல்லது

இந்த நொடியில் என் மனதில் என்று தலைப்பிட்டு 22.05.2014 திகதி தனது முக நூலில் ஜ.ம.மு. கட்சியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதைக் காண முடிந்தது.

மே 18இல் இருந்து தமிழர்கள் பாடம் படிக்கவில் லையோ எனத் தோன்றுகிறது. வடக்கில் நடைபெற்ற நினை வேந்தல் நிகழ்வுகளை தேடிப்பார்த்தால், பொது கூட்டிணை ப்பு அல்லது வழிகாட்டல் கொள்கை இல்லாமல் நடைபெற் றன என தெரிகிறது. (விதிவிலக்காக யாழ் பல்கலைக்கழக சமூக நிகழ்வு கவனத்தை கவர்ந்தது) லண்டனில் கொடி பிரச்சினையால் முரண்பாடு ஏற்பட்டதாக கேள்வியுற்றேன். இதுதான் அவரது குறிப்பு. உலகத் தமிழர் ஒற்றுமைக்காகக் கவலைப்படும் இவர், தனது கட்சிக்குள் நடப்பவைகளை யும் கொஞ்சம் கவனித்துக்கொண்டால் நல்லது என்று அவ ரது கட்சியின் முக்கியமான விடயத்திற்குப் பொறுப்பான பிரமுகர் தெரிவித்துள்ளாராம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]