விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24
SUNDAY JANUARY 26 2014

Print

 
மத்துகம சென் மேரிஸ் வித்தியாலய தமிழ் பிரிவை அபகரிக்க முயற்சிபிரபா

மத்துகம சென் மேரிஸ் வித்தியாலய தமிழ் பிரிவை அபகரிக்க முயற்சிபிரபா

எம். பி தலையீட்டால் உடனடி தீர்வு

களுத்துறை மாவட்டத்திலுள்ள மத்துகம சென் மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் தமிழ் பிரிவிற்கென முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் முயற்சியால் கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டிடத்தை அப்பாடசாலையின் சிங்கள அதிபர் அபகரிக்க முற்பட்டபோது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனின் தலையீட்டால் இக்கட்டிடம் காப்பாற்றப்பட் டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஆர். மேகநாதன் தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, களுத் துறை மாவட்டத்தில் மத்துகம சென் மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம் அதி சிறந்த பாடசாலையாக திகழ்ந்து வருகின்றது. பல வருடகாலமாக கட்டிட பற்றாக்குறை காரணமாக காலை மாலை என இரு பிரிவுகளாக்கப்பட்டதன் பின்னர் காலை நேர பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டது.

களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் கல்விச் சேவைக்கு நாம் ஆற்றிய பணிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பாடசாலையில் இருந்த அதிபர் ஒருவரின் இட மாற்றத்தைத் தொடர்ந்து அதிபர் தகுதியை பெறாத ஒருவர் பதில் அதிபராக நியமிக்கப்பட் டிருந்தார். இப்பாடசாலையின் தமிழ் பிரிவுக் குச் சொந்தமான இரு வகுப்பறைகளை இவர் சிங்கள பிரிவுக்கு கையளித்துள்ளார். இவரது காலத்தில் பாடசாலையின் தராதரம் மிக மோச மாக பாதிக்கப்பட்டனர். களுத்துறை மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகள், எமது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பி னருமான பிரபா கணேசனின் கவனத்திற் கொண்டு வந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் உடனடியாக அதிபர் தரம் வாய்ந்த ஏ. தேவராஜ் புதிய அதிபராக நியமிக்கப் பட்டார். இதன் மூலம் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

இவற்றையெல்லாம் நாம் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. எமக்கு தேவை மக்கள் சேவையே தவிர விளம்பரம் அல்ல. எனினும் கடந்த வாரம் இப்புதிய நியமனத்தை விரும்பாத சிங்கள பகுதி அதிபர் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் மூன்றாம் வகுப்பு அறையையும் பலாத்கா ரமாக அபகரிக்க முற்பட்டார். இதை அறிந்த பெற்றோர் எமது ஜ.ம.கா மத்துகம அலுவலகத்திற்கு அணி திரண்டு வந்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து பிரபா எம். பி. மத்துகம வலய கல்விப் பணிப் பாளர் சி. பெரேராவிடம் நிலைமையை விளக்கி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததையடுத்து இவ்வகுப்பறை காப்பாற்றப்பட்டது.

இது போன்று சம்பவங்கள் இடம் பெறுவதற்கு இனி ஒரு போதும் இடமளிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]