புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
அகில இலங்கை எம்.ஜp.ஆர்.மன்ற செயலாளர் இதிரிஸ{க்குப் பாராட்டு

அகில இலங்கை எம்.ஜp.ஆர்.மன்ற செயலாளர் இதிரிஸ{க்குப் பாராட்டு

தன்னலம் கரு தாது பிற ருக்கு உதவி கள் புரிந்து வாழ வேண்டும். கல்வி கற்றுவரும் சின்னஞ்சிறு, தம்பி தங்கைகளுக்கு, கல்வி வளர்ச்சிக்காக உதவிகள் செய்ய வேண்டும். தன்னால் உதவ முடியாது போனாலும் உதவிக்கரம் நீட்டும் வசதி படைத்தவர்களை நாடிச் சென்று, உதவிகள் பெற்று, வறிய சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவ வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்ட ஒரு ஜீவன்.

முன்னாள் தமிழக முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் நற்பண்புகளால் கவரப்பட்ட அந்த ஜீவன் எம்.ஜி.ஆர்.நாமத்தைப் போற்றி அவர் பெயரிலேயே மன்றம் அமைத்து 1972ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 42 ஆண்டுகாலமாக தொடர்ந்து, எம்.ஜி.ஆர்.அறிஞர் அண்ணா தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் “அம்மா பேரவை” நினைவு நாள் வைபவங்கள் என வருடமொன்றுக்கு சுமார் ஏழு, அல்லது எட்டு பொதுக் கூட்டங்களை கொழும்பில் நடத்தி மகிழ்ந்திடுவார்.

இத்தனைக்கும் அவர் வசதி படைத்த செல்வந்தர் அல்ல. ஆனாலும் நினைத்ததை நடத்தியே காண்பிக்கும் எம்.ஜி.ஆர் அவர்.

ஆமாம் இலங்கை எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அழைக்கப்படும், அ.இ.எம்.ஜி.ஆர் மன்ற பொதுச் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம்.இதிரிஸ் தான் அவர்! அண்மையிலே கலாசார அமைச்சின் அரச உயர்மட்ட விருதான கலாபூஷணம் விருது இவருக்கும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கலை, இலக்கிய உலகில் இவரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறிவிட முடியும். ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சமூகத்திலுள்ள பிரபல்ய மானவர்கள் அனைவருக்கும் இவர் நன்கு அறிமுகமானவர். பிரபல்யமாகத் திகழும் ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலருக்கும், இவரது எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் விழா எடுத்து பொன்னாடை போர்த்திக் கெளரவித்துள்ளார். அது மட்டுமல்ல மறைந்த கலைஞர்கள் பிரபல்யமானவர்கள் பலருக்கும் இவர் இரங்கல் கூட்டம் வைத்தும் கெளரவித்துள்ளார். வழமைபோல் மக்கள் திலகம் அமரர் எம்.ஜீ.ஆர். 97ஆவது பிறந்த தின விழா கடந்த வெள்ளிக்கிழமை (17.01.2014) கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் முக்கிய அம்சமாக 100 வறிய பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இவை பட்டக்கண்ணு உரிமையாளர் திரு.எஸ்.தியாகராஜா (ஜே.பி) அணுசரணையில் வழங்கப்பட்டன.

இவ்வைபவத்தில் அமரர் எம்.ஜி.ஆரின் நற்பண்புகளை நினைவு கூர்ந்து பலர் உரை நிகழ்த்தினார்கள், இங்கு அல்ஹாஜ் எஸ்.பி.சி.தாஸிம் (ஜே.பி) உரை நிகழ்த்துகையில், ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் நற்பண்புகளைப் பேசிக் கொண்டு வந்தார்.

திடீரென அவரது கவனம் இதிரீஸின் பக்கம் திரும்பியது. கடந்த 42 ஆண்டுகாலமாக தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு விழா எடுத்து நினைவுபடுத்தி வரும் இலங்கை இதிரீஸின் விடாமுயற்சியையும் பாராட்ட வேண்டும் என்றதோடு இதிரீஸ¤க்கு விரைவில் நாம் பாராட்டு விழாவொன்றை எடுக்க வேண்டும்... என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

எம்.ஜி.ஆரின் 97ஆவது ஜனன தின விழாவில் மன்றத் தலைவர் எஸ்.எச்.எம்.இதிரிஸ் உரையாற்றுகிறார். மாநகரசபை உறுப்பினர் மன்சில் முஹாஜீரின் பொன்னாடைப் போர்த்தி கெளரவிக்கப்படுகிறார். இதிரீஸின் சேவை நலன் பாராட்டு வைபவத்திற்கான நிதியை அல்ஹாஜ் எஸ்.பி.ஸி.தாஸிம் முத்தப்பன் செட்டியாரிடம் கையளிக்கின்றார். பாடசாலை சிறார்களுக்கான அன்பளிப்பை பட்டக்கண்ணு எஸ்.தியாகராஜா மற்றும் புரவலர் ஹாசிம் உமர் கையளிக்கின்றனர். (படங்கள் : ஏ.கே.விஜயபாலன்)

இந்த சந்தர்ப்பத்திலே “தேசமான்ய” “தேசசக்தி” டாக்டர் அப்துல் கையும் (ஜே.பி) எழுந்து நின்று,

இது அனைவரும் வரவேற்கத்தக்கதொரு விடயம், இதிரீஸ் பாராட்டப்பட வேண்டியவர்தான். இங்கே விழாமேடையில் இருப்பவர்கள் ஒன்றுபட்டு பாராட்டு விழாவை நடத்தியே ஆக வேண்டும். இதனைப் பேச்சோடு விட்டு விடாமல் எத்தனை நாட்களுக்குள் விழாவை நடத்தி முடிப்பது என்பதை இந்த விழா மேடையிலே முடிவாகக் கூறவும் வேண்டும் என்றார். இதே சந்தர்ப்பத்தில் மேடையில் இருந்த புரவலர் ஹாசிம் உமர், பாராட்டு விழாவை ஒருமாத காலத்துக்குள் நடத்தி முடிப்போம்.

அதற்கென இரண்டொரு தினங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவோம். அனைவரின் பங்களிப்புடன் இதிரீஸ¤க்கு பொற்கிளி வழங்கி கெளரவிப்போம் என்ற கருத்தை விழா மேடையிலே முன்வைத்தார்.

எதுவும் பேச்சளவிலே இருந்துவிடக் கூடாது செயலில் இறங்க வேண்டும் என்று கூறி மேலும் உற்சாகப்படுத்திய அல்ஹாஜ் எஸ்.பி.சி.தாஸிம் (ஜே.பி) “பொற்கிளி” பாராட்டு விழாவுக்கு முதல் நன்கொடையாக நான் இம்மேடையில் வைத்து 10, ஆயிரம் ரூபாவை, நம்பிக்கையான ஒரு நபரிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறி மேடையில் இருந்த முத்தப்பன் செட்டியாரிடம் நன்கொடை நிதியை ஒப்படைத்தார்.

பிரதிபலன் பாராமல், வறுமை நிலையிலும் பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து விழாக்கள் நடத்தி வந்த அகில இலங்கை எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நண்பர் இதிரிஸ¤க்குப் பொற்கிளியுடன் பாராட்டுவிழா வெகு விரைவில் கிடைக்கவிருக்கிறது என்ற நல்ல செய்தியை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.