விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
இன்ரெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் சந்தை 2014

இன்ரெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் சந்தை 2014

மூன்று விருதுகளை வென்ற தம்புத்தேகம மாணவன்

விஞ்ஞான மற்றும் பொதுத்துறை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்ச்சித் திட்டமான இன்ரெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் சந்தையின் இந்த ஆண்டிற்கான போட்டியில் தம்புத்தேகம என்ற இடத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய நாமல் உதார பியசிறி நெல் வேளாண்மைக்கான தனது பல்வகை வயல் நிர்மாண இயந்திரத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பிடமிருந்து (ஸிஷிதியிளி) அபிவிருத்தி இலக்கிற்கான விருதைப் பெற்றுள்ளார். தம்புத்தேகம மத்திய கல்லூரியின் மாணவனான நாமல் அமெரிக்க புலமைச் சொத்துக்கள் சட்ட அமைப்பிடமிருந்து ஒரு விருதையும், பொறியியல், மின்னியல் மற்றும் எந்திரவியல் மாபெரும் விருதுகள் பிரிவில் மற்றொரு விருதையும் பெற்றுள்ளார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நாமல் தனது கண்டுபிடிப்பின் மூலமாக இலங்கையின் ஈரநில வேளாண்மை முறையின் கீழ் நீரைப் பாய்ச்சும் வழிகளை வெட்டுவது அடங்கலாக நெல் வேளாண்மையின் ஆரம்ப கட்டத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் இலக்குடன் இதனை முன்வைத்துள்ளார்.

கந்தானை டி மெஸனேட் கல்லூரியைச் சேர்ந்த 15 வயது நிரம்பிய நிபுண் கவிக சில்வா கண்பார்வையற்றவர்கள் தமது நாக்கினை உபயோகித்து செயற்கை முறை உணர்திறனின் உதவியுடன் வீடியோ விளையாட்டுக்களை விளையாட உதவும் செயற்திட்டத்திற்காக கணனி விஞ்ஞானப் பிரிவில் நான்காவது விருதை வென்று கொண்டார்.

இந்த இளம் விஞ்ஞானிகள் ஈட்டியுள்ள வெற்றிகள் 2013 ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த புதிய தொழில்நுட்ப பாடநெறிக்கு உந்துதல் அளிப்பதாக அமைந்துள்ளது. புதிய தொழில்நுட்ப பாடநெறியை பின் தொடர்ந்த உயர்தர மாணவர்களின் முதலாவது தொகுதியில் இடம்பெற்றிருந்த எமது நாட்டு மாணவன் ஒருவர் இதில் வெற்றி பெற்றுள்ளமை மிகுந்த உற்சாகமளிப்பதாக உள்ளது என்று கல்வி அமைச்சரான பந்துல குணவர்தன குறிப்பிட்டார். எமது அமைச்சானது இன்னும் அதிகமான தொழிலை அடிப்படையாகக் கொண்ட பாடநெறிக்கான தேவையை தீர்த்து வைக்கும் வகையில் உயர்தர பரீட்சையில் மிக முக்கியமான ஒரு பாடநெறியாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எமது இளம் தலைமுறையினர் பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறிய உடனேயே தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள உதவும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]