புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

Cinema-1

சில படங்களை பார்த்த உடனே பிடித்து விடும், பல படங்கள் பார்க்க பார்க்க தான் பிடித்துபோகும் ஆனால் ஒரு சில படங்கள் மல்லாக்க படுத்து பார்த்தா கூட பிடிக்காது. அது என்னவோ ஏதோ தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்தால் கொஞ்சம் மக்களிடைய எதிர்பார்ப்பு இருக்கும் என்று சொல்வர்கள் அல்லவா (அது முன்னோர்களும், முன்னணி ஹீரோக்கள் செய்த வைத்து வசியம் ) அது போல் இந்த படத்துக்கும் கௌதம் கார்த்திக்கை மட்டுமே நம்பி சென்றதில் கிடைத்தது ஏமாற்றமே.

ஒவ்வொரு மொழிப் படத்தையும் எப்படிப் பார்ப்பது என்று நாம் நம்மை அறியாமலேயே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

மலையாள கமர்சியல் படங்கள், தமிழ் கமர்சியல் படங்களைவிட 15 வருடங்கள் பின் தங்கியவை. அதே மாதிரி தெலுங்கில் வரும் சில லவ் கம் காமெடி படங்கள் தமிழில் அலுத்து நொந்து தூக்கி எரியப்பட்ட அதே படங்களின் கதைகளும் இருக்கும்.

அதே டெம்ப்ளேட்டில் வந்திருக்கும் படம் தான் இந்த "என்னமோ ஏதோ".

படம் தொடக்கமே நம்ம (சின்ன தம்பி) பிரபுவிடம் இருந்து தான், அவர் கௌதம் கார்த்திக்கை கடத்தி கொண்டு , காரில் போகும் போது உன்னோட காதல் கதையை சொல்லுடா (அதாவது மக்களை கொல்லுடா) என்று சொல்லாமல் சொல்லி ஆரம்பம் ஆகிறது கௌதம் கார்த்திக்கின் வாழ்க்கை வரலாறு.

எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ஒரு வசதி படைத்த வீட்டில் பிறந்த குடிமகன் கௌதம் கார்த்திக்.

இவருக்கு புல் டைம் வேலை பெண்களுடன் லூட்டி, சிம்ரன் என்ற பெண்ணை பார்த்தவுடனே காதலில் விழும் இவர் 6 மாதமாக ஒரு தலையாக காதலித்து வருகிறார், அவர் லவ் சொல்ல போகும் போது எதிர்பாராத விதமாக கௌதமுக்கு ஆக்ஸிடண்ட் ஆக, கௌதமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே டாக்டர் சிம்ரனை கரெக்ட் செய்ய கௌதமின் காதல் புஸ்வானம் ஆகிவிடுகிறது.

 

சிம்ரனின் கல்யாணத்துக்கு சென்று ஒரு வழி பண்ணலாம் என்று நினைத்த கௌதம் கார்த்திக் எதுவும் செய்ய முடியாமல் மொக்க வாங்கி திணற திணற குடிக்கிறார்.

அவரை போலவே ராகுல் ப்ரீத்தியும், திணற திணற குடித்து மப்பில் தள்ளாடும் நேரத்தில் கௌதம் அவரின் அடுத்த காதலியை பார்க்கிறார், அவளும் டாக்டரின் காதலால் பாதிக்கப்பட்டவள் என்று தெரிந்து இரண்டு பேரும் அந்த தருணத்தில் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்.

பிறகு என்ன நண்பர்கள் ஆன இவர்கள் நாளடைவில் நட்புக்கு இலக்கணமாக திகழ்கிறார்கள், ஆனால் நம்ம ஹீரோ மட்டும் மறுபடியும் ஒரு தலையாக அவளிடம் காதல் வயப்படுகிறார்.

மறுபடியும் தன் காதலை சொல்லலாம் என போகும் பொது (ட்விஸ்ட்மா) தன் வருங்கால கணவரை கௌதம்க்கு அறிமுகம் செய்கிறார் ராகுல் ப்ரீத்தி.

உடனே இதயம் முரளியாக மாறி கௌதம் தன் காதலை மனதுக்குள் திண்டுக்கல் பு+ட்டு ஒன்று போட்டு கொள்கிறார். சரி போனது போகட்டும், கௌதமும் நாளைடவில் த்ரி'h இல்லன திவ்யா என்ற ரூட்டில் செல்ல வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார்.

பிறகு, என்னமோ ஏதோ நடந்து ராகுல் ப்ரீத்தி மறுபடியும் காதலை உணர்ந்து கௌதமிடம் காதலை சொல்ல வரும்போது, கௌதம் வேறு ஒரு பெண்ணை காதலிப்பது தெரியவர, சொல்ல வந்த காதலை இவரும் திண்டுக்கல் பு+ட்டை போட்டு கொள்கிறார்.

அய்யோ ரொம்ப லாங்க போகுதுப்பா! (படம் பார்ப்பவர்களுக்கும் அப்படித்தான் போச்சு)

பிறகு, எப்படியோ கௌதமுக்கு, ராகுல் ப்ரீத்தியின் காதல் தெரிய வர அவருக்கு நடக்க போகும் கல்யாணத்தை நிறுத்த போகும் தருணத்தில் பிரபுவிடம் மாட்டி கொள்கிறார்.

பிறகு பிரபு எதுக்கு கடத்துகிறார் ஏன் மிரட்டுகிறார் என்பதை நீங்க ப்ரீயா இருந்தா திரையில் பாருங்கள்.

கடல் படத்துக்கு பிறகு அவருக்கே பொருத்தமான கேரக்டர் தான். அவரது பாடி சாக்லேட் பாய் ஹீரோ வே'த்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

ஆனால் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் மாதிரியும் தெரிகிறது. மற்ற படி இவரை ரசிக்க முடிகிறது.

பிரீதி வடமாநில இறக்குமதி என்றாலும், இவரின் நடிப்பு நமக்கு பழகிப்போன புளிப்பு . அது என்னவே? ஏதோ சில இயக்குனர்கள் கதாநாயகிகளை லூசாக காட்ட சபதம் எடுத்துள்ளனர் போல. மற்றபடி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. டி.இமானின் பாடல்கள் நீ என்ன அப்பாடக்கர் , சட்அப் யுவர் மௌத் மற்றும் புதிய உலகை என்ற பாடல்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது, பின்னணி இசை ஓகே ரகம், அவ்வப்போது ரிலாக்ஸ் செய்யும் பிரபுவின் குழந்தை தனமான நடிப்பு, ஒளிப்பதிவும் சில இடங்களில் நச், காமெடியான கிளைமாக்ஸ்.

இது போல் ஏகப்பட்ட படங்கள் தமிழில் வந்து இருப்தே பெரிய பலவீனம்

விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை, நீளமான வசனங்கள் நம் பொறுமையை சோதிக்கிறது.

இயக்குனர் ரவி தியாகராஜன் இன்றைய இளைஞர்களுக்கு உண்டான காதல் கதையை கொடுத்தற்காக பாராட்டலாம், ஆனால் மக்கள் உங்களைப் போன்ற இளம் இயக்குனர்களிடம் புதுமையான கதையை எதிர்பார்க்கிறார்கள் பாஸ்.

மொத்தத்தில் படத்தில் என்னமோ ஏதோ மிஸ்ஸிங்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.