புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

என்னால் முடியும்

என்னால் முடியும்

இவ்வுலகில் ஒரு மானிடன் ஜனனிக்கிறான் என்றால் அதற்கு ஒரு நோக்கமிருக்கின்றது. பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல் ஏதாவது சாதிக்க வேண்டும். காற்றில் இலைகள் கரைந்த பின்பும் இலையின் தழும்புகள் அழிவதில்லை. அதுபோல நாம் பூமியில் வாழும் வரை போராட வேண்டும். இலக்கை நோக்கி பயணிப்போம். வெற்றி திசைமாறி விட்டதா ஏன் கவலை இலக்கின் பயணத்தில் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும்.

மறு பரிசீலனை செய்யுங்கள் என்னால் முடியும் என்பதை தாரக மந்திரமாக உதயத்தில் உச்சரிப்பதோடு இதயத்தின் சுவர்களில் கல்வெட்டாக செதுக்கி வையுங்கள். மானிடனுக்கு ஈடு அவன் மட்டுமே. ஒருவனுக்கு இன்னொருவன் எத்தருணத்திலும் இணையாக இயலாது ஒவ்வொருவருக்குள்ளும் அபரிமிதமான திறமைகள் பதுங்கி உள்ளன. அதனை ஒவ்வொருவரும் தட்டியெழும்பும் விதத்தில் தான் உள்ளது வெற்றி.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.