விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24
SUNDAY JANUARY 26 2014

Print

 
தெல்லிப்பளையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்ட முதலமைச்சர் விக்கி

நற்குணங்களை மறைத்து நின்ற அரசியல் பதவியும், நாற்காலி மோகமும்:

தெல்லிப்பளையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்ட முதலமைச்சர் விக்கி

இடம், பொருள், ஏவல் தெரியாது செயற்பட்ட அரசியல்வாதியான சட்டமேதை

முதல் தடவை ஒரு பிழையை செய்தால் அது தவறாக கருதப்படும். ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது அதற்கு வரைவிலக்கணம் வேறு. இவ்வாறு ஒருவர் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வது கவலை தருகின்ற ஒரு விடயமாகும். சிலர் தாம் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வார்கள். ஆனால் வட மாகாண முதலமைச்சர் தனது தவறுகளில் இருந்து எதனையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

அண்மையில் யாழ்ப்பாணம் தெல்லிப்ப ளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசா லையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' உத்தியோகபு+ர்வமாக திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் ஆற்றிய உரையின் சில பகுதிகளை இந்த ஆக்கத்தில் நாம் ஆராய் கின்றோம்.

முதலமைச்சரிடம் உள்ள சில நற்குணங்கள்

திரு. விக்னேஸ்வரன் ஓய்வு பெற்ற நீதி யரசர் என்ற வகையில் சமூகத்தால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு சேவையில் சிரேஷ்ட புரு'ராக கருதப்படுகிறார். நீதிச் சேவையில் அனுபவம் பெற்றிருப்பது என்பது சமூக நீதி நடைமுறைகளை நன்கு அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்துள்ளது. இந்த அனுபவத்தின் மூலம் திரு. விக்னேஸ்வரனுக்கு எது சரி, எது பிழை என்பது நன்றாக தெரிந்திருக்கும். நாட்டின் தனித்துவத்தை வெளிக்காண் பிக்கும் தேசிய கீதத்திற்கு சிறந்த கௌர வத்தை திரு. விக்னேஸ்வரன் வழங்கினார். தெல்லிப்பளை புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை திறப்பு விழா வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பொழுது தனது பாதணிகளை கழற்றி தேசிய கீதத்துக்கு அவர் உயர்ந்த மதிப்பு வழங்கினார். இது போற்றத்தக்கது. ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது முழு நாட்டு மக்களுக்குமே அவர் நல்ல உதாரணத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

இத்தகைய ஒரு செயல்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும்போக்கு வாதிகளிடம் நாம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க முடியாது. எனவே, திரு விக்னேஸ்வரனு டைய வெளிப்பாடு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உயர்ந்த பண்பை எடுத்துக் காட்டுகிறது. இதன்மூலம் மற்றுமொரு செய்தியும் வழங்கப்படுகிறது. அதாவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஆட்;புல இறைமை மற்றும் தனித்துவத்தை நாம் ஒருபோதும் சீர்குலைக்க கூடாது என்ற செய்தியும் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகிறது.

தனது உரையின்; சில அடிப்படை விடயங்களில் தவறினார் முதலமைச்சர்

இவ்விழாவில் உரையை சிறந்த முறையில் ஆரம்பித்த முதலமைச்சர் மன உறுதி கொண்ட வர்ண நிதிய இணை ஸ்தாபகர்களுக்கும் இந்த நற்பணிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரி வித்தார். ஆனால், பின்னர் ஒரு சாதாரண அரசியல்வாதி போன்று சந்தர்ப்பத்தை நழுவ விடாது, வேறு சில விடயங்கள் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். தமிழ் மக்களின் கௌரவப் பிரச்சினை மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தார். வடக்கில் உள்ள இராணுவத்தின் அளவை குறைப்பதற்கான கால அட்டவணையை கூட தயாரிக்கும்படி அவர் ஜனாதிபதியிடம் கேட்டார். மற்றும் ஒரு பாரதூரமான விடயத்தையும் அவர் அங்கு வெளிப்படுத்தினார்.

தாம் சில மேடைகளின் தமிழ் மக்களின் துயரங்கள் பற்றி பேசியதாகவும், அது ஜனாதிபதி அவர்களின் செவிகளுக்கு எட்டவில்லை என்றும் அதற்கு காரணம் அவை எல்லாம் தமிழில் இருந்தமையே என்றும் கூறினார். அதாவது ஜனாதிபதிக்கு தமிழ் புரியாது என்று அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். இதனை முழுiமாக ஏற்றுககொள்ள முடியாது. அத்துடன் மற்றுமொரு பாரிய குற்றசாட்டையும் முன் வைத்தார் முதலமைச்சர். வடக்கில் தமிழ் மக்களுக்கு சமனான எண்ணிக்கை இராணுவத்தினர் இருப்பதாக கூறினார். இதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் வீதியோர வியாபாரிகூட இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார். உண்மை நிலை தெரியாவிட்டால் முதலமைச்சர் மௌனமாக இருக்கலாம். முதலமைச்சருக்கு கணிதம் சற்று கடினம் போல் தெரிகிறது. எது எவ்வாறாக இருந்தாலும், அவரிடம் வேறு நோக்கம் உள்ளது என்பது தெளி வாகிறது. அத்துடன் இவ்வாறான ஒரு திறப்பு விழா வுக்கு ஜனாதிபதியை இங்கு வரச்செய்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி என்று முதலமைச்சர் தெரிவிக்கும் பொழுது, வேறு ஒரு செய்தியையும் மக்களுக்கு சொல்ல முற்படுகிறார். அதாவது ஜனாதிபதி சாதாரணமாக வட மாகாணத்திற்கு வருவதில்லை, ஏதோ சிரமப்பட்டு ஜனாதிபதியை அழைத்து வந்ததுபோல் இருந்தது முதலமைச்சரின் பேச்சு. யுத்தம் முடிவடைந்து, கடந்த நான்கரை வருடங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜhபக்ஸ, வெளி மாவட்டங்களில் எங்கு கூடுதலாக விஜயம் செய்துள்ளார் என்று கேட்டால், அது நிச்சயமாக வட மாகா ணமாக இருக்கும் என்பதில் ஜயமில்லை. ஏன் தனது பிறந்த இடம் மற்றும் மாவட்டமான அம்பாந்தோட்டைக்கே அந்தளவு சென்றதில்லை.

அந்த வகையில் தென் பகுதி மக்கள் ஜனாதிபதியுடன் கோபப்பட வேண்டும். தென் பகுதி மக்கள் நிலைமையை நன்கு உணர்ந்தவர்கள். யுத்தத்தின்பின் எவருக்கு நாட்டுத் தலைவரின் அரவணைப்பும் அன்பும் அவசியமோ அவர்கள் உள்ள இடத்திற்கே ஜனாதிபதி மகிந்த சென்று வருகிறார். இதனால் எவரது உந்துதலாலும் ஜனாதிபதி வடக்கிற்கு வருவதில்லை. மாறாக ஜனாதிபதி விரும்பியே வருகிறார். காரணம் இருந்தாலோ இல்லாவிட்டாலோ அவர் வடக்குக்கு வந்து செல்கிறார்.

அடுத்த குற்றச்சாட்டு, தமிழ் தெரியாது என்பதாகும். ஜனாதிபதி சாதாரணமாக தழிழ் மக்கள் கூடுலாக வாழும் இடங்களுக்கு செல்லும்போது, தமிழில் சில வார்த்தைகள் பேசுவது வழக்கம். இதனை கடந்த கால ஆட்சியாளர்கள் எவரும் செய்யவில்லை. செய்யவில்லை என்று சொல்வதைவிட அவர்களால் செய்ய முடியாது என்றே கூற வேண்டும். தமிழில் சரிவர சொற்களை உச்சரித்து உரையாற்றி வரும் ஒரேயொரு தலைவர் இவரே. இதுவும் முதலமைச்சருக்கு நன்கு தெரியும்.

முதலiமைச்சர் முன் வைத்த அடுத்த குற்றச்சாட்டு, வடக்;கில் நிலை கொண்டுள்ள இராணுவ தொகை பற்றியது. வடக்கில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு சமமாக இராணுவத்தினர் உள்ளது என்பதும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதற்கு ஜனாதிபதியே பதில் தருகிறார். யுத்தம் முடிவடைந்த 2009 கால ப்பகுதியில் வடக்கில் அடிக்கு அடி, மீற்றர் க்கு மீற்றர் இராணுவ முகாம்கள் இருந்தன. அவை இப்போது இல்லை. அன்று வடக்கில் சுமார் 70000 இராணுவத்தினர் இருந்தனர். இப்போது 12000 பேர் மட்டுமே உள்ளனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

முதலமைச்சர் புற்றுநோய் நோயாளர்கள் முன்னிலையில் அரசியல் பேசினார்

திறப்பு விழாவில் பல புத்திஜPவிகள், உயர் அதிகாரிகள், கல்விமான்கள் பலரும் வருகை தந்திருந்தனர். ஆனால் புற்றுநோ யர்களும் கணிசமான அளவு காணப்பட்ட னர். புற்றுநோயாளர்கள் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள். தங்களைத் தாங்களே பார்த் துக் கொள்ள முடியாத அவல நிலை உண்டு. வாழ்கையை வாழ்வதற்கு போராடி வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது, வருகின்ற புதிய விருந்தினர் தமக்கு ஆறுதல் கூறு வார்கள், அன்பு செலுத்து வார்கள் என்று எதிர்பார்ப்பர். அவ்வாறான எதிர்ப்பார்ப்புடன் உள்ளவர்களிடம் சென்று அரசியல் பேசி னால் எப்படி இருக்கும். எந்த நேரத்தில் எதனை பேச வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது எமது முதலமைச்சருக்கு ஜனாதிபதி முதலமைச்சரின் கேள்விகளுக்கு சிறந்த பதிலடி கொடுத்தார்.

ஏற்கெனவே நான் இந்த ஆக்கத்தில் சில பகுதிகளில் ஜனாதிபதியின் பதில்களை மறைமுகமாக காண்பித்தேன். மேலும் சில விடயங்களை இங்கு பார்ப்போம். தெல்லிப்பளையிலும் அழகு தமிழில் பேச ஐனாதிபதி தவறவில்லை. திரு விக்னேஸ்வரன், ஒரு ஓய்வுபெற்ற தீதியரசர் என்ற வகையில் மக்களின மதிப்பை பெற்றுள்ளார் என்று தெரிவித்தார். ஆனால் இப்போதெல்லாம் ஏனைய அரசியல்வாதிகள் போன்று தாம் செல்லும் மேடைகளில் தமது நன்மைக்காக சில விடயங்களை பேசிவருகி றார். இதனைக் கண்டு சந்தோஸப்படுவதா? அல்லது கவலையடைவதா என்று தெரியவி ல்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் இப்போதுதான் உண்மை யான சவாலை எதிர்கொள்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடும்போக் குவாதிகளின் கைப்பொம்மை போன்று திரு விக்னேஸ்வரன். செயல்படுகிறார். அரசியல் ஞானம் மற்றும் அநுபவம் இல்லாத ஒருவர் அரசியலுக்குள் யாராவது ஒருவருடைய கைப்பொம்மை அல்லது சொல்வதை செய்யும் ரோபோ போல செயல்பட வேண்டி ஏற்படும் என்பதற்கு திரு விக்னேஸ்வரன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தனது சுய சிந்தனையில் செயல்பட முடியாத ஒரு முதலமைச்சரால் நிச்சயம் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற முடியாது.

நிலைமை இவ்வாறிருக்க, 13ம் திருத்தத்திற்கு அப்பால் சென்று இலங்கை தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று கூறும் இந்தியா என்ன செய்கிறது ?

தமிழிக மீனவர் பிரச்சினையால் வடக்கில் உள்ள தமிழ் மீனவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து, மீன் பிடிப்பது மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளையும் கையாள்வதால் பாரிய பிரச்சினை எழுந் துள்ளது. ஆழ்கடல் மீன்பிடியிலும் ஈடுபட்டு, வட இலங்கையில் உள்ள எமது தமிழ் மீனவர்களில் வாழ்வாதாரத்தை சூறையா டுகின்றனர்.

இதனை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலைக்கு தமிழ் நாடு முதல மைச்சரும் ஒரு காரணமாகும். இந்திய மத்திய அரசாங்கத்தில் தவறில்லை. ஆனால் மத்திய அரசாங்கம் கூறுவதை nஜயலலிதா அம்மையார் கேட்பதில்லை. இந்த பிரச்சினை பற்றி தமிழ் தேசிய கூடுதலாக அலட்டிக்கொள்வதில்லை; ஏன் என்று கேட்கிறோம் ?

இந்திய மத்திய அரசாங்கம் இது விடயத்தில் தவறிழைக்காவிட்டாலும் இலங்கை மீது 13ம் திருத்த முழுமையான அமுலாக்கலுக்கான அழுத்தங்களை அவ்வப்பேர்து வழங்கி வருகிறது. இவ்வாறு செய்வது துரதிஷ்டமே. ஏனெனில் இந்தியா வின் டில்லி மாநிலத்தில் அண்மைக்கா லமாக இடம்பெற்றுவிரும் சம்பவங்கள் இதனை நன்கு எடுத்துக்காட்டியுள்ளன. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த திரு கேஜ் ரிவால் முதலமைச்சராக அங்கு நியமிக்கப்பட்டார். டில்லி நகர் உட்பட பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப் பில்லை, முச்சக்;கர வண்டி மற்றும் ஏனைய சாரதிகளிடம் கப்பம் கோரப்படுகிறது என கூறி முதலமைச்சர் கெஜ் ரிவால் டில்லியில் ஓரிரவை வீதியோரத்தில் கழித்தார். சாத்வீக போராட்டத்தை நடத்தினார்.

டில்லியில் இரவு நேரத்தில் விபச்சாரத்தில் ஈடுபடு;ம் சில வெளிநாட்டு யுவதிகள் இருக்கும் வீட்டை முற்றுகையிட்டு அவர்களை நாடு கடத்தும்படி முதலமைச்சர் பொலிசாரை கேட்ட பொழுது, ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் மேலிடத்து உத்தரவு இல்லாமல் எதனையும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். ஆத்திர மடைந்த திரு கேஜ் ரிவால் மாநிலத்துக்கு பொலிஸ் அதி காரம் வேண்டும் மற்றும் இவ்வாறு அசமந்த போக்குடன் இருக்கும் பொலிசாரை பதவி விலக்கும்படியும் கோரி சாத்வீக போராட் டத்தை நடத்தினார். இது இந்தியாவில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் பொலிஸ் அதிகாரத்தை டில்லி மாநிலத்திற்கு வழங்க முடியாது என்று மத்திய அரசாங்கம் திட்டவடடமா கூறிவிட்டது. இந்த நிலை;ப்பாட்டுடன் உள்ள இந்தியா, இலங்கை போன்ற சிறிய நாட்டில் மாகாணங்களுக்கு குறிப்பாக வட மாகா ணத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடு ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? என்று இலங்கை வாழ் மக்கள் கேட்கின்றனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]