புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
தமிழ fm

தமிழ fm

உலகளாவிய ரீதியில் தமிழ் வானொலிகளின் தாய்வீடாய் அமைந்திருப்பது நமது நாடே. அன்று முதல் இன்று வரை நம் மொழியின் அருமை பெருமைகளை வானலையில் ஏற்றியது இலங்கையின் தமிழ் வானொலித்துறையே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக உலகில் பல்வேறு பகுதிகளிலும் பண்பலை மற்றும் இணைய வானொலிகள் பெருகியுள்ளன. அந்தவகையில் வானொலி ஒன்றின் சமூகக் கடப்பாட்டையும், மொழி காக்கும் உணர்வையும் உண்மையாய் வெளிப்படுத்தி, வர்த்தக வானில் சமூகத்தின் மீது சிரத்தை கொண்ட வானொலியாய், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ம் திகதி, நம் நாட்டின் வடமாகாணத்திற்கான ஒலிபரப்பை ஆரம்பித்தது தமிழ் எப்.எம் வானொலி. வடபுல உறவுகளின் பேரபிமானத்தைப் பெற்றுள்ள தமிழ் எப்.எம் தற்போது 107.8 பண்பலை வரிசையில் கிழக்கு, மத்திய, ஊவா, மேல், வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களுக்கான தனது ஒலிபரப்பை விஸ்தரித்தள்ளது.

24 மணி நேரமும் சேவையை வழங்கும் தமிழ் எப்.எம்., நடைமுறை தனியார் தமிழ் வானொலிகளிலி ருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிற தென தமிழ் எப்.எம் வானொலியை செவிமடுக்கும் நேயர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்போதுமே இனிமையான பழைய, புதிய, இடைக்கால மனது மறக்காத பாடல்கள் தொடர்ச்சியாக தமிழ் எப்.எம் இல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுமாத்திரமன்றி தனித்துவமான நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளன.

மனதுக்குப் பிடித்த இசையுடன் அறிவுபு+ர்வமான விடயங்களையும் அறியத்துடிக்கும் அனைவரும் தற்போது தமிழ் எப்.எம் உடன் ஒன்றிணைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அதிகாலை 5மணி முதல் 7மணி வரை மணியோசை’ஆன்மீக சிந்த னைகளுடன் நாள் முழுவதற்;குமான உற்சாகத்தை வழங்கி அன்றைய நாளை இனிதாய் ஆரம்பிக்கிறது.

காலை 7மணி முதல் 10மணி வரை ‘சிகரம்’ நிகழ்ச்சி மும்மொழிப் பத்திரிகைகளின் செய்திகளை வழங்குவதுடன் அறிவுபு+ர்வமான பல்வேறு தகவல்களையும் வழங்கி நிற்கிறது.

காலை 10மணி முதல் பகல் 1மணி வரை ‘ஸ்நேகமுடன்’ நிகழ்ச்சி, சினிமாத் தகவல்களுடன் பல சுவாரஸ்யமான விடயங்களையும் வாரி வழங்குகிறது.

பகல் 1 மணிமுதல் 3மணி வரை ‘விருந்தோம்பல்’ பாடல் பசியைத் தீர்க்கிறது.

பிற்பகல் 3மணி முதல் 5மணி வரை ‘ஆறாம் அறிவு’ அறிவுசார் சமூகத்தை கட்டியெழுப்பும் அற்புத நிகழ்ச்சியாகும்.

மாலை 5மணி முதல் இரவு 8மணி வரை ‘அந்திவானம்’ மாலை நேரத்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதுடன் நேயர்களின் விரும்பிய பாடல் தெரிவுகளையும் வழங்குகிறது.

இரவு 8மணி முதல் 9மணி வரை ‘சந்திரோதயம்’ நிலவின் குளிரில் இதமாய் மனதை வருடுகிறது.

இரவு 9மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை, வாரத்தின் 5நாட்களும் 5வௌ;வேறு உள்ளடக்கங்களைக் கொண்டு வரும் ‘பொக்கி'ம்’ உண்மையிலேயே பெறுமதிமிக்க பொக்கி'ம் தான்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை ‘ஆனந்தராகம்’ ஒலித்துக்கொண்டே இருக்கும்.

வாரத்தின் 5 நாட்களும் நேயர்களை தம்வசப்படுத்தியிருக்கும் மந்திர நிகழ்ச்சிகள் தான் இவை.

விரைவில் செய்திகளும், சனி ஞாயிறு தினங்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகளும் தமிழ் எப்.எம் இல் முத்திரை பதிக்கவிருக்கின்றன.

இலங்கையில் தனியார் தமிழ் வானொலித் துறையில் புரட்சிகர மாற்றமாகவே தமிழ் எப்.எம் அமைந்திருக்கிறது. பொதுவாக கேட்டு மகிழத்தான் வானொலி. ஆனால் தமிழ் எப்.எம் வெறுமனே கேட்டு மகிழ்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் அறிவையும் கட்டியெழுப்புகிறது.

வானொலித்துறையில் அனுபவமிக்க பரணியின் தலைமையில் ஆற்றல் அனுபவமிக்க அணியொன்று தமிழ் எப்.எம் நிகழ்ச்சிகளை படைக்கிறது.

முகுந்தன், கௌரி பிருந்தன், பிரதீப், சுமித், சரண்யா, சுபா'pனி ஆகியோருடன் தற்போது இன்னும் சில இளம் அறிவிப்பாளர்களும் இணைந்திருக்கிறார்கள்.

நாடளாவிய ரீதியிலான ஒலிபரப்பு விஸ்தரிக்கப்பட்டு இருப்பதால் விரை வில் தமிழ் எப்.எம், தமிழ் பேசும் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடிக்கும் என்பது திண்ணம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.